இந்த நோய்கள் எல்லாம் பரம்பரையாக வரலாம்!! எவை தெரியுமா?

நோய்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம் . இது பலவற்றிற்கு நீங்கள் காரணமாகலாம். சிலவற்றிற்கு உங்கள் மரபணு காரணமாகலாம். மரபணுவால் அப்படி என்ன நோய்கள் நம்மை பாதிக்கும் என பார்க்கலாம்.

Written By:
Subscribe to Boldsky

உங்கள் அப்பாவின் அதே கண்கள், அம்மாவின் பாதம், தாத்தாவின் காது, அத்தையின் சிரிப்பு என அதெப்படி ஒவ்வொருவரிடமிருந்து எல்லாம் கலந்த ஒரு உருவம் வந்திருக்கிறது என வியப்பு சில சமயங்கள் உங்களிடம் தோன்றியிருக்கலாம்.

உங்கள் அம்மா, அப்பா இருவரிடமிருந்தும் தரப்பட்ட தலா ஒரு ஜீன் நகலில் உருவானவர்தான் நீங்கள். ஆனால் அந்த ஜீன் உண்ணும் உணவு, வாழும் இடம், இருக்கும் சூழ் நிலை இவற்றிற்கும் தகுந்தாற்போல் கருவாக உருவாகும்.

5 unexpected diseases that inherit from your family

அந்த வழியில்தான் சொட்டை, நோய்கள், மன அழுத்தம் எல்லாம் ஒன்று போல் மற்றவற்கும் இருக்கும். அப்படி என்னென்ன நோய்கள் பரம்பரையாக உங்கள் அம்மா, அப்பவிடமிருந்து வரலாம் என பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக கொலஸ்ட்ரால் :

அதிக கொலஸ்ட்ரால் :

சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தாலும், அவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். அவர்கள் வேகன் டயட், மாரத்தானில் ஓடினாலும் குறையாது.

வழக்கமாக கொழுப்பு செரித்து ரத்த குழாயில் தங்விடும். இதற்கு மரபணுவில் வரும் மாற்றமே காரணமாகும். இது பரம்பரையாக வருவது.

மார்பக புற்று நோய் (அப்பாவிடமிருந்து)

மார்பக புற்று நோய் (அப்பாவிடமிருந்து)

பொதுவாக புற்று நோய் அம்மாவின் குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கிறதா என பார்ப்போம். ஆனால் அப்பாவின் குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால் அது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு உண்டு.

ஆண் குழந்தைகளுக்கு மார்பக புற்று நோய் வருவது அரிது என்றாலும் , அவர்களின் அம்மாவின் ஜீனை அப்படியே தங்களது மகளுக்கு கடத்துவதாலும் பரையாக இந்த நோய் உண்டாகலாம். கர்ப்பப்பை புற்று நோயும் அவ்வழியே.

சொட்டை (அம்மாவிடமிருந்து) :

சொட்டை (அம்மாவிடமிருந்து) :

நம்பினால் நம்புங்கள் அம்மாவின் குரோமோசோலிருக்கும் ஒரு ஜீன்தான் சொட்டை விழுவதற்கு காரணம். பொதுவாக அப்பாக்கு இருந்தால் மகனுக்கு வரும் என்பது தவறு. அம்மாவிடமிருக்கும் ஜீன்தான் சொட்டையை உண்டாக்குகிறது.

சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதி :

சிலருக்கு 30 களிலேயே ஏன் 20 களிலேயே சர்க்கரை வியாதி தொடங்கிவிடும். இதற்கு காரணம் அவர்களின் குடும்பத்தில் யாருக்காவது இருந்திருக்கலாம்.

டைப் 1 சர்க்கரைவியாதி பெரும்பாலும் மரபு ரீதியாக வருவது. டைப்-2 சர்க்கரை வியாதி பெரும்பாலோனோர் உடல் பருமன் , வாழ்க்கை முறையால் வருவதென்று கூறினாலும் மரபணு காரணமாகவும் வரலாம்.

இதனை சரியாக சோதித்த பிறகு சிகிச்சை அளித்தால் தகுந்த பலன் தரும்.

உணவு அலர்ஜி :

உணவு அலர்ஜி :

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் , குளுடன் அலர்ஜி போன்ற பால், கோதுமை, வேர்க்கடலை என எந்த உணவெடுத்தாலும் சிலருக்கு அலர்ஜி உண்டாகும். இதற்கு மரபணுதான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 unexpected diseases that inherit from your family

5 unexpected diseases that are inherited from your family
Story first published: Friday, November 18, 2016, 8:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter