For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைக் குலுக்குறது கூட குத்தமா...??? கை எடுத்து கும்பிடுங்க அது தான் சரி!!!

|

ஆங்கிலேயரிடம் நாம் கற்றுக்கொண்டு பிஞ்சு முதல் பி.எச்.டி. வரை பின்பற்றும் இரண்டு விஷயங்கள் "சார்.." என்று கூப்பிடுவது மற்றும் கைக் குலுக்குவது. சார் என்பது பட்டம் என்று தெரிந்தும் நாம் மரியாதை நிமித்தம் என்ற பெயரில் கைவிடுவதாய் இல்லை. ஆனால், ஆங்கிலேயர்கள் அதை பின்பற்றியதே இல்லை.

உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன சொல்கிறது என்று தெரியுமா?

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது நமது ஊர்களில் கை எடுத்து கும்பிடுவது போல, கைக் குலுக்குவது ஆங்கிலேயரின் நாகரீக செயல். ஆனால், கைக் குலுக்குவது உடல்நலனுக்கு சரியானது இல்லை என்று இப்போது கூறுகிறது ஆங்கில நாகரீகம். ஏன் என்று தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்.....

கைகளை தட்டுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமான தொற்றுகள் பரவிட காரணமாக இருக்கிறது

அதிகமான தொற்றுகள் பரவிட காரணமாக இருக்கிறது

கைகள் மூலமாக தான் அதிகமான நோய் தொற்று கிருமிகள் நமது உடலுக்குள் செல்கின்றன. ஆகையால் தான் மற்றவருடன் கைக் குலுக்குவது உடல் நலனுக்கு சரியானது இல்லை என்று கூறுகிறார்கள்.

காய்ச்சல்

காய்ச்சல்

கை மூலமாக மிக எளிதாக பரவக் கூடிய நோய் தொற்றுகளில் முதன்மையானது காய்ச்சல் தான். சாதரணமாக காய்ச்சல் வந்த நபருடன் தங்கியிருந்தாலே இந்த தொற்று கிருமி எளிதாக பரவிடும். காய்ச்சல் உள்ள நபருடன் கைக் குலுக்குதல் மிக விரைவாக உங்களுக்கும் காய்ச்சல் தொற்று ஏற்பட காரணமாக இருக்கிறது.

இருமல்

இருமல்

இருமல் இருக்கும் போது தயவு செய்து யாருடனும் கைக் குலுக்க வேண்டாம். இருமல் இருக்கும் போது கைக் குலுக்குவது மிக வேகமாக மற்றவருக்கு நோய் கிருமி தொற்று பரவ வழிவகுக்கும்.

அம்மை

அம்மை

அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் கைக் குலுக்குவதை தவிர்த்தல் வேண்டும். அம்மை நோய் கிருமி மிக எளிதாக மற்றவருக்கு பரவும் கிருமி ஆகும். எனவே, இந்த நோய் தாக்கம் இருக்கும் போது கைக் குலுக்க வேண்டாம்.

வாந்தி, பேதி

வாந்தி, பேதி

அழுக்கான கைகள் கொண்டு கைக் குலுக்குவது, குமட்டல், வயிற்றுக் கோளாறுகள், வாந்தி, பேதி போன்றவை கூட ஏற்படலாம்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்று பிரச்சனைகள்

உடல்நிலை சரியில்லாத போது கைக் குலுக்குவதினால் வயிறு சார்ந்த கோளாறுகள் தான் அதிகம் ஏற்படுகின்றன. இதனால், குடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Shaking Hands Is Bad For Health

Shaking hands is apparently one of the worst things you can do. It is not at all healthy and can bring on a lot of diseases. Take a look at these effects.
Desktop Bottom Promotion