ஒழுங்கற்ற மாதவிடாயா? இதோ 5 டிப்ஸ்!

Posted By: Super
Subscribe to Boldsky

மாதவிடாய் என்பது அனைத்து பெண்களுக்கும் வேதனையான விஷயமாகத்தான் இருக்கின்றது. அவர்களின் பருவ வயதில் அனுபவிக்க வேண்டிய விஷயம்தான் என்றாலும் அதில் வலி அதிகம்., அதிலும் சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கின்றது. இது மேலும் பிரச்சனைதான்.

ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் மாத மாதம் மாதவிடாய் நிகழாமல் இருப்பதுதான். இதற்கு வாழ்க்கை முறையில் மாற்றம், ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் போன்று பல காரணங்கள் உள்ளது.

இதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று oligomenorrhoea அதாவது நீண்ட நாட்களுக்கு மாதவிடாய் நிகழாமல் இருப்பது மற்றொன்று polymenorrhoes அதாவது குறைந்த இடைவெளியில் 21 நாட்களுக்கும் கம்மியான இடைவெளியில் மாதவிடாய் நிகழ்வது.

Oligomenorrhoea, இந்த பிரச்சனையால் மாதவிடாய் குறைந்த மாதங்களுக்கு மட்டுமே நிகழும். அதாவது ஒரு வருடத்திற்கு 4 முதல் 9 வரை மாதவிடாய் நிகழலாம். இதற்கு மருத்துவ ரீதியான குறைப்பாடு அல்லது ஹார்மோன் கோலாறாகவும் இருக்கலாம்.

ஹார்மோன் குறைபாடு ஒழுங்கற்ற மாதவிடாய் கொடுக்கும் இதனால் மெனோபாஸ் நிகழவும் வாய்ப்பு உள்ளது. திடீர் ஹார்மோன் மாற்றத்தை உடல் ஏற்றுக் கொள்ள முடியாத போது இந்த மாதிரி பிரச்சனை வருகின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எள்ளு விதை

எள்ளு விதை

இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன, தாதுபொருட்கள் அதிக அளவில் உள்ள இந்த விதையில் வைட்டமின் சத்தும் அதிக அளவில் உள்ளது. இரவில் எள்ளு விதைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகினால் பலன் அடைவது நிச்சயம்.

சீரக விதை

சீரக விதை

சீரக விதையின் மாவை நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகினால் மாதவிடாயின் போது வயிற்று வலி போன்ற உபாதைகள் இருக்காது. இதில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால் மாதவிடாயின் போது இரம்பு சத்து குறைப்பாடு நிகழ்ந்தால் இந்த விதைகள் காக்கும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் அதிக அளவு சத்து உள்ளது. இதற்கு நோய் குணப்படுத்தும் குணம் உள்ளது. இதை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடைபெறும். மெனோபாஸ் பிரச்சனைகளுக்கான சரியான தீர்வு பப்பாளி.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ

ஈஸ்ட்ரோஜனை ஒழுங்காக செயல்பட வைக்க செம்பருத்தி பூ உதவும். இதனால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருக்கும்

துளசி

துளசி

எண்ணற்ற மருத்து குணங்கள் கொண்ட தாவரம் துளசி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை உட்கொள்வதால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடைபெறுவதுடன் அந்த நேரத்தில் வரும் வலி வேதனை குறையும். ஒரு மேசைக்கரண்டி தேனுடன் சம அளவில் துளசி சாற்றை எடுத்து கொண்டால் இதன் மருத்துவ குணத்தை முழுமையாக அடைய முடியும். இதனால் மாதவிடாயின் போது வரும் கீழ் முதுகு வலி சீராகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

ஒழுங்கற்ற மாதவிடாயா? இதோ 5 டிப்ஸ்

5 Unbeatable Remedies To Manage Irregular Periods
Story first published: Friday, March 25, 2016, 11:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter