For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் காலையில் வெந்தயம் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்!

By Maha
|

அன்றாடம் நாம் சமையவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நாம் சேர்க்கும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தரும். அதே சமயம் நம் உடல் நலத்திற்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும் ஓர் பொருளும் கூட.

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வெந்தய விதைகள் மட்டுமின்றி, வெந்தய கீரையும் இத்தகைய நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. எனவே அன்றாடம் சமைக்கும் போது சமையலில் வெந்தயத்தை சிறிது சேர்த்துக் கொள்வதோடு, அடிக்கடி வெந்தயக் கீரையையும் சமைத்து சாப்பிடுங்கள்.

நட்ஸ்களை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா?

இங்கு அன்றாட உணவில் வெந்தயத்தை சேர்த்து வருவதன் மூலம் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருகினாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் நிறைய பேருக்கு உள்ளது. அத்தகைய கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை வெந்தயம் போக்கும். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தில் உள்ள உட்பொருட்கள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதற்கு வெந்தயத்தில் உள்ள ஸ்டெராய்டல் சாப்போனின்கள் தான் காரணம். இவை தான் கெட்ட கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

உங்கள் வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் உங்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் தினமும் வெந்தயத்தை சமையலில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே இதய பிரச்சனைகள் அதிகம் வருகிறது. இதனைத் தவிர்க்க வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம், சோடியத்தின் செயல்பாடுகளைக் குறைத்து, இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.

தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல்

தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல்

வெந்தயம் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். எனவே உங்களுக்கு இப்பிரச்சனைகள் இருக்கும் போது, சிக்கன் சூப்பில் வெந்தயத்தை பொடி செய்து சேர்த்து குடியுங்கள், இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எடை குறையும்

எடை குறையும்

உடல் எடையால் கஷ்டப்பட்டு வருபவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்ததும் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இதனால் உங்கள் பசி கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது குறையும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், வெந்தயத்தை உணவில் சேர்த்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள டையோஸ்ஜெனின், தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டும்.

மாதவிடாய் கால அவஸ்தைகள்

மாதவிடாய் கால அவஸ்தைகள்

பெண்கள் வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து விடுபடலாம். எனவே உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, தசைப் பிடிப்புகள் போன்றவை அதிகம் இருந்தால், இந்த வழியை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய்

வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களான சாப்போனின்கள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றச் செய்து, குடல் புற்றுநோயில் இருந்து நம்மை விலகி இருக்கச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Reasons To Include Methi In Your Food

Take a look at the reasons as to why you to need to include methi in your food. As there are several benefits of eating fenugreek.
Desktop Bottom Promotion