For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் முத்தமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கான மற்றுமொரு காரணம்!!

|

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இருபது ஜோடிகளுக்கு மத்தியில் முத்தத்தை பற்றிய ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது அவர்களது எச்சிலை வைத்து சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த முத்த ஆய்வின் போது ஜோடிகள் அனைவரும் பத்து நொடிகளுக்கு மேலாக முத்தமிட்டுக் கொள்ளும்படி அறிவுரைக்கப்பட்டனர்.

இந்த ஆய்வின் போது கிடைத்த வினோத தகவல் என்னவெனில், தெரிந்த நபருடன் இன்றி, அந்நியருடன் முத்தமிட்டுக் கொள்ளும் போது பெரியளவில் நல்ல பாக்டீரியாக்கள் பரவுவது இல்லை என்பது தான். இந்த ஆய்வின் போது ஏறத்தாழ 75 மில்லியன் அளவு ஆரோக்கிய பாக்டீரியாக்கள் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்வமும் நேரமும் முக்கியம்

ஆர்வமும் நேரமும் முக்கியம்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் முத்தமிடும் போது எடுத்துக் கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் பரவும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் நிறைய வேறுபாடுகள் தெரிவது கண்டறியப்பட்டது.

பிரெஞ்சு முத்தம்

பிரெஞ்சு முத்தம்

முத்தமிட்டுக் கொள்வதில் நிறைய ஸ்டைல் இருக்கின்றன. இதில் பிரெஞ்சு முத்தமிட்டுக் கொள்ளும் போது தான் அதிகளவிலான ஆரோக்கிய பாக்டீரியாக்கள் குறுகிய நேரத்தினுள் பரவுகிறது என கண்டறிந்துள்ளனர்.

செயர்கருவி

செயர்கருவி

முத்தமிட்டுக் கொள்ளும் போது எவ்வளவு பாக்டீரியாக்கள் பரவுகின்றன என கண்டறிய ஓர் செயர்கருவியை கண்டுபிடித்துள்ளனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இது சந்தையில் விற்கப்படுவதில்லை.

அந்நியர்களை முத்தமிட வேண்டாம்

அந்நியர்களை முத்தமிட வேண்டாம்

ஆரோக்கிய பாக்டீரியாக்களை பகிர்ந்துக் கொள்ள விருப்பினால், உங்கள் துணையுடன் மட்டுமே முத்தமிட்டுக் கொள்ளுங்கள். அந்நியர்களுடன் முத்தமிட்டுக் கொள்வதை தவிர்க்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

ஏக்கமும், டோபமைனும்

ஏக்கமும், டோபமைனும்

உடலில் ஆசையை அதிகரிக்க செய்யும் டோபமைன் எனும் சுரப்பி முத்தமிட்டுக் கொள்ளும் போது அதிகரிக்கிறது. மேலும் இதயம் சீராக இயங்க துவங்கி உடலுக்குள் அதிக ஆக்ஸிஜன் சென்று வரவும் ஓர் சிறந்த முழுமையான முத்தம் உதவுகிறது.

பரவசநிலை

பரவசநிலை

முத்தமிட்ட பிறகு எண்டோர்பின் வெளிப்படும் போது நீங்கள் பரவச நிலையை உணர்வீர்கள். இதன் காரணமாக தான் மிகுந்த சந்தோஷம், தூக்கமில்லாத அளவு இருப்பது, ரொமாண்டிக் எண்ணங்கள் வருவதற்கான காரணம்.

துணை இல்லாதவர்களுக்கு

துணை இல்லாதவர்களுக்கு

எனக்கு துணை இல்லை, நான் எப்படி ஆரோக்கியமான பாக்டீரியாக்களை பெறுவது என்று வேண்டுவோர், ப்ரோ-பயாடிக் நிறைந்துள்ள தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Another Reason Why A Kiss Is Healthy

A recent study claims that a kiss that lasts nearly for 10 seconds can transfer more than 75 million healthy bacteria from one person's mouth to the other. The best part is that this bacteria is friendly and does some good to your health.
Desktop Bottom Promotion