For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

|

உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது.

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் நன்மைகள் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதன் நன்மைகள் தெரிந்தால், நீங்கள் எலுமிச்சையின் தோலை தூக்கிப் போடமாட்டீர்கள். சரி, எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெறுவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வாருங்கள். கீழே அந்த எலுமிச்சை தண்ணீரின் செய்முறை மற்றும் அதில் உள்ள நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 6

தண்ணீர் - 1/2 லிட்டர்

தேன் - தேவையான அளவு

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* முதலில் எலுமிச்சைகளை பாதியா வெட்டிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த நீரை 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, 10-15 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அந்நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய டம்ளரில் அந்நீரை ஊற்றி, அத்துடன் தேன் கலந்து பருக வேண்டும்.

* எஞ்சிய நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, மற்ற வேளைகளில் பருகலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

இந்த எலுமிச்சை நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலின் நோயெர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

ஆற்றல்

ஆற்றல்

நீங்கள் மிகுந்த சோர்வை உணர்பவராயின், தினமும் காலையில் எழுந்ததும் இந்த எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் பருகுங்கள். இதனால் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

செரிமானம்

செரிமானம்

செரிமான பிரச்சனைகள் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் அதை சரிசெய்யும் மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

உடல் சுத்தமாகும்

உடல் சுத்தமாகும்

தினமும் காலையில் எலுமிச்சை நீரைக் குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

pH நிலையாகும்

pH நிலையாகும்

முக்கியமாக எலுமிச்சை நீர் உடலின் pH அளவை நிலைப்படுத்தும்.

எடை குறையும்

எடை குறையும்

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, இது ஓர் அற்புதமான பானம். காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதற்கு பதிலாக, இந்த எலுமிச்சை நீரைப் பருகி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மனநிலை மேம்படும்

மனநிலை மேம்படும்

நீங்கள் மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் உங்களின் மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும்.

குறிப்பு

குறிப்பு

இந்த எலுமிச்சை நீரை மீண்டும் சூடேற்றிப் பருகலாமா என்ற சந்தேகம் எழும். நீங்கள் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் மிகவும் குளிர்ச்சியான நிலையில் பருகாதீர்கள். ஒருவேளை வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பின் பருகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Boil Lemons And Drink This Liquid As Soon As You Wake Up.. You Will Be Shocked

If you boil the whole lemon without squeezing only the juice, you will get all the nutrients the lemon has to offer inside that warm liquid mixture. Read on to know more...
Story first published: Tuesday, July 26, 2016, 11:04 [IST]
Desktop Bottom Promotion