உங்கள் கணையம் பாதிக்கப்பட்டிருப்பதற்கான 5 அறிகுறிகள் !!

உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படால் அதன் அறிகுறிகள் நமக்கு காட்டிக் கொடுத்துவிடும். அவ்வாறான அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொண்டால் பல வியாதிகளை நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

Written By:
Subscribe to Boldsky

கணையம் என்று சொன்னாலே பெரும்பாலோனோருக்கு அதன் கூடவே புற்று நோய் என்ற சொல் நினைவிற்கு வரும். காரணம் கணையப் புற்று நோய் மெதுவாக ஆளைக் கொல்லும்.

5 warning signs that your pancreas is in trouble

கணையம் நீளமான உறுப்பு, இது ஜீரணம் ஆவதற்கான நொதிகளை சுரக்கிறது. கணையத்தில் வரும் புற்று நோயை ஆரம்ப காலக்கட்டத்தில் கண்டறிவது கஷ்டம். அதுபோலவே அதனால் உயிர் பிழைப்பதும் அரிது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

கணையம் பாதிப்படைந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் இங்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலம் வெளுத்த நிறத்தில் வருகிறதா?

மலம் வெளுத்த நிறத்தில் வருகிறதா?

வழக்கம் போலில்லாமல், நீர்த்த தன்மையில் வெண்மை நிறத்தில் வந்தால் கணையத்தில் நொதிகள் சுரக்கவில்லை என்று அர்த்தம். இதனால் சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படமால் மலமாக வரும்போது இந்த நிரத்தில் உண்டாகும்.

 அடிவயிற்று வலி :

அடிவயிற்று வலி :

அடிவயிற்றில் நீண்ட நாட்களாக வலியும் அதனைத் தொடர்ந்து பின் முதுகிலும் வலி உண்டானால் மருத்துவருடன் உடனடியாக செல்வது நல்லது. இந்த வலிகள் கணையம் பாதிக்கப்பட்டிருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதி :

நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிடுகிறீர்கள். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கிறது. குடும்பத்திலும் சர்க்கரை வியாதி யாருக்கும் இல்லை.

இருப்பினும் உங்களுக்கு சர்க்கரை வியாதி கண்டறியப்பட்டுள்ளதா? அப்படியென்றால் உங்கள் கணையத்தில் ஏதேனும் பாதிப்பு உண்டாகியிருக்கலாம். அதுதான் சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலினை சுரக்கிறது.

 கொழுப்பான உணவுகள் சப்பிட்டால் குமட்டல் :

கொழுப்பான உணவுகள் சப்பிட்டால் குமட்டல் :

கொழுப்பு மிகுந்த உணவுகளான பர்கர், பீஸா ஆகியவற்றை உண்டவுடன் உங்களுக்கு குமட்டல் வருகிறதா? கொழுப்புகளை செரிக்க முடியாமல் வயிறு வெளியே தள்ளும். இதற்கு காரணம் கணையம் செயல்படவில்லை என்று அர்த்தம்.

அதிக உடல் எடை குறைவு ;

அதிக உடல் எடை குறைவு ;

நீங்கள் நன்றாக சாப்பிட்டாலும் உடல் எடை குறைந்தால் கணையம் பாதிக்கப்பட்டிருக்கலாம். தைராய்டு பாதிப்பினாலும் உடல் எடை குறையும். இருப்பினும் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 warning signs that your pancreas is in trouble

5 warning signs that your pancreas is in trouble
Please Wait while comments are loading...
Subscribe Newsletter