For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் அர்த்த மச்ச இந்திராசனா- தினம் ஒரு யோகா

|

ஆஸ்துமா என்பது மூச்சுகுழலில் ஏற்படும் பாதிப்பினால் ஏற்படுவது. சுவாசக் குழாய்தான் வெளிபுறத்திலிருந்து நமக்கு தேவையான ஆக்ஸிஜனை நுறையீரலுக்கு அனுப்புகிறது.

அதிகப்படியான தூசு, பனி காலங்களில் கிருமிகளால் தொற்று, அல்லது ஏதேனும் அலர்ஜி ஆகியவை சுவாசக் குழாயிலுள்ள தசைகளை சுருங்கச் செய்துவிடும். இது தரும் அலாரமே வறட்டு இருமல்.

ardha matseyndrasana to relieve asthma

அதனை அப்படியே கவனிக்காமல் விடும்போது பாதிப்பு அதிகமாகி, ஆஸ்துமா ஏற்படுகிறது. சரியாக மூச்சு விட முடியாமல் மூச்சு திணறல் மற்றும் வறட்டு இருமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதற்கு யோகாவில் அற்புதமான ஒரு ஆசனம் உள்ளது.

அர்த்த மச்ச இந்திராசனா :

அர்த்த என்றால் பாதி மச்ச என்றால் மீன், இந்திரா என்றால் உணர்வு. பாதியாய் உடலை வளைத்து செய்யப்படும் இந்த ஆசனத்தால் மார்புக்கூடு நன்றாக விரிவடைந்து காற்றை நுரையீரலுக்கு அனுப்புகிறது. அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து பாதிப்பினை சரி செய்கிறது.

எவ்வாறு இந்த ஆசனத்தை செய்வது என பார்க்கலாம்.

முதலில் கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். மெதுவாக இடது காலை மடக்கி, இடது பாதத்தின் மீது அமரவேண்டும். அதாவது புட்டத்தை இடது பாதத்தின் மீது வையுங்கள்.

பின்னர் வலது காலை படத்தில் காட்டியது போல், இடது தொடையை தாண்டி வைக்கவும்.

இப்போது இடது கையினால் வலது பாதத்தை பிடித்தபடி வலப்பக்கம் திரும்புங்கள். வலது கையை பின்பக்கமாய் கொண்டு வந்து இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நிலையில் 1 நிமிடம் வரை இருக்க வேண்டும். மெதுவாய் ஆழ்ந்து மூச்சை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இப்போது இதே போன்று வலக் காலிலும் செய்ய வேண்டும்.

பலன்கள் :

பசியை தூண்டும். சுவாசம் நன்றாக இருக்கும். இடுப்பிற்கும், முதுகிற்கும் நெகிழ்வுத் தன்மையை தரும். கல்லீரல், சிறு நீரகத்தை செயல் புரிய வைக்கும். நுரையீரலை ஆரோக்கியப்படுத்தும்.

குறிப்பு : முதுகுத் தண்டு பாதிப்படைந்தவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

English summary

ardha matseyndrasana to relieve asthma

ardha matseyndrasana to relieve asthma
Desktop Bottom Promotion