For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகளை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்!

இங்கு நொதிக்க வைத்து உட்கொள்ளப்படும் உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

தற்போது மக்களிடையே பிட்சா, பர்கர், பாஸ்தா போன்ற உணவுகள் பிரபலமாக உள்ளது. அதிலும் பலர் இவற்றை காலை உணவாக சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் தான் இருப்பதிலேயே உடலை மிகவும் மோசமாக பாதிக்கக்கூடியவைகள்.

Health Benefits Of Fermented Foods

ஆனால் பாரம்பரியமாக நாம் சாப்பிட்டு வரும் இட்லி, தோசை போன்ற புளிக்க வைக்கப்படும் உணவுகளில் ஏராளமான நன்மைகள் உள்ளடங்கியுள்ளது என்பது தெரியுமா? இங்கு நொதிக்க வைத்து உட்கொள்ளப்படும் உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

தானியங்கள், பீன்ஸ் வகைகளை நொதிக்க வைக்கும் போது, அவற்றில் உள்ள பைட்டிக் அமிலம் உடைக்கப்படுகிறது. பொதுவாக பைட்டிக் அமிலம் கனிமச்சத்துக்கள் உறிஞ்சுவதைத் தடுத்து, உணவுகள் செரிமானமாவதைத் தடுப்பதுடன், அசிடிட்டிக்கான அபாயத்தையும் அதிகரிக்கும். ஆனால் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், செரிமானம் எளிதில் நடைபெறும் மற்றும் அந்த உணவில் உள்ள சத்துக்களும் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.

நன்மை #2

நன்மை #2

நொதிக்க வைத்த உணவுகளில் லேக்டோபேசில்லி உற்பத்தி செய்யப்படும். இது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்களான ஃபோலிக் அமிலம், நியாசின், தயமின், ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி கார்சினோஜெனிக் சேர்மங்களின் தொகுப்புகளுக்கு உதவும்.

நன்மை #3

நன்மை #3

உணவுகள் நொதிக்கும் போது, அதில் உற்பத்தி செய்யப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உணவுகளை முன்பே செரிக்கச் செய்யும். இதனால் புளிக்க வைத்த உணவுகளை உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே தான் செரிமான பிரச்சனை மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை இட்லி சாப்பிட சொல்கிறார்கள்.

நன்மை #4

நன்மை #4

உணவுகளை நொதிக்க வைத்து சாப்பிடும் போது, அந்த உணவுகளில் நொதிகள் மற்றும் லாக்டிக் அமிலங்களின் உற்பத்தி அதிகரித்து, உண்ணும் உணவுகள் எளிதில் உடைக்கப்பட்டு, உணவில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உடலால் உறிஞ்சப்படும்.

நன்மை #5

நன்மை #5

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது, குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் சீரான அளவில் இருந்தால், குடலியக்க பிரச்சனைகள் ஏதுமின்றி, குடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த வகையான உணவுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அசிடிட்டி போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Fermented Foods

Here are some reasons why you should not avoid fermented foods in the diet. Read on to know more...
Story first published: Monday, December 19, 2016, 9:35 [IST]
Desktop Bottom Promotion