For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் பார்வை குறைபாட்டிற்கு தீர்வு தரும் தேன்!

|

இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் முதலில் பாதிக்கப்படுவது நமது கண்கள் தான். ஸ்மார்ட் மொபைல்கள் நமது கைகளில் தவழும் போதே கண் பார்வை குறைபாடு இவ்வளவு இருக்கிறது.

தற்போதே அதிகரித்து வரும் முகமூடி போல மொபைலை கண்முன் மாட்டிக் கொண்டு படம் பார்க்கும் தொழில்நுட்பம் வளர தொடங்கினால் சொல்லவே வேண்டாம், தெருவிற்கு தெரு கண் மருத்துவர்களும் அதிகரித்து விடுவார்கள்.

கண்களின் நிறத்தை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அறிவது எப்படி?

நீங்கள் என்றாவது யோசித்து உண்டா... ஸ்மார்ட் போன்கள் அதிகரிக்க தொடங்கிய அதே நேரத்தில் தான் நமது ஊர்களில் கண் மருத்துவமனைகளும் அதிகரித்தன.

தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தொழில்நுட்ப கில்லாடிகள் தங்கள் குழந்தைகள் அதனுடன் ஒட்டிக்கொள்ள விடுவதில்லை. கேட்டால், அவர்களது மூளை மங்கிவிடும், படைப்பாற்றல், கற்பனை இல்லாமல் போய்விடும் என்கிறார்கள்.

கண் பிரச்சனைகளுக்கு வைட்டமின் சார்ந்த ஆரோக்கிய நலன் மற்றும் பலன்கள்!!

ஆனால், நாமோ குழந்தை ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை முகநூலில் பதிவு செய்து லைக் வாங்க ஆசைப்படுகிறோம். சரி வாருங்கள் இனி தேன் எப்படி கண் பார்வை குறைபாட்டை சரி செய்கிறது என காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்

பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்நடத்திய ஆய்வில், தேன் கண்பார்வை குறைபாட்டை சரி செய்ய தீர்வளிக்கிறது என கண்டறியப்பட்டது.

பண்டையக் காலம்

பண்டையக் காலம்

பண்டைய காலம் முதலே, தேனை பல வகைகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தி வந்துள்ளனர். முக்கியமாக இந்தியா மற்றும் எகிப்து பகுதிகளில்.

ஃபஸூரியம் (Fusarium)

ஃபஸூரியம் (Fusarium)

ஃபஸூரியம் என்பது ஓர் ஃபங்கஸ் இது கண் பார்வையை பறிக்கும் குணமுடையது, ஏன் உயிரையும் கூட சில நேரங்களில் பறித்துவிடும் இந்த ஃபங்கஸ். கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் இதை அழிக்கும் திறன் கொண்டது தேன் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டி-ஃபங்கஸ்

ஆண்டி-ஃபங்கஸ்

சில ஆண்டி-ஃபங்கஸ் பொருட்களை விட தேன் சிறந்து விளங்குகிறது. உடலில் உள்ள நச்சுக்களை போக்கவும் இது ஓர் சிறந்த உணவாக திகழ்கிறது என ஆய்வாளர் ஜெயின் ஹபீப் அல் (Zain Habib Alhindi) கூறியுள்ளார்.

நாள்பட்ட நோய்கள்

நாள்பட்ட நோய்கள்

மேலும் தேன் நாள்பட்ட நோய்கள் அல்லது உடல்நலக் கோளாறுகளை சரி செய்யும் திறன் கொண்டுள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு மண்டலம்

நோய் எதிர்ப்பு மண்டலம்

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிப்பதில் தேன் ஓர் சிறந்த உணவாக இருந்து வருகிறது. இது நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. தேனில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் செரிமானத்தை சரி செய்யும் திறன் கொண்டது.

புற்றுநோய்

புற்றுநோய்

புற்றுநோயை எதிர்த்து போராடும் திறன் கொண்டது தேன். இது கட்டிகளை வளர விடாமல் தடுக்கிறது.

காயங்கள்

காயங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் தேன், காயங்கள் சீக்கிரம் ஆறவும், சீழ் பிடிக்காமல் இருக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did You Know That Honey Can Save You From Blindness

Researchers discovered a powerful link between Surgihoney -- a medicinal type of honey and the destruction of Fusarium -- a fungus that can cause blindness or even death.
Desktop Bottom Promotion