For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகள் உடல் வறட்சியைத் தீவிரமாக்கும் என்பது தெரியுமா?

By Maha
|

கோடையில் உடல் வறட்சி நிறைய பேருக்கு ஏற்படும். இதனால் ஏராளமான மக்கள் அதிகமாக மயக்கமடைவதுடன், மருத்துவமனையில் எல்லாம் சேர்க்கப்படும் அளவில் மோசமான நிலையை அடைவார்கள். ஏனெனில் பலருக்கு உடல் வறட்சி தீவிரமானால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரியாமல் இருப்பது தான்.

மேலும் பலர் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கிறேன் என்று கோடையில் தாகம் மற்றும் உடல் வறட்சியை தீவிரமாக்கும் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை தவறாக அளவுக்கு அதிகமாக எடுப்பார்கள்.

அப்படி தவறாக நாம் எடுத்து வரும் உணவுகள் என்னவென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கோடையில் அந்த உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எனர்ஜி பானங்கள்

எனர்ஜி பானங்கள்

ஜிம் செல்வோர் தாகத்தைத் தணிப்பதற்கு அதிகம் எடுக்கும் ஓர் பானம் தான் எனர்ஜி ட்ரிங்க்ஸ். ஆனால் உடல் ஆற்றலை அதிகரிக்கும் பானம் என்று சொல்லி விற்கப்படும் இந்த பானத்தை அதிகம் குடிப்பதால் உடல் வறட்சி தான் உண்டாகும். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, குடலில் ஆஸ்மாடிக் அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும்.

குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் உணவுகள்

குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் உணவுகள்

எடையைக் குறைக்க நினைப்போர் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளைத் தான் அதிகம் உண்போம். ஆனால் இப்படி கார்போஹைட்ரேட் குறைவான டயட்டை அதிகம் மேற்கொண்டால் உடல் வறட்சி தான் ஏற்படும். ஏனெனில் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இது நீர் இழப்பை உண்டாக்கும். எனவே நீங்கள் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை அதிகம் எடுப்பவராயின், குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

அதிகப்படியான புரோட்டீன் டயட்

அதிகப்படியான புரோட்டீன் டயட்

உடல் வறட்சியை ஏற்படுத்தும் விஷயங்களில் புரோட்டீன் உணவுகளை அதிகமான அளவில் எடுப்பதும் ஒன்று. எப்போதும் நாம் எடுக்கும் கார்போஹைட்ரேட்டிற்கு இணையான அளவில் தான் புரோட்டீனை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் வறட்சியை அதிகரிக்கும். குறிப்பாக புரோட்டீன் பானங்களை அதிகம் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி குடித்தாலும், குடிக்கும் நீரின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்தால், சிறுநீர் கழிக்கும் அளவு அதிகரித்து, அதனால் உடல் வறட்சி ஏற்படக்கூடும். எனவே நீங்கள் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதாக இருந்தால், அளவாக குடியுங்கள்.

காபி

காபி

காபியும் சிறுநீர் பெருக்கியாகும். அளவுக்கு அதிகமாக காபி குடித்தால், அதனால் உடலில் இருந்து நீர் வெளியேறி, உடல் வறட்சி, தலைவலி போன்றவை ஏற்படும். எனவே ஒரு நாளைக்கு 1-2 கப் காபிக்கு மேல் குடிக்காதீர்கள்.

உப்புள்ள உணவுகள்

உப்புள்ள உணவுகள்

அதிகப்படியான சோடியம் உடலில் தக்கவைக்கப்படும் நீரின் அளவில் இடையூறை உண்டாக்கி, உடல் வறட்சியை ஏற்படுத்தும். எனவே உப்புள்ள உணவுகளை அதிகமாக எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

நன்கு வறுத்த உணவுகள்

நன்கு வறுத்த உணவுகள்

உங்களுக்குத் தெரியுமா எண்ணெயில் நன்கு வறுத்த உணவுகளை உண்ட பின் தொண்டை வறட்சியடைந்து, தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தோன்றும். அப்படி இருக்கையில், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால், உடல் வறட்சி ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Cause Severe Dehydration

Dehydration is a major concern, especially during summer, and many people end up in hospital or bed-ridden, mainly because they are unaware about what could cause severe dehydration. Here we listed some food items and habits can leave you severely dehydrated.
Desktop Bottom Promotion