For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்த வெச்சே, எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கு-ன்னு தெரிஞ்சுக்கலாம்!

நமது சருமத்தில் உண்டாகும் மாற்றங்களை வைத்து நமது உடலில் உண்டாகும் கோளாறுகள் என்னவென்று நம்மால் அறிய முடியும்.

|

நமது உடலில் அமைந்திருக்கும் மிகப் பெரிய உடல் உறுப்பு நமது சருமம் தான். நமது சருமத்தில் உண்டாகும் மாற்றங்களை வைத்து நமது உடலில் உண்டாகும் கோளாறுகள் என்னவென்று நம்மால் அறிய முடியும். இது குறித்து ஓர் சீனா உடல்நல மேப் ஒன்றும் இருக்கிறது.

சீனர்கள் உடலில் இருக்கும் பல்வேறு உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கும், முக சருமத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் மாற்றத்திற்கும் தொடர்பு உடையதாக நம்புகிறார்கள்.

முகத்தில் ஒரு சில இடத்தில் மட்டும் பருக்கள் உண்டாவது, சரும நிறம் மாறுதல், சருமம் தடித்தல் போன்றவற்றை வைத்து நமது உடலில் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகிறது என்பதை அறியலாம் என கருதுகின்றனர்.

இனி, முக சருமத்தில் எந்தெந்த பகுதியில் மாற்றங்கள் உண்டானால், உடலின் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகியிருக்கலாம் என்றும், அதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் என்ன என்பதை குறித்தும் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெற்றி

நெற்றி

தொடர்பு: சிறுநீரக பை மற்றும் சிறுகுடல்

காரணம்: அதிக கொழுப்பு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு உண்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, சர்க்கரை, ஆல்கஹால் போன்றவை அஜீரணத்தை உண்டாக்கும்.

தீர்வு: நிறைய தண்ணீர் பருகுங்கள், ஆல்கஹாலை தவிர்த்துவிடுங்கள், நன்கு தூங்குங்கள்.

 புருவங்களுக்கு மத்தியில்

புருவங்களுக்கு மத்தியில்

தொடர்பு: கல்லீரல்

காரணம்: அதிகளவில் இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, வயிற்றுக்கு அதிக வேலை கொடுப்பது, சரியான அளவு ஓய்வு எடுக்காமல் இருப்பது.

தீர்வு: பசுமை உணவுகள் உண்ணுங்கள், தியானம், யோகா செய்யுங்கள், வேகமாக நடக்கும் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

புருவங்கள்

புருவங்கள்

தொடர்பு: சிறுநீரகம்

காரணம்: இதய நலன் குறைபாடு, இரத்த ஓட்டம் சீரின்மை, அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது மற்றும் புகைப்பது

தீர்வு: மதுவை தவிர்த்துவிடுங்கள், காபி அதிகம் குடிக்க வேண்டாம், நிறைய தண்ணீர் குடியுங்கள்.

மூக்கு

மூக்கு

தொடர்பு: இதயம்

காரணம்: வாயுத்தொல்லை, இரத்த ஓட்டம் சீரின்மை, குமட்டல், மாசுப்பட்ட காற்று சுவாசித்தல், அதிக இரத்த அழுத்தம்.

தீர்வு: அடிக்கடி இரத்த அழுத்த பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், கிரீன் டீ பருகுவதால் நச்சுக்களை போக்க முடியும். மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

 கன்னங்களுக்கு மேல்

கன்னங்களுக்கு மேல்

தொடர்பு: நுரையீரல்

காரணம்: புகை பழக்கம், ஆஸ்துமா, மாசுப்பாடு

தீர்வு: புகையை தவிர்த்துவிடுங்கள், காற்று மாசுப்பட்டுள்ள இடத்தில் இருப்பதை தவிர்த்துவிடுங்கள். இன்றிலிருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.

கன்னம்

கன்னம்

தொடர்பு: நுரையீரல் மற்றும் சிறுநீரகம்

காரணம்: தவறான உணவு முறை, அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்வது, மிகையாக புகைப்பது.

தீர்வு: துரித உணவுகளை தவிர்க்க வேண்டும், காஸ்மெடிக் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.

 வாய் மற்றும் கீழ் தாடை

வாய் மற்றும் கீழ் தாடை

தொடர்பு: வயிறு

காரணம்: கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது, ஆல்கஹால், அதிகமாக காபி பருகுவது, மன அழுத்தம், நள்ளிரவு வரை உறங்காமல் இருப்பது.

தீர்வு: உடலை சமநிலைப்படுத்துங்கள், இதய நலனை பேணிக்காக்க வேண்டும், நிறைய பழங்கள் உண்ணுங்கள், இது நீண்ட நாள் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள்.

 தாடை மற்றும் கழுத்து

தாடை மற்றும் கழுத்து

தொடர்பு: ஹார்மோன்கள்

காரணம்: உடலில் நீர்வறட்சி, அதிக உப்பு சேர்த்து உணவு உண்ணுதல், அதிகமாக காபி குடித்தால், காரம், மசாலா உணவுகள் அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல்.

தீர்வு: தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், காபி, மசாலா, காரம் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chinese Face Map Reveals What Disease Your Body Fight With

Did you know that there is a Chinese Face Map Reveals What Disease Your Body Fight With? read here in tamil.
Desktop Bottom Promotion