For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் உடலில் அழுக்கு அதிகம் உள்ளதை வெளிப்படுத்துகிறது என்பது தெரியுமா?

By Maha
|

ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ளவும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக இச்செயல்களைப் பின்பற்றினால் மட்டும் உடலில் டாக்ஸின்கள் இருக்காது என்பதில்லை.

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் புகழ்பெற்ற மற்றும் சிறப்பான 7 உணவுகள்!!!

நம் சுற்றுச்சூழலில் மாசுக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், என்ன தான் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தாலும், பல வழிகளில் நம் உடலினுள் நச்சுக்கள் சேரத் தான் செய்யும்.

உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!!

மனித உடல் சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் மற்றும் வியர்வையின் வழியே இயற்கையாக சுத்தம் செய்யப்படுகிறது. இருப்பினும் சில டாக்ஸின்கள் உடலிலேயே தங்கி பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!

நம் உடலில் டாக்ஸின்கள் அதிக அளவில் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிகுந்த சோர்வு

மிகுந்த சோர்வு

எப்போதும் உடலில் ஆற்றல் குறைவாக இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால், உங்கள் உடலில் டாக்ஸின்கள் அதிக அளவில் உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான நேரத்தில் அதிகாலையில் உடலை சுத்தம் செய்ய உதவும் பானங்களைப் பருகுவதன் மூலம், உடல் சுத்தமாகி, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தலைவலி

தலைவலி

காரணமின்றி அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியெனில் உங்கள் உடலில் அழுக்கு அதிகமாக தேங்கியுள்ளது என்று அர்த்தம். எனவே தலைவலி அடிக்கடி வந்தால், வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, உடலை சுத்தம் செய்யும் வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள்.

பித்தப்பை பிரச்சனைகள்

பித்தப்பை பிரச்சனைகள்

அதிக கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பின், வயிற்றில் ஒருவித வலியை உணரக்கூடும். அப்படி நீங்கள் உணர்ந்தால், உங்கள் உடலில் அழுக்கு அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். வயிற்று வலி ஒருவருக்கு ஏற்படுமாயின் அதற்கு உடலில் தேங்கியுள்ள அழுக்குகளும் ஓர் காரணம். மேலும் கல்லீரலின் செயல்பாடு கடினமாகி, கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீரின் அடர்த்தி அதிகரித்து, பித்தப்பையில் தங்கி, அதனால் பித்தக்கற்கள் உருவாகி வலியை சந்திக்கக்கூடும்.

சைனஸ் நெரிசல்

சைனஸ் நெரிசல்

நச்சுமிக்க டாக்ஸின்கள் மற்றும் கெமிக்கல்களை அதிகம் சுவாசிப்பதன் மூலம், சைனஸ் நெரிசல் ஏற்பட்டு, உடலினுள் நச்சுக்கள் அதிகம் உள்ளதென்பதை வெளிப்படுத்தும்.

உடல் வெப்பம்

உடல் வெப்பம்

அதிகப்படியான உடல் வெப்பத்தை உணர்வது, உங்கள் இதயம் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதையும், உடலில் உள்ள அதிகளவு டாக்ஸின்கள் உள்ளதென்பதையும் குறிக்கும். எனவே நீங்கள் உடல் வெப்பமாக இருப்பதை உணர்ந்தால், உடனே உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

மஞ்சள் அல்லது வெள்ளை நாக்கு

மஞ்சள் அல்லது வெள்ளை நாக்கு

உங்களது நாக்கு மஞ்சள் அல்லது வெள்ளைப் படலத்துடன், வாய் துர்நாற்றத்துடனும் இருந்தால், உங்கள் உடலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். உங்கள் உடல் சுத்தமாக இருந்தால், நாக்கு எப்போதும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

அடிவயிற்று கொழுப்பு

அடிவயிற்று கொழுப்பு

அதிக உணர்ச்சிவசப்படுதல், மன அழுத்தம், மன கவலை மற்றும் அன்றாட சில பிரச்சனைகளால் உடலினுள் டாக்ஸின்களின் அளவு அதிகரிக்கும். இந்த டாக்ஸின்கள் இரத்த குளுக்கோஸ் அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் உடலின் மெட்டபாலிசத்தில் இடையூறு ஏற்பட்டு, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரிக்கும்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

வறட்சியான சருமம், சரும அரிப்பு, முகப்பரு போன்றவைகளும் உடலினுள் டாக்ஸின்கள் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்தும். அம்மாதிரியான நேரத்தில் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரியுங்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

தூக்கத்தின் போது மெலடோனின் வெளியிடப்பட்டு, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். ஆனால் உடலில் அழுக்குகள் அதிகம் இருந்தால், இந்த மெலடோனின் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டு, அதனால் சரியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும். ஆகவே உங்களுக்கு தூக்கம் சரியாக வராவிட்டால், உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Detoxify Your Body Immediately If You Notice Any Of These Warning Signs

There are 9 signs that indicate that your body has excess toxins and you need to cleanse it as soon as possible. Read on to know more...
Desktop Bottom Promotion