ஆர்கானிக் உணவுகளின் மறுபக்கம் எப்படியிருக்கு? ஒரு அலசல்!!

ரசாயனங்களற்ற, அதிக சத்துக்கள் கொண்ட ஆர்கானிக் உணவுகள் சிறந்த சுவையை கொண்டிருப்பதோடு சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. அதனைப் பற்றிய ஒரு அலசல் இங்கே!! படித்துப் பாருங்கள்!!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

நீங்கள் போதுமான அளவு ஆர்கானிக் உணவுகளை உட்கொள்பவரா? செயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடும் உணவுகளை காட்டிலும் இயற்கையான ஆர்கானிக் உணவுகளை மக்கள் விரும்புவது அதன் தரத்திற்கும் சத்துக்கள் அதிகம் என்பதாலும்தான்.

are organic foods perfectly safe to consume

பூச்சிக் கொல்லிகள் காய்கறி மற்றும் பழங்களால் உறிஞ்சப்பட்டு அதன் படிமங்கள் நின்றுவிடும் என்பதாலும் ஆர்கானிக் உணவுகள் 90 சதவிகிதம் வரை அதிகமான சில ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதாலும் ஆர்கானிக் உணவுகள் இதய நோய்களைத் தடுப்பதில் அதிக அளவு உதவுகின்றன.

அது பழங்களோ, காய்கறியோ அல்லது பிற உணவு பொருட்களோ, இந்த பகுதியில் ஆர்கானிக் உணவுகள் பற்றிய தகவல்களை பகிர்வதன் மூலம் புதிய விளைச்சல்களை வாங்கும் முடிவை நீங்கள் எளிதாக எடுக்க நாங்கள் உதவவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆர்கானிக் உணவு என்றால் என்ன?

அமெரிக்காவில் முன்பு ஆர்கானிக் உணவை தீர்மானிக்க பல்வேறு விதமான விதிமுறைகள் இருந்தன. ஆனால் தற்போது அதற்கென ஒரு தர்க்குறியீடு வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஆர்கானிக் உணவுகள் எனப்படுபவை பூச்சிக் கொல்லிகள் மற்றும் செயற்கை யுக்திகள் இல்லாத விளைபொருட்கள். ஆர்கானிக் மாமிச உணவுகள் ஆர்கானிக் அல்லது இயற்கை உணவுகள் உண்ட மருந்துகளால் வளர்க்கப்படாத விலங்குகளில் இருந்து பெறப்பட வேண்டும்.

 

ஆர்கானிக் உணவுகள் பாதுகாப்பானவையா?

செயற்கை பூச்சிக் கொல்லிகளை பொறுத்தவரை ஆர்கானிக் உணவுகள் மிகக் குறைவாகவே கொண்டுள்ளன மற்றும் சாப்பிடவும் உகந்தவை.

ஆனால் மரம் செடிகள் இயற்கையாகவே கொண்டிருக்கும் நச்சுக்களை ஒப்பிடும்போது வழக்கத்திலிருக்கும் உணவுகள் பரவாயில்லை என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

 

ஏன் ஆர்கானிக் உணவுகள் விவாதத்திற்குரியது?

குறைந்த அளவு பூச்சிக்கொல்லி பயன்பாடு அல்லது அறவே பூச்சிக்கொல்லி இல்லாமல் போவது செடிகளில் அதிக நச்சுக்கள் சேர வழி வகுக்கும். இயற்க்கை நச்சுக்கள் செயற்கை நச்சுக்களை விட காலப்போக்கில் ஆபத்து நிறைந்தவை.

உதாரணமாக, உருளைக் கிழங்கின் மேல்பகுதியில் பச்சை நிரப்பகுதியில் இருக்கும் சொலனைன் என்னும் வேதிப்பொருள் அதிகம் உட்கொள்ளப்பட்டால் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.

 

ஏன் ஆர்கானிக் உணவுகள் விவாதத்திற்குரியது?

மேலும் ஆர்கானிக் பொருட்களுக்கு எதிராக வைக்கப்படும் மற்றொரு வாதம் இதில் இயற்கை உரங்களை பயன்படுத்துவது.

இயற்கை உரங்கள் பயன்படுத்தி விளையும் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ஈ-கொலை எனப்படும் கொடிய பாக்டீரியா கலந்துவிட வாய்ப்புள்ளது. ஆனால் உண்மையில் செயற்கை உரங்களைக் காட்டிலும் தீமைகள் இதில் இல்லை.

 

இவை அதிக சுவையுடன் இருக்குமா?

சிலர் வழக்கமான உணவுகளைக் காட்டிலும் ஆர்கானிக் உணவுகள் ருசியானவை எனக் கூறினாலும் இது ஓரளவுக்கே உண்மை எனவும் அதில் வித்தியாசத்தைக் காண்பது கடினமே என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆர்கானிக் உணவுகளை அப்படியே உண்ணவேண்டும் என்றும் அதை குளிர்வித்து உண்ணக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அப்ப ஆர்கானிக் உணவுகளை வாங்குவது சரிதானா?

ஆர்கானிக் உணவுகள் விலையில் அதிகம் தான். ஆனால் ஒட்டுமொத்தமாக அவை சூழலில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவதால் அவற்றை நாடுவது சரியே.

அது எப்படி சூழலுக்கு நல்லது? வல்லுநர்கள் கருத்துப்படி பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு மண்ணில் சேர்ந்து தண்ணீரிலும் கலந்து அதை உட்கொள்ளும் மனிதனுக்கும் பரவுகிறது. எனவே ஆர்கானிக் உணவுகள் உண்ணுவதன் மூலம் சூழல் மாசுபாட்டை நாம் குறைக்க முடியும்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

are organic foods perfectly safe to consume

Beneficial facts and drawback of Organic foods.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter