For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 நாட்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து அதிசயிக்கத்தக்க வகையில் மாறிய நால்வர்!!!

|

எந்த மதம் சார்ந்தவராக இருப்பினும், ஏதேனும் ஓர் மத பின்பற்றுதலின் காரணமாக விரதம் அல்லது நோம்பு கடைப்பிடித்து வருவதை நாம் கண்டிருப்போம். அந்த நாட்களில் அவர்கள் பெரும்பாலும் வெறும் நீர் மட்டும் பருக வேண்டிய சூழல் இருக்கும்.

இதனால் என்ன பயன் இருக்கிறது என நாம் இந்த விரதங்கள், நோம்புகளை கடைப்பிடித்து வருகிறோம் என்ற எண்ணம் இன்றைய தலைமுறையினர் மத்தியில் பரவலாக இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்தது தான். அது ஏன் என்பதற்கான விடையை தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நால்வரின் பயணம்

நால்வரின் பயணம்

காபி, ஒயின், சோடா பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றை அன்றாடம் குடிக்கும் பழக்கம் கொண்ட ஸ்டீவென், டேவிட், எல்லா, கேட்டீ என்ற நான்கு நபவர்களை தெரிந்தெடுத்து. அவர்களின் உணவு பழக்கத்தில் வெறும் தண்ணீர் மட்டும் புகுத்தப்பட்டது.

30 நாட்களும் வெறும் தண்ணீர் மட்டுமே உணவு

30 நாட்களும் வெறும் தண்ணீர் மட்டுமே உணவு

காலை, மதியம், மாலை, இரவு என அனைத்து வேளைகளிலும் இந்த நான்கு நபர்களும் வெறும் தண்ணீரை மட்டுமே தங்களது முழுநேர உணவாக உட்கொண்டு வந்தார்கள்.

முதல் மூன்று நாட்கள் வறட்சி

முதல் மூன்று நாட்கள் வறட்சி

இவர்களுக்கு பிடித்த காபி, ஒயின், சோடா பானங்கள் என அனைத்தையும் தவிர்த்து வெறும் நீரை மட்டும் குடிக்க ஆரம்பித்த மூன்று நாட்களில் இவர்க தங்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது, தலைவலி வருகிறது என்று பல குற்றசாட்டை கூறி வந்தனர். முதல் வர இறுதியில் இருந்து ஓர் மாற்றத்தை உணர ஆரம்பித்தனர்.

உடலில் புத்துணர்ச்சி

உடலில் புத்துணர்ச்சி

முதல் மாத இறுதியில் இவர் தங்களை புதியதாக உணர ஆரம்பித்தனர். உடலில் ஏதோ புதியதாய் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது போன்று உணர்வதாக கூறினார்.

நல்ல உறக்கம்

நல்ல உறக்கம்

மற்றும் அடுத்தடுத்த நாட்களில் நன்கு உறங்கியதாகவும். முன்பு எப்போதும் இல்லாதது போல நல்ல உறக்கம் கிடைக்கிறது என்றும் நான்கு பேர் கூறியுள்ளனர்.

உடலில் நீரேற்றம்

உடலில் நீரேற்றம்

நமது உடலில் நீரின் அளவை சரியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த முப்பது நாட்கள் வெறும் நீரை மட்டுமே குடித்த வந்த நான்கு நபர்களின் உடலில் நீரேற்றம் சீரான முறைக்கு திரும்பியது. உடலில் நீரின் அளவு குறைவதால் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிப்பு அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியமான உடல்நிலை

ஆரோக்கியமான உடல்நிலை

30 நாட்கள் வெறும் நீரை மட்டுமே குடித்த இந்த நான்கு நபர்களும், ஒரு மாதம் கழித்து தாங்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறோம் என்று கூறியுள்ளனர்.

விரும்பியதை வெறுத்தனர்

விரும்பியதை வெறுத்தனர்

இவர்கள் விரும்பி பருகி வந்த ஒயின், காபி, சோடா போன்றவற்றை விட தண்ணீர் தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தனர்.

அதிகாலை எழும் பழக்கம்

அதிகாலை எழும் பழக்கம்

இந்த 30 நாட்கள் தண்ணீர் குடிக்கும் பங்கேடுப்பின் மூலமாக அதிகாலை எழும் பழக்கம் ஏற்பட்டது. மற்றும் நள்ளிரவு ஏற்படும் தூக்கமின்மை தொலைந்துபோனது என்றும் இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இடையே விளையாடும் பயிற்சியும்

இடையே விளையாடும் பயிற்சியும்

இந்த 30 நாட்களிலும் இடையிடையே விளையாட்டும், பயிற்சியும் செய்து வந்துள்ளனர் இவர்கள். சத்தியமாக முடியவே, முடியாது என்று இவர்கள் தொடங்கிய இந்த 30 நாட்கள் பயணம், நல்ல ஆரோக்கியமான உடல்நலனுடன் முடிவு பெற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens When You Drink Only Water For One Month

Do you know what happens when you drink only water for one month? Read here.
Story first published: Tuesday, September 1, 2015, 12:00 [IST]
Desktop Bottom Promotion