For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

By John
|

இந்தியர்கள் கண்டெடுத்த அற்புத மருத்துவம், ஆயுர்வேதம். இயற்கையான முறையில், இயற்கை மூலிகைகளைக் கொண்டு அனைத்து வகை உடல் நல குறைபாடுகளுக்கும் தீர்வுக் காணும் முறையினைக் கொண்டது. ஆனால், இன்று நாம் இதைத் தவிர்த்து பக்கவிளைவுகளை பக்காவாக தரும் ஆங்கில மருத்துவத்தை தான் நம்பி ஆட்டு மந்தை போல விழுந்துக் கொண்டிருக்கிறோம்.

ஆயுர்வேத முறையில் அவரவர் உடல்நிலையை அறிந்து மருத்துவம் அளிக்கப்படும். ஆனால், ஆங்கில மருத்துவத்தில், அனைவருக்கும் ஒரே வகையான் மருந்துகளும், மருத்துவ முறைகளும் தான் பின்பற்ற படுகின்றன.

உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு தனி நபரின் உடல்நிலைக்கும் தனிப்பட்ட மருந்து தான் பயனளிக்கும். அவ்வாறான மருத்துவ முறை தான் சரியானது. சமீபக் காலங்களாக ஆங்கில மருத்துவத்திலும் மரபணு சார்ந்து மருத்துவம் செய்ய பெரும் புரட்சி ஏற்பட்டு வருகிறது.

இனி, நம் பாம்பரிய மருத்துவமான ஆயுர்வேத மருத்துவத்தின் படிஉங்கள் உடல் வகையை பற்றி அறிந்துக்கொள்வோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாத - உடல் உருவம்

வாத - உடல் உருவம்

வாத, உடல் வகையை சேர்ந்தவர்களுக்கு, உடல் எடை அதிகரிப்பது கடினமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களது வளர்சிதை மாற்றமானது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க செய்யும். ஆனால், அவர்களுக்கு எலும்புகளின் வலிமை அதிகமாக இருக்கும். இவர்களது சருமம் மிகவும் வறட்சியாக இருக்கும். இவர்களது நாடி வேகமாக இருக்கும்.

வாத - வாழ்க்கை முறை

வாத - வாழ்க்கை முறை

இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சோர்வடையாமல் வேலை செய்வார்கள். இவர்களது தூக்கம், உறக்கம் [போன்றவை எல்லாம் சரியான நெறியில் இருக்காது. நேரம் தவறி செய்வார்கள். இவர்களது உடலுறவு தன்மை அதீத வகையில் இருக்கும்.

வாத - மனநிலை

வாத - மனநிலை

இவர்களது மனநிலை மிக வேகமாக மாறும். வெற்றி, தோல்வி என எந்த நிலையிலும் இவர்களது மனநிலை அதே இடத்தில தேங்கி நின்றுவிடாது. இவர்கள் எந்த விஷயத்தையும் மிக எளிதாக, விரைவாக கற்றுக்கொள்வார்கள்.

MOST READ: குளிச்சதுமே முதல்ல எந்த உடல் பாகத்த துவட்டுவீங்க? பக்கத்துல யாரும் இல்லன்னா டக்குன்னு இதப் படிங்க!

வாத - இயற்கை

வாத - இயற்கை

இவர்களுக்கு கூச்ச சுபாவம் இருக்கும். தன்னம்பிக்கை குறைவு. பொறுமை இருக்காது, நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவர்கள். மன அழுத்தம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வாத - பேசும்முறை

வாத - பேசும்முறை

மிக வேகமாக பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகமாக பேசுவார்கள், கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

பித்த - உடல் உருவம்

பித்த - உடல் உருவம்

உடல் எப்போதும் சூடாக உணரும் பண்புடையவர்கள். உடல் எடை அளவில் சரியாக இருப்பவர்கள். இவர்களுக்கு தலைமுடி நரைத்தலும், சொட்டை விழுகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு செரிமானம் இலகுவாக நடக்கும். சருமம் மென்மையாகவும், சதை போட்டும், மச்சங்கள் அதிகமாகவும் இருக்கும்.

பித்த - வாழ்க்கை முறை

பித்த - வாழ்க்கை முறை

உணவு மற்றும் உடலுறவில் மிகவும் வலிமையாக இருப்பார்கள். சுமாராக தான் தூங்குவார்கள். இவர்களை தொந்தரவு செய்வது கடினம். நாடி வலிமையாக இருக்கும்.வெயில் இவர்களுக்கு பிடிக்காது.

பித்த - மனநிலை

பித்த - மனநிலை

புத்திசாலியாக இருப்பார்கள், கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்கள், லட்சிய வெறி இருக்கும், வாழ்க்கையை விரும்பி வாழ்வார்கள், எதையும் கட்சிதமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எளிதாக எரிச்சல் அடைவார்கள்.

பித்த - இயற்கை

பித்த - இயற்கை

காதலை வெளிபடுத்த தயங்குவார்கள். பணத்தை பத்திரமாக செலவு செய்வார்கள். தலைமை குணம் இருக்கும். போராடும் குணம் உள்ளவர்கள்.

MOST READ: பெண்களுக்கு பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பும் நமைச்சலும் இருக்கா? உடனே என்ன செஞ்சா சரியாகும்?

பித்த - பேசும் முறை

பித்த - பேசும் முறை

மிகவும் சத்தமாக பேசும் வழக்கு கொண்டிருப்பார்கள்.

கபம் - உடல் உருவம்

கபம் - உடல் உருவம்

உருவத்தில் பெரிதாக இருப்பார்கள், அகண்ட தோள் மற்றும் இடை , அடர்த்தியான் கூந்தல் மற்றும் உடல் உறுதி அதிகமாக இருக்கும். இவர்களுக்கு உடல் எடை அதிகமாகவும், பற்கள் மிக வலிமையாகவும், நாடி சரியான அளவில் இருக்கும்.

 கபம் - வாழ்க்கை முறை

கபம் - வாழ்க்கை முறை

பசியின்மை குறைவாக இருக்கும், செரிமானமும் மிக மெதுவாக தான் செயல்படும். ருசியாகவும், வகை வகையான உணவுகளும் சாப்பிட விரும்புவார்கள். உடல் உழைப்பு மிகவம் குறைவாக தான் செய்வார்கள். நிறைய நேரம் தூங்கும் பண்புடையவர்கள். ஆயினும்

நிறைய ஊக்குவிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

கபம் - மனநிலை

கபம் - மனநிலை

மெதுவாக கற்றுக்கொள்ளும் திறன் உடைய இவர்கள், அனைத்தையும் நினைவில் கொள்வார்கள். உணர்ச்சிகளை சமநிலையில் பாதிகப்பதில் வல்லவர்கள்.

கபம் - இயற்கை

கபம் - இயற்கை

தங்களது சுற்றுவட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த நபராக இருப்பார்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்கள். உணர்ச்சிவசப்படுவதில் மெல்ல மெல்ல ஆரம்பித்து உச்சம் அடையும் பண்புடையவர்கள். குழந்தைத்தனமான, விரும்பும் வகையில் இருப்பார்கள். கூட்டமாக இருக்க விரும்புவர்கள்.

கபம் - பேசும் முறை

கபம் - பேசும் முறை

பொறுமையாகவும், அமைதியாகவும் பேசும் மனோபாவம் கொண்டவர்கள்

MOST READ: குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா? உண்மை என்னன்னு நீங்களே பாருங்க...

தேவைகள்

தேவைகள்

உங்கள் உடலுக்கு என்ன தேவை என அறிந்துக் கொள்ளலாம். ஊட்டச்சதில் இருந்து, மருத்துவம் வரை உங்கள் உடலுக்கு எந்த வகையான மருத்துவம் தேவை என்பது வரை அறிந்துக் கொள்ளலாம்.

சமநிலை

சமநிலை

உங்கள் உடல்நிலை மற்றும் மனநிலையை சமநிலையில் பேணிக்காக்க இது உதவும். மற்றும் உங்கள் உடல்நிலை சமநிலையை விட்டு தடுமாறும் போது தெரிந்துக்கொள்ள உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Your Ayurvedic Body Type

Everyone should know about their ayrvedic body type, which will helps you to improve your physical health.
Desktop Bottom Promotion