தினமும் ஒரு கையளவு பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By:
Subscribe to Boldsky

நட்ஸ்களில் ஆரோக்கியமான ஒன்று தான் பிஸ்தா. இந்த பிஸ்தாவில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. பிஸ்தாவில் உடலுக்கு வேண்டிய நல்ல கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக அடங்கியுள்ளது.

பிஸ்தாவை கனிமச்சத்துக்களின் கிடங்கு எனலாம். ஏனெனில் இதில் காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பக்கவாதம் மற்றும் இதய நோய்களைக் குணப்படுத்த வல்லது.

அதுமட்டுமின்றி, இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்கள், கொழுப்புக்கள், நார்ச்சத்துக்கள், பீட்டா-கரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் நியாசின் போன்றவை உள்ளதால், இதனை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், நம் உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். சரி, இப்போது பிஸ்தாவை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதய ஆரோக்கியம்

பிஸ்தா இதய ஆரோக்கியத்தை சீராகப் பராமரிக்க உதவும். தினமும் சிறிது பிஸ்தாவை ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வந்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இதய நோயின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

உடல் எடை

பிஸ்தாவில் நார்ச்சத்து அதிகமாகவும், சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும் உள்ளதால், எடையைக் குறைக்க நினைப்போர் இதனை ஸ்நாக்ஸாக உட்கொள்வது நல்லது. மேலும் இதில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், உடலில் ஆற்றல் அதிகரித்து, கொழுப்புக்களை எரிக்கும் பணி வேகமாக்கப்படும்.

கண் பிரச்சனைகள்

பிஸ்தாவில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களில் உள்ள திசுக்களுக்கு நல்ல பாதுகாப்பு வழங்கி, கண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக தினமும் இதனை சிறிது உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் ஏற்படும் மாகுலர் திசு செயலிழப்பு பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

பிஸ்தாவில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் உடலில் குறைவாக இருந்தால் தான் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை குறைந்து, கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் அளவு குறையும். ஆனால் தினமும் பிஸ்தா உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.

ஆரோக்கியமான இரத்தம்

பிஸ்தாவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை உள்ளது. ஹீமோகுளோபின் தான் உடலுறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும். இதன் அளவு உடலில் குறைந்தால், உடல் சோர்வடைந்து பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுவே தினமும் சிறிது பிஸ்தா உட்கொண்டு வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கலாம்.

நீரிழிவு

பிஸ்தாவில் டைப்-2 நீரிழிவைத் தடுக்கும் அமினோ அமிலங்கள் உள்ளது. மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ் புரோட்டீன்களை அமினோ அமிலங்களாக உடைக்கும். அதுமட்டுமின்றி, பிஸ்தா நீரிழிவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நேராமல் உடலைப் பாதுகாக்கும்.

நரம்பு மண்டலத்தின் இயக்கம் மேம்படும்

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நரம்பு மண்டலத்திற்கு பல நன்மைகளை வழங்கும். இந்த வைட்டமின் நரம்பு கொழுப்பு உறைகளின் உருவாக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் இது நரம்பு மண்டலத்தின் மூலம் உடலினுள் செய்தி பரிமாற்றங்களை சீராக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Amazing Health Benefits Of Pistachios

In this article, we at Boldsky are listing out some of the health benefits of consuming pistachios on a regular basis. Read on to know more...
Story first published: Wednesday, January 13, 2016, 16:29 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter