சில ஆண்களுக்கு ஏன் விந்து மிகவும் நீர்மம் போன்று வெளியேறுகிறது என்று தெரியுமா?

Subscribe to Boldsky

ஒவ்வொரு ஆணும் வெளியே சொல்ல முடியாத அளவிலான சில பாலியல் பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் விந்து குறைபாடு, விறைப்புத்தன்மை பிரச்சனை, நீர்மம் போன்று விந்து வெளியேறுதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது நாம் அதில் பார்க்கப் போவது நீர்மம் போன்று விந்து வெளியேறுவது குறித்து தான்.

தூக்கத்தில் விந்து வெளியேறுவது குறித்து உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்!

ஓர் ஆணுக்கு விந்து ஆரோக்கியமாக இருந்தால், ஓரளவு சற்று கெட்டியாக இருக்கும். ஆனால் ஆண்களுக்கு நீர்மம் போன்று விந்து வெளியேறினால், அதற்கு முக்கிய காரணம் புகைப்பிடித்தல், போதைப் பழக்கம், மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஃபுருக்டோஸ் குறைபாடு, மோசமான உணவுப் பழக்கம் போன்றவைகளாகத் தான் இருக்கும்.

ஆண்களே! அடிக்கடி தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!

அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபட்டால் மற்றும் அடிக்கடி சுய இன்பம் கண்டாலும், நீர்மம் போன்று விந்து வெளியேறும். இருப்பினும், இப்பிரச்சனையை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஃபுருக்டோஸ் உணவுகள்

விந்துவில் ஃபுருக்டோஸ் மிகவும் முக்கியமான உட்பொருள். ஃபுருக்டோஸ் இல்லாத உணவை ஆண்கள் உட்கொண்டு வந்தால், ஃபுருக்டோஸ் குறைபாடு ஏற்பட்டு, அதனால் விந்து நீர்மமாக வெளியேறும்.

எனவே ஃபுருக்டோஸ் குறைபாட்டைப் போக்க கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் ஃபுருக்டோஸ் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

ஃபுருக்டோஸ் நிறைந்த பழங்களாவன ஆப்பிள், பெர்ரிப் பழங்கள், பேரிக்காய், திராட்சை, கொய்யாப் பழம், மாம்பழம், அன்னாசி மற்றும் தர்பூசணி போன்றவை.

காய்கறிகளை எடுத்துக் கொண்டால், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், தக்காளி, லெட்யூஸ் மற்றும் வெங்காயம் போன்றவற்றில் அதிகம் இந்த ஃபுருக்டோஸ் உள்ளது.

பேரிச்சம் பழம் மற்றும் பால்

5-7 பேரிச்சம் பழத்தை சூடான பாலில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் பாலுடன் அந்த பேரிச்சம் பழத்தை உட்கொள்ள வேண்டும். இதனால் பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் வளமாக உள்ளது. மேலும் அதில் வைட்டமின் பி1, பி2, பி3,பி5 மற்றும் சிறிய அளவில் வைட்டமின் ஏ1 உள்ளது.

குறிப்பாக பேரிச்சப்பம் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, உடல் உறுதியை அதிகரித்து, ஆரோக்கியமான விந்து உற்பத்திக்கும் உதவும்.

 

ஜிங்க் உணவுகள்

சில சமயங்களில் ஜிங்க் குறைபாடுகளாலும் விந்து நீர்மம் போன்று இருக்கும். எனவே ஜிங்க் சத்து நிறைந்த கடல் சிப்பி, பாதாம், மட்டன், வேர்க்கடலை, முந்திரி, சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை ஆண்கள் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

செலினியம் நிறைந்த உணவுகள்

செலினியம் கூட விந்துவின் கெட்டித் தன்மைக்கு அத்தியாவசியமானது. பிரேசில் நட்ஸ், சூரியகாந்தி விதைகள், மீன் (சால்மன், மத்தி, சூரை), கடல் சிப்பி, சிக்கன், மட்டன், பார்லி, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் மற்றும் வெங்காயம் போன்றவற்றில் இச்சத்து அதிகமாக உள்ளது.

வைட்டமின் சி, ஈ மற்றும் பி12 உணவுகள்

சில நேரங்களில் குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகளாலும், விந்து நீர்மம் போன்று வெளியேறும். எனவே வைட்டமின்களான சி, ஈ, பி12 போன்றவை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் ஹார்மோ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, விந்துவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களான யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள முயல வேண்டும்.

உணவுகளுடன் உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதால் உடல் தசைகள் வலிமையடைவதோடு, போதிய அளவு விந்துவும் உற்பத்தி செய்யப்படும். தினசரி உடற்பயிற்சி விந்து நீர்மமாவதை சரிசெய்வதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். முக்கியமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின், ஆரோக்கிய உணவுகளான நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவறாமல் உட்கொள்வதன் மூலம், உடலின் ஆரோக்கியம் மேலும் மேம்படும்.

சரியான தூக்கம்

சரியான மற்றும் இடையூறு இல்லாத தூக்கத்தை 6-8 மணிநேரம் ஒரு ஆண் பெற்றால், மூளையின் ஆரோக்கியம் மேம்பட்டு, போதிய அளவு செக்ஸ் ஹார்மோன்கள் வெளியிட செய்து, விந்துவின் ஆரோக்கியத்தையும், அடர்த்தியையும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Best Natural Home Remedies To Cure Thin And Watery Semen

Here are some best natural home remedies to cure thin and watery semen. Read on to know more...
Story first published: Thursday, July 14, 2016, 10:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter