For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே மாதத்தில் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா?

|

உங்களுக்கு அடிக்கடி மூட்டுகளில் வலி அல்லது பிடிப்புக்கள் ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் எலும்புகள் பலவீனமாக உள்ளதென்று அர்த்தம். மனித உடலின் அடித்தளமே மனித எலும்பு அமைப்பு தான். அது தான் உடலியக்கம் மற்றும் உறுப்புக்களின் பாதுகாப்பு போன்ற பல்வேறு முக்கிய செயல்பாடுகளை ஆதரிக்கிறது.

மேலும் எலும்பு அமைப்பு தான் இரத்த செல்களின் உற்பத்திக்கும், கனிமச்சத்துக்களின் சேமிப்பு போன்றவற்றிற்கு பொறுப்பாக உள்ளது. எலும்புகள் தான் முக்கிய உறுப்புக்களான மூளை, இதயம், நுரையீரல் போன்றவற்றிற்கு பாதுகாப்பை அளிக்கிறது.

Have You Heard Of This Homemade Recipe For Stronger Bones??

அத்தகைய எலும்பு அமைப்பானது மோசமான டயட், உடற்பயிற்சியின்மை, நோய்த்தொற்றுகள், பரம்பரை போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும். எலும்புகள் பலவீனமாக ஆரம்பிக்கும் போது, சிறு வேலைகளைக் கூட செய்ய முடியாத அளவில் துன்பத்தை உணரக்கூடும்.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்போம். ஆனால் உங்கள் எலும்புகள் வேகமாக வலிமையடைய வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பானத்தை தினமும் பருகி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

எள் - 1 டேபிள் ஸ்பூன்

பூசணி விதைகள் - 1/2 டேபிள் ஸ்பூன்

தேன் - 2 டேபிள் ஸ்பூன்

பால் - 1 கப்

செய்முறை:

* பூசணி விதைகள் மற்றும் எள்ளை மிக்ஸியில் போட்டு ஒன்றாக போட்டு, மென்மையாக அரைத்து பவுடர் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி சூடேற்றி, இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த பாலில் அரைத்து வைத்துள்ள பவுடரை சேர்த்து, தேன் கலந்து பருக வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் காலை உணவு உட்கொண்ட பின் பருக வேண்டும்.

English summary

Have You Heard Of This Homemade Recipe For Stronger Bones??

Try this natural homemade recipe that can make you bones stronger within days of use and it can also cure joint pain..
Story first published: Tuesday, June 21, 2016, 14:11 [IST]
Desktop Bottom Promotion