102 வயதிலும் அசராமல் சரக்கடிக்கும் மூதாட்டி கூறும் ஆரோக்கிய இரகசியம்!

Subscribe to Boldsky

நூறு வயது வாழ வேண்டும் என்ற ஆசை இன்னமும் ஒருவருக்கு இருந்தால், இந்த உலகம் அவரை முட்டாளாக தான் பாருக்கும். சென்ற நூற்றாண்டு வரை தான் நூறு வயது என்பது மனிதர்களின் சராசர் வாழ்நாளாக இருந்தது. இப்போது அது மெல்ல, மெல்ல குறைந்து 60க்கும் - 70க்கும் நடுவே நொண்டிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், அதிசயமாக வியந்து பார்க்கும்படி உலகில் அங்கொருவர், இங்கொருவர் ஆங்காங்கே சதமடிப்பது உண்டு. பொதுவாக மதுவருந்தினால் விரைவாக இறந்துவிடுவோம் என்று தான் கூறி பார்த்திருப்போம்.

ஆனால், மில்ட்ரெட் போவர்ஸ் எனும் மூதாட்டி, 102 வயதிலும் அசராமல் சரக்கடித்துவிட்டு தனது ஆரோக்கிய இரகசியங்களை பகிர்ந்துக் கொள்கிறார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மில்ட்ரெட் போவர்ஸ்!

தென் கரோலினா பகுதியை சேர்ந்த மூதாட்டி தான் இந்த மில்ட்ரெட் போவர்ஸ். வரும் ஆகஸ்ட் 31 தேதியுடன் வயது 103. நம்மில் 99.99% பேருக்கு இந்த வயது வரை வாழ்வது வெறும் கனவு. ஆனால், மில்ட்ரெட் போவர்ஸ் இன்றும் தெம்பாக பீர் குடித்து வருகிறார்.

Image Source

ஆரோக்கிய உணவா? அப்படின்னா?

நூறு வயது வரை வாழ வேண்டும் என்றால் ஆரோக்கிய உணவு தான் சாப்பிட வேண்டும் என்ற சட்டதிட்டத்தை தவிடுபொடியாக்கி நிற்கிறார் மில்ட்ரெட் போவர்ஸ். இவர் ஆரோக்கியமான உணவுகள், சூப்பர் புட்ஸ், அதிசய ஜூஸ்களை எல்லாம் கண்டுக் கொள்வதே இல்லை.

ஒரு பீர் சொல்லு மச்சி!

சதம் அடித்த சச்சினை போல அசராமல் நிற்கும் மில்ட்ரெட் போவர்ஸ் நூறு வயது வரை வாழ என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் தினமும், கூலாக ஒரு பீர் குடிக்க கூறுகிறார். இதை தான் இவர் தினமும் பின்பற்றி வருகிறார்.

உலக போரை கடந்து வாழும் பெண்மணி!

மில்ட்ரெட் போவர்ஸ், 1913-ம் ஆண்டு பிறந்தவர். இவர் தனது 20 வயதுகளில், முதலாம் உலகப்போர், 30 வயதுகளில் இரண்டாம் உலகப்போர், 50 வயதுகளில் கென்னடியின் கொலை என அனைத்தையும் கடந்து வந்துள்ளார்.

மருத்துவர் அறிவுரை!

நூற்றாண்டை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் மில்ட்ரெட் போவர்ஸ்-க்கு மருத்துவர் கூறும் அறிவுரை வியக்க வைக்கிறது. ஆம், மருத்துவர்களே இவர தினமும் ஒரு பின்ட் பீர் குடிக்க கூறுகின்றனர். இவரது ஆரோக்கியத்திற்கு பின்னணியே இந்த பின்ட் பீர் தான்.

ஆக்னஸ் ஃபெண்டன்!

மில்ட்ரெட் போவர்ஸ் மட்டுமல்ல, அமெரிக்காவை சேர்ந்த மற்றுமொரு சூப்பர் மூதாட்டியான ஆக்னஸ் ஃபெண்டனும் (111) தினமும் மூன்று பீர் மற்றும் ஒரு ஷாட் விஸ்கி குடித்து வருகிறார்.

என்ன அதிசயம்!

நமது ஊர்களில் புகையும், குடியும் ஆயுளுக்கு பகை என எதுகை, மோனையில் விழிப்புணர்வு வாசகம் எழுதி வைத்தால். இந்த இரண்டு சூப்பர் மூதாட்டிகளும் பீர் குடித்து சதமடித்து கொக்காணி காட்டி சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

102-Year-Old Woman Finds Awesome Secret To Long Life

102-Year-Old Woman Finds Awesome Secret To Long Life, read here in tamil.
Story first published: Thursday, August 25, 2016, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter