For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலின் ஸ்டாமினாவை உடனடியாக அதிகரிக்க உதவும் பானங்கள்!

By Maha
|

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவரா? அப்படியெனில் உங்களுக்கு நல்ல அளவில் ஸ்டாமினா இருக்க வேண்டும். ஆனால் சிலர் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தாலே விரைவில் களைப்படைந்துவிடுவார்கள். மேலும் இப்படி களைப்பு அடையாமல் இருக்க, கடைகளில் விற்கப்படும் எனர்ஜி பானங்களைப் பருகுவார்கள்.

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

ஆனால் இந்த எனர்ஜி பானங்களால் தற்காலிகமாக உடலின் ஸ்டாமினா அதிகரிக்குமே தவிர, அதனை தினமும் பருகி வந்தால், அதனால் பல மோசமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்க கண்ட பானங்களை வாங்கிப் பருகாமல், இயற்கையாக வீட்டிலேயே ஒருசில பானங்களைத் தயாரித்துப் பருகுங்கள்.

உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

இங்கு உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும் சில இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து அவற்றை தினமும் பருகி உங்கள் ஸ்டாமினாவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லேட் மில்க் ஷேக்

சாக்லேட் மில்க் ஷேக்

சாக்லேட் மில்க் ஷேக்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், கொழுப்புக்கள் குறைவாகவும் உள்ளது. எனவே ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும்.

நன்மைகள்

நன்மைகள்

சாக்லேட் மற்றும் பாலில் ஆற்றல் அதிகம் நிறைந்துள்து. எனவே இவற்றைப் பருகினால் உடற்பயிற்சியின் போது தேவையான ஆற்றல் கிடைத்து, கலோரிகள் அதிகம் எரிக்கப்படும்.

வேர்க்கடலை வெண்ணெய் வாழைப்பழ ஸ்மூத்தி

வேர்க்கடலை வெண்ணெய் வாழைப்பழ ஸ்மூத்தி

வேர்க்கடலை வெண்ணெய் வாழைப்பழ ஸ்மூத்தியானது வாழைப்பழம், பாதாம் பால், வேர்க்கடலை வெண்ணெய் போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுவதால், இதனைப் பருகினால் உடலுக்கு ஆற்றல் அதிகம் கிடைப்பதோடு, அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசிய சத்தும், கலோரிகளும் உள்ளது. இருப்பினும் வேர்க்கடலையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், இதர சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதனை பருகுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருகினால், உடலுக்கு போதிய அளவு சக்தி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் செயல்பட உதவும். மேலும் ஆய்வு ஒன்றில் பீட்ரூட் ஜூஸ் பருகாதவர்களை விட, பருகுவோர் 16 சதவீதம் அதிகமாக உடற்பயிற்சி செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

வாழைப்பழ மில்க் ஷேக்

வாழைப்பழ மில்க் ஷேக்

வாழைப்பழ மில்க் ஷேக்கில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. ஆகவே உடற்பயிற்சி செய்வோர் ஒரு டம்ளர் வாழைப்பழ மில்க் ஷேக்கை பருக, உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, நீண்ட நேரம் உடலில் ஆற்றல் தக்க வைக்கப்படும்.

தண்ணீர்

தண்ணீர்

முக்கியமாக தண்ணீரை விட ஸ்டாமினாவை வழங்கும் சிறந்த பானம் வேறும் எதுவும் இல்லை. தண்ணீர் தசைகளையும், உடலையும் வறட்சி அடையவிடாமல் நன்கு ஈரத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். ஆகவே உடலில் ஸ்டாமினாவைத் தக்க வைக்க தினமும் அடிக்கடி தண்ணீரைப் பருக வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஊட்டச்சத்துகளின் ஊற்றாய் விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!!

English summary

Drinks To Boost Your Stamina More Quickly Than You Know

Here are some juice to instantly boost stamina. Read on to know more...
Desktop Bottom Promotion