For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டையை ஏன் ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா?

By Maha
|

தற்போது ப்ரிட்ஜ் என்ற ஒன்று வந்ததும் வந்தது, பல ஆண்கள் மிகவும் வருத்தப்படுகின்றனர். ஏனெனில் வீட்டில் ப்ரிட்ஜ் இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் அனைத்தையும் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தான் தீங்கு விளையும்.

எப்படி சமைத்த உணவை ப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லையோ, அதேப் போல் நாம் வாங்கும் முட்டையையும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். உண்மையிலேயே இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும். ஆனால் அதுவே உண்மை. அது ஏன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விரைவில் கெட்டுப் போகும்

விரைவில் கெட்டுப் போகும்

அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப் போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப் போல் திரிந்துவிடுகிறதாம்.

முட்டை ஓட்டில் பாக்டீரியா

முட்டை ஓட்டில் பாக்டீரியா

ஐரோப்பிய முட்டை மார்கெட்டிங் ஒழுங்குவிதிகளின் படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பின் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே செல்லுமாம். எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிடுங்கள் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரியுங்கள்.

முட்டையின் மேல்தோல் இருந்தால்...

முட்டையின் மேல்தோல் இருந்தால்...

நீங்கள் வாங்கும் முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதில் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.

கெட்டுப் போன முட்டை

கெட்டுப் போன முட்டை

ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா இருந்து, அதனை ப்ரிட்ஜில் வைத்து பராமரித்தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். எனவே இதனைத் தவிர்க்க வேண்டுமெனில், அறைவெப்பநிலையிலேயே பராமரியுங்கள்.

கேக் செய்ய முடியாது

கேக் செய்ய முடியாது

ஒருவேளை நீங்கள் முட்டையைப் பயன்படுத்தி கேக் செய்ய நினைப்பவராயின் அதனை ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்காதீர்கள். ஏனெனில் ப்ரிட்ஜில் வைக்கும் முட்டையினுள் உள்ள கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால், அதைக் கொண்டு கேக் செய்ய நினைத்தால், அந்த கேக் கடினமாக இருக்கும்.

முட்டை கெட்டுப் போய்விட்டதை அறியும் சோதனை

முட்டை கெட்டுப் போய்விட்டதை அறியும் சோதனை

நீங்கள் வாங்கிய முட்டை பிரஷ்ஷாக உள்ளதா அல்லது கெட்டுப் போயுள்ளதா என்பதை அறிய, ஒரு பெரிய பௌலில் நீரை நிரப்பி, அதில் முட்டையைப் போட்டு, முட்டை மிதந்தால், அந்த முட்டை கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Eggs Should Not Be Kept In The Fridge

Do you love to store your eggs in the fridge? Well, if youve got the habit, it is time to quit now. Take a look at why eggs should not be stored in fridge.
Story first published: Saturday, October 17, 2015, 11:38 [IST]
Desktop Bottom Promotion