For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களை எது இளமை ஆக்குகிறது, எது முதுமை ஆக்குகிறது என்று தெரியுமா?

|

வெளித் தோற்றத்திற்கும், வயதிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது 100ல் ஒருசிலருக்கு தான் ஒத்துப் போகும். ஏனெனில், தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் அவர்களது வயதுக்கு ஏற்ற உடல்நலத்தோடு இருப்பதில்லை. சிலர் நாற்பதை தொட்ட பிறகும் கூட காலேஜ் முடித்து வந்தது போல காட்சி அளிப்பார்கள்.

சிலர் கல்லூரி முடிக்கும் வயதிலேயே குழந்தைப்பெற்று எடுத்தவர்கள் போல காட்சியளிப்பார்கள். இதற்கு காரணம் அவரவர் உடல்நலம் தான் என்பதை நாம் எப்போதும் மறுக்க முடியாது. உடற்திறன், கொழுப்பு, இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், எலும்பின் வலிமை என அடிப்படையாக நாம் வலிமையாக இருக்க சிலவற்ற பேணிக்காக்க வேண்டும்.

இதைப் பொருத்து தான் நீங்கள் இளமையாக இருக்கிறீர்களா, முதுமையாக இருக்கிறீர்களா என அறிய முடியுமே தவிர வயது என்பது வெறும் எண்ணிக்கை தான்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளர்ச்சிதை மாற்ற விகிதம்

வளர்ச்சிதை மாற்ற விகிதம்

முப்பது வயதை கடக்கும் போது, அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் உங்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றம் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும். எனவே, நீங்கள் முப்பது வயதில் இருந்தாவது உணவு முறையிலும், உணவு தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும்.

தசை வலிமை

தசை வலிமை

வயதாக வயதாக தசையின் வலிமையில் குறைவு ஏற்படுவது இயல்பு. எனவே, தினமும் உடற்பயிற்சி செய்து உங்கள் உடலை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

காற்று திறன் (சுவாசிக்கும் திறன்)

காற்று திறன் (சுவாசிக்கும் திறன்)

உங்கள் நுரையீரலின் திறன் மிகவும் முக்கியம். ஆக்சிஜன் சீரான முறையில் உடலுக்குள் செல்லவில்லை எனில், தானாகவே உங்கள் உடல் உறுப்புகளின் செயல் திறன் குறைய ஆரிம்பித்துவிடும். இதனால் தான் உங்களுக்கு உடல் சோர்வு ஏற்பட காரணம். எனவே, ஜாக்கிங், வாக்கிங் போன்றவற்றில் ஈடுபட வேண்டியது அவசியம். இது நுரையீரல் நன்கு விரிந்து, காற்றை நன்கு உள்வாங்க செய்ய உதவும்.

உடற்திறன்

உடற்திறன்

உங்கள் வயதை தீர்மானம் செய்வது வருடங்கள் அல்ல உடற்திறன் தான். அறுபது வயதிலும் புஷ்டியாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். இருபது வயதிலேயே உடற்திறன் இன்றி இருப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கொழுப்பு சதவீதம்

கொழுப்பு சதவீதம்

உங்கள் வளர்சிதை மாற்றத்தில் குளறுபடி செய்வதே இந்த கொழுப்பு தான். எனவே, அதிகம் உங்கள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எலும்பின் அடர்த்தி

எலும்பின் அடர்த்தி

உங்கள் எலும்பின் வலிமை மிகவும் அவசியம். இன்றெல்லாம் முதியவர்களுக்கு பேருந்தில் எழுந்து இடம் கொடுக்க கூட மனம் இல்லாத அளவு எலும்பில் வலிமை குறைவு உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, எலும்பின் வலிமை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

உங்கள் வயதுக்கு ஏற்ப இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் பாதுகாக்க வேண்டயது அவசியம். உங்கள் உணவுப் பழக்கத்தினால் தான் பெரும்பாலும் இரத்த சர்க்கரை அளவு பாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இரத்த சர்க்கரை அளவில் கோளாறு ஏற்படும் போது நீரழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

உங்கள் உடலில் இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக் கொண்டீர்கள் எனில், நீங்கள் எப்போதுமே இளமையாக உணரலாம். ஏனெனில், இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் உடல்நல பிரச்சனைகள் நிறைய ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, நீங்கள் இளமையாக இருப்பதும், முதுமையாக உணர்வதும் உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Makes You Old And What Keeps You Young

Though we associate grey hair or wrinkles on the skin as few of the most common factors in signifying old age, experts state that there are others that can.
Story first published: Friday, November 20, 2015, 14:55 [IST]
Desktop Bottom Promotion