For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை எது பலவீனப்படுத்துகிறது என்று தெரியுமா?

By Maha
|

உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருந்தால், முதலில் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்றியைத் தெரிவியுங்கள். ஆனால் நீங்கள் அடிக்கடி சளி, இருமல் அல்லது காய்ச்சல் என பாதிக்கப்பட்டால், உடலைத் தாக்கிய பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாத அளவில், உங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

சரி, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்ய நிறைய காரணிகள் உள்ளன. அதில் ஒருசில உணவுகளும், தூக்கமின்மையும் ஓர் காரணம். நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த என்ன செய்வது? நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும் உணவுகளை உண்பது தான் முதன்மையான வழி. இதனால் உடலுறுப்புக்களின் செயல்பாடுகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

அதுமட்டுமின்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையிழக்கச் செய்யும் நமது செயல்கள் என்னவென்று தெரிந்து, அவற்றைத் தவிர்த்து வரவும் வேண்டும். சரி, இப்போது நம் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்யும் அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

அனைவருக்குமே சிகரெட்டில் ஏராளமான கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள் உள்ளன என்பது தெரியும். இந்த கெமிக்கல்கள் முதலில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தான் தாக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்து, பின் பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கும். எனவே முதலில் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

அதிகப்படியான வெயில்

அதிகப்படியான வெயில்

நீங்கள் வெயிலில் அதிகம் சுற்றும் போது, சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிக அளவில் இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை குறையும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மோசமான சுகாதாரம்

மோசமான சுகாதாரம்

நீங்கள் உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், அதனால் முதலில் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் தான் பாதிக்கப்படும். அதில் சரியாக பற்களை துலக்காமல் இருப்பது, உணவை உண்பதற்கு முன் கைகளைக் கழுவாமல் இருப்பது போன்றவை உங்களின் உடலில் கிருமிகளின் வளர்ச்சியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.

அதிகப்படியான ஆன்டி-பயாடிக்ஸ்

அதிகப்படியான ஆன்டி-பயாடிக்ஸ்

அளவுக்கு அதிகமாக ஆன்டி-பயாடிக்ஸ் எடுத்து வந்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை குறைந்துவிடுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஆன்டி-பயாடிக்ஸ் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுக்காதீர்கள்.

உடலுழைப்பு இல்லாமை

உடலுழைப்பு இல்லாமை

நீங்கள் தினமும் சிறு உடற்பயிற்சிகளை செய்யாமல் இருந்தால், உடலில் சீராக இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையிழக்கும். எனவே ஓய்வு நேரத்தில் எந்நேரமும் படுத்தவாறு அல்லது டிவி பார்த்தவாறு இருக்காமல், சிறு உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

தூக்கத்தின் போது உடல் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்கிறது. ஆனால் ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காமல் இருந்தால், அதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, உடலின் வலிமையும் குறைந்து உடல் சோர்வடைந்துவிடும்.

மது

மது

மதுவை அளவுக்கு அதிகமாக பருகினால் முதலில் நோயெதிர்ப்பு மண்டலம் தான் பலவீனமாக்கப்படும். எனவே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், மது அருந்தும் பழக்கத்தை மெதுவாக குறைத்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Weakens Your Immune System?

Do you know what weakens your immune system? There are several factors that may cause a weak immune system. Read on to know more.
Desktop Bottom Promotion