For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூன்றே நாட்களில் குடலை சுத்தம் செய்வது எப்படி?

|

செரிமான மண்டலத்தின் ஒரு பாகம் தான் குடல். உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை குடல் தான் உறிஞ்சும். ஒருவரது குடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போது தான் உட்கொண்டு வரும் ஆரோக்கியமற்ற உணவுகளால் குடல் சுவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவதோடு, குடலில் நச்சுக்களின் தேக்கமும் அதிகரிக்கிறது.

மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

ஒருவரது குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அதனால் நாம் நினைத்துப் பார்க்க முடியாதவாறான பல சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும். ஆகவே ஒருவர் தங்களது குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட வேண்டும்.

மோசமான குடலியக்கத்தால் குடல் புற்றுநோய் வராமல் இருக்க சில டிப்ஸ்....

குடலை சுத்தம் செய்ய உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் தான் உதவும். இப்போது நாம் குடலை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை வழிகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இங்கு ஒருசில பானங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பானங்களை தினமும் பருகி வந்தால், குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

சிறிது ஆப்பிளை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து, பருக வேண்டும். பின் 30 நிமிடம் கழித்து ஒரு டம்ளர் நீரைப் பருக வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை இச்செயலைப் பின்பற்றலாம். ஆனால் இச்செயலை தொடர்ந்து 2-3 நாட்களில் பின்பற்றினால், குடல் வேகமாக சுத்தமாகும். ஆனால் குடலை சுத்தம் செய்ய இந்த முறையை முயலும் போது திட உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

வழி #2

வழி #2

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி செய்தால், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு, குடலியக்கம் சீராக செயல்படும். மேலும் குடலும் சுத்தமாகும்.

வழி #3

வழி #3

குடலை சுத்தம் செய்ய முயலுபவர்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான ராஸ்ப்பெர்ரி, பேரிக்காய், ஆப்பிள், பட்டாணி, ப்ராக்கோலி, தானியங்கள், நட்ஸ், விதைகள், பீன்ஸ் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இதனால் இந்த உணவுகளில் உள்ள நார்ச்சத்து, குடலை சுத்தம் செய்து, நச்சுமிக்க டாக்ஸின்களை வெளியேற்றி, குடலியக்கத்தை மேம்படுத்தும்.

வழி #4

வழி #4

குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், குடலில் நகராமல் தேங்கியுள்ள கழிவுகள் மென்மையாக்கப்பட்டு வேகமாக வெளியேற்றப்படும். குடலில் இருந்து கழிவுகள் வேகமாக வெளியேற்றப்பட்டால், குடல் ஆரோக்கியம் தானாக மேம்படும். எனவே தினமும் தவறால் 3 லிட்டர் தண்ணீரைப் பருகுங்கள்.

வழி #5

வழி #5

இஞ்சி வயிற்று உப்புசத்தை மட்டுமின்றி, குடலின் செயல்பாட்டையும் தூண்டி, குடலில் நச்சுக்கள் தேங்குவதைத் தடுக்கும். அதற்கு வெதுவெதுப்பான நீரில், இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் 2-3 முறை பருக வேண்டும். இல்லாவிட்டால் இஞ்சி துண்டை வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்கலாம். ஆனால் இச்செயலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பின்பற்றக்கூடாது.

வழி #6

வழி #6

குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது 3 நாட்களுக்கு பதப்படுத்தப்பட்ட ஆரோக்கியமற்ற உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் காய்கறிகளான கேரட், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, தக்காளி, வெள்ளரிக்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகளில் பிடித்ததை அரைத்து சாறு எடுத்து, அதனை தினமும் பலமுறை பருக வேண்டும். இதனாலும் குடல் சுத்தமாகும்.

வழி #7

வழி #7

கற்றாழை ஜூஸ் அல்லது ஜெல்லை ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலந்து, 2-3 மணிநேரம் கழித்து அதனைப் பருக வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, குடலின் ஆரோக்கியம் மேம்படும்.

வழி #8

வழி #8

தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் மற்றும் நல்ல பாக்டீரியா, குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் தயிரில் கால்சியம் வளமாக உள்ளதால், இது குடலில் வளரும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, குடல் பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே குடல் சுத்தமாக வேண்டுமானால், தினமும் தயிரை ஒரு கப் உட்கொண்டு வாருங்கள்.

வழி #9

வழி #9

ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்து ஆளி விதையை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலை உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் மற்றும் இரவு படுப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் என இருவேளை பருக வேண்டும். இதனாலும் குடல் சுத்தமாவதோடு, ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

வழி #10

வழி #10

1 கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை பருகி வந்தால், குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, குடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Home Remedies for Colon Cleansing

Your colon plays a very important role in maintaining proper water balance and digestive processes. This article will give you many tips and remedies to safely cleanse your colon.
Desktop Bottom Promotion