இடுப்பளவை குறைக்கும் ஆனந்தாசனா !!

By: Hemalatha V
Subscribe to Boldsky

உடல் பருமன் என்பது மிகவும் ஆபத்தான் நோய்களின் அறிகுறிதான். இப்போதுள்ள வாழ்க்கை முறைக்கு தகுந்தாற்போல் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. இதனால் உடல் பாதிக்கபடுகிறது. குழந்தை பெற்ற பின் பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பு குண்டாகிவிடும். "உடல் எடை குறைச்சாலும் இந்த இடுப்புதான் கம்மியாகவே மாட்டேங்குது" என நிறைய பெண்கள் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அல்லது அது நீங்களாகவே இருக்கலாம்.

Ananthasana to reduce Hip and Thigh Weight

இடுப்பு மற்றும் தொடையின் பருமனை குறைப்பது பெரும்பாலோனோருக்கு சவாலான விஷயம்தான். யோகாவில் உடல் பருமன் மற்றும் இடுப்பின் அளவை குறைக்க எத்தனையோ ஆசனங்கள் உள்ளதுதான். ஆனால் ஆனந்தாசனாவில் இடுப்பு மற்றும் தொடைக்கே அதிகம் பயிற்சி தரப்படுவதால், வேகமாக அங்கே இருக்கும் கொழுப்புகள் கரைகிறது.

ஆனந்தாசனா :

ஆனந்தா என்றால் சமஸ்கிருதத்தில் முடிவற்ற என்று அர்த்தம். இந்த ஆசனம் பார்ப்பதற்கு எளிது போல் தோன்றினாலும், இதனை பேலன்ஸ் செய்து நிற்பது சற்று கடின, இருந்தாலும் மிகவும் பலன் தரக் கூடியது. இந்த யோகாவை எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

முதலில் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். மெதுவாக இடப்பக்கம் திரும்பவும். தலையை தூக்கி இடது கையினால் முட்டு கொடுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிடவும்.

Ananthasana to reduce Hip and Thigh Weight

பின் மெதுவாக வலது காலை உயர்த்துங்கள். நேராக 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். கால்களை வளைக்காமல் நேராக மேலே பார்த்தபடி வைத்திருங்கள். ஆரம்பத்தில் மேலே முழுவதும் தூக்க சிரமமாக இருந்தால், நாளடைவில் எளிதாகிவிடும்.

அதன் பின் கால்களை வலது கையினால் பிடித்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்களுக்கு இந்த நிலையிலேயே இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வந்து, இப்போது வலப்பக்கம் திரும்பி இடது காலில் செய்யவும்.

Ananthasana to reduce Hip and Thigh Weight

பலன்கள் :

வயிற்றிற்கு பலம் அளிக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. ஆர்த்ரைடிஸை குணப்படுத்துகிறது. ரத்த அழுத்தம் வராமல் காக்கும்.

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Ananthasana to reduce Hip and Thigh Weight

Ananthasana to reduce Hip and Thigh Weight
Please Wait while comments are loading...
Subscribe Newsletter