அந்தரங்க பகுதியில் இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?

அந்தரங்க பகுதி மிகவும் சென்சிடிவ்வானது. இப்பகுதியில் நம்மை அறியாமலேயே பல தவறுகளை நாம் செய்து செய்து வருகிறோம். இங்கு அந்தரங்க பகுதியில் செய்யக்கூடாத செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Subscribe to Boldsky

சுகாதாரம் என்பது அவசியமானது தான். அதிலும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதால், நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கும். இதற்காக பலர் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்கிறேன் என்று சில தவறுகளை செய்கின்றனர்.

நம்மில் பலருக்கு அந்தரங்க பகுதியில் எந்த செயல்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று தெரியவில்லை. இதனாலேயே அந்தரங்க பகுதியில் பலர் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் சந்திக்கின்றனர். சரி, இப்போது அந்தரங்க பகுதியில் நாம் செய்யும் தவறுகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஈரமாக வைத்திருப்பது

நம்மில் பலர் குளித்து முடிந்த பின், அந்தரங்க பகுதியை துடைக்காமல், அப்படியே ஈரத்துடனேயே உள்ளாடையை அணிந்து கொள்வோம். இப்படி உலர்த்தாமல் உள்ளாடையை அணிந்தால், அப்பகுதியில் பாக்டீரியாக்கள் பெருக ஆரம்பிக்கும்.

இறுக்கமான ஆடை அணிவது

பலரும் தங்களுக்கு பொருத்தமான ஆடையை அணிகிறேன் என்று, தங்கள் உடலை இறுக்கியவாறான உடைகளை அணிவார்கள். இப்படி அந்தரங்க பகுதியை இறுக்குமாறான ஆடையை அணிந்தால், அவ்விடத்தில் வியர்வை அதிகரித்து, ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் இதர தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே எப்போதும் அந்தரங்க பகுதியில் சற்று காற்றோட்டம் இருக்குமாறான உடையை அணிய வேண்டும்.

நறுமணமிக்க சோப்புக்கள் உபயோகிப்பது

அந்தரங்க பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது என்று நல்ல நறுமணமிக்க சோப்புக்களைக் கொண்டு அந்தரங்க பகுதியை அளவுக்கு அதிகமாக சுத்தம் செய்யாதீர்கள். இதனால் அந்த சோப்புக்களில் உள்ள கெமிக்கல்கள் அந்தரங்க பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, தொற்றுக்களைக் கூட ஏற்படுத்தும்.

பெர்ஃயூம் பயன்படுத்துவது

சிலர் உடல் துர்நாற்றத்தைப் போக்க விற்கப்படும் பெர்ஃயூம்களை அந்தரங்க பகுதியின் அருகிலும் அடித்துக் கொள்வார்கள். அந்தரங்க பகுதி மிகவும் சென்சிடிவ்வானது என்பதால், அப்பகுதிக்கு அருகில் கெமிக்கல் நிறைந்த பெர்ஃயூம்களை பயன்படுத்தினால், அதனால் அவ்விடத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும்.

கடுமையாக சொறிவது

அந்தரங்க பகுதியில் பல காரணங்களால் அரிப்புக்கள் ஏற்படலாம். என்ன தான் அரிப்புக்கள் ஏற்பட்டாலும், அப்போது கடுமையாக சொறியாமல், மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

சுயஇன்பம் காண கண்டதை உட்செலுத்துவது

இது உங்களுக்கு நகைச்சுவையான ஒன்றாக இருக்கலாம். இப்பழக்கம் நம்மக்களிடையே இல்லாவிட்டாலும், வெளிநாடுகளில் உள்ள பெண்கள் இம்மாதிரியான செயல்களை செய்கின்றனர். சுயஇன்பம் காண்பதற்கு என்று விற்கப்படும் செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்துவார்கள். முடிந்தவரை இம்மாதிரியானதைப் பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

சுய பரிசோதனையைத் தவிர்க்கவும்

நீங்கள் மருத்துவர் இல்லை. எனவே எந்த ஒரு பிரச்சனைக்கும் தாங்களாகவே சுய பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக அந்தரங்க பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு சுயமாக சிகிச்சை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

7 Things You Should Never Do To Your Private Parts

Here are some things you should never do to your private parts. Read on to know more...
Story first published: Wednesday, November 23, 2016, 10:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter