For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினம் ஒரு தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள்!

By Maha
|

நெல்லிக்காயின் நன்மைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காய் ஏற்கனவே புளிப்பு என்பதால், அதனை தித்திக்கும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். நெல்லிக்காயை தேனில் ஊற வைப்பதால் சுவை மட்டுமின்றி, அதன் சக்தியும் இரண்டிப்பாகும்.

ஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

அதிலும் இதனை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். கடைகளில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் விற்கப்படுகிறது. இருப்பினும் இதனை வீட்டிலேயே செய்யலாம். அதற்கு ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதியளவு தேன் நிரப்பி அதில் நெல்லிக்காய்களைப் போட்டு மூடி வைக்க வேண்டும். சில நாட்கள் கழித்து பார்த்தால், நெல்லிக்காய் தேனில் நன்கு ஊறி மென்மையாக இருக்கும்.

பாலில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சரி, இப்போது தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் சுத்தமாகும்

கல்லீரல் சுத்தமாகும்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய், கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, கல்லீரல் சிறப்பாக செயல்பட்டு, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது மஞ்சள் காமாலைக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஆஸ்துமா மற்றும் இதர சுவாச பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், டாக்ஸின்கள் மற்றும் நுரையீரலை ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். இதனால் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

சளி, இருமல் மற்றும் தொண்டைக்கட்டு

சளி, இருமல் மற்றும் தொண்டைக்கட்டு

உங்களுக்கு சளி, இருமல் மற்றும் தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகள் இருந்தால், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயில் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து உட்கொண்டு வந்தால், மருத்துவ குணங்களால் கிருமிகள் அழிக்கப்பட்டு, இப்பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உண்ணும் உணவுகள் எளிதில் செரிக்கப்படுவதோடு, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

நச்சுக்கள் வெளியேறும்

நச்சுக்கள் வெளியேறும்

உங்கள் உடலில் தினமும் நச்சுக்கள் அதிகம் சேரும். அப்படி சேரும் நச்சுக்களை அன்றாடம் வெளியேற்ற நினைத்தால், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து உட்கொண்டு வாருங்கள். இதன் மூலம் உடலில் தீங்கு விளைவிக்கும் ப்ரீ-ராடிக்கல்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கும்

மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கும்

தினமும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனையைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தடுக்கப்படும் மற்றும் மாதவிடாய் சுழற்சியும் சீராக்கப்படும்.

அல்சர்

அல்சர்

அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர வேண்டும். மேலும் இதை உட்கொண்ட ஒரு மணிநேரத்திற்கு எதையும் உட்கொள்ளக்கூடாது. இப்படி தினமும் தொடர்ந்து செய்து வர, விரைவில் அல்சர் குணமாகும்.

இரத்தணுக்கள் அதிகரிக்கும்

இரத்தணுக்கள் அதிகரிக்கும்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும். உடலில் இரத்தணுக்களின் அளவு அதிகரித்தால், இரத்த சோகை வராமல் இருப்பதோடு, உடலின் அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமாக செயல்படும்.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் எளிமையான ஓர் தீர்வு. அதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் உட்கொண்டு வர, அதில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

தினமும் காலையில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தேனுடன் உட்கொண்டு வந்தால், முதுமை தள்ளிப் போகும். இது உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளையும் இது நீக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating Amla Soaked In Honey

Here are amazing health benefits of honey soaked amla concoction. Know the secrets of youth and good helath in honey soaked amla. Read on to know more.
Desktop Bottom Promotion