For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை வியாதி இருக்கா? அப்போ தடுப்பூசி போட்டுக்கோங்க

|

சர்க்கரை வியாதி வந்தால் அது இதயத்தை பாதிக்கிறது. இதய வியாதிகளும், ஸ்ட்ரோக்கும் வருவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை வியாதியினால் அவதிப்படுபவர்கள்

ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டால் இதய நோய்களும் ஸ்ட்ரோக்கும் வராமல் தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஃப்ளூ தடுப்பூசி போட்டுக் கொண்ட சர்க்கரை வியாதிகாரர்களுக்கு, இதய நோய்களின் தாக்கத்தினால் உண்டாகும் இறப்பினை 25 சதவீதம் தடுக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Flu vaccination may cut heart failure risk in Diabetes

ஒவ்வொரு வருடமும் ஃப்ளூ காய்ச்சலால் இறப்பின் விகிதம் அதிகரித்து வருகின்றது. அதுவும் இது போன்ற சர்க்கரைவியாதியினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் ஃப்ளூ காய்ச்சலால் அதிகரித்துவருகின்றது.

ஃப்ளூ தடுப்பூசியினை சர்க்கரை வியாதிக்காரர்கள் போடுவதால் நிறைய பலன்கள் தருகின்றது. அது இதய நோய், ஸ்ட்ரோக்கினால் உண்டாகும் இறப்பினை தடுப்பதோடு, ஃப்ளூ காய்ச்சலையும் வராமல் தடுக்கிறது என்று லண்டனிலிலுள்ள இம்பீரல் கல்லூரியின் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான வமோஸ் கூறியிருக்கிறார்.

சர்க்கரை வியாதி என்பது ஒரு குணப்படுத்த முடியாத ஹார்மோன் குறைபாடாகும். சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அது இதய வியாதிகளையும் ஸ்ட்ரோக்கும் வருவதற்க்கு வாய்ப்பளித்துவிடும்.

கடந்த 2004- 2010 வரை சுமார் 124,503 சர்க்கரை வியாதிகளுக்கு ஆராய்ச்சி செய்தனர். 65 சதவீத சர்க்கரை வியாதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஸ்ட்ரோக்கினால்.

மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் குறைவாக இருந்தது. அதேபோல் இதய நோய்களின் பாதிப்பும் 22 சதவீதம் குறைவாக இருந்தது. அதேபோல் நிமோனியா மற்றும் கொடிய வைரஸ் காய்ச்சல்களால் வந்த இறப்பும் குறைவாக இருந்தது.

இது தொடர்பான விரிவான கட்டுரை கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Flu vaccination may cut heart failure risk in Diabetes

Flu vaccination reduces heart failure risk in Diabetes
Story first published: Saturday, July 30, 2016, 9:11 [IST]
Desktop Bottom Promotion