For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?

By Ashok CR
|

நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும். அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என கூறுவார்கள். சில நேரங்களில் புரதம், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பல பயனுள்ள பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இது ஒரு இயல்பான நிலை தான். உங்கள் சிறுநீரின் நிறம் உங்களது உடல் ஆரோக்கியத்தை தெளிவாக காட்டி விடும். அதை வைத்து கிட்னி நோய்கள் அல்லது பிற நோய்கள் உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம்.

கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்!!!

அதனால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை உங்கள் சிறுநீரின் நிறம், மனம் மற்றும் நிலைத்தன்மை தெளிவுப்படுத்தி விடும். சிறுநீர் பரிசோதனையை கொண்டு பல விதமான ஆய்வு சோதனைகள் நடைபெறுகிறது. இருப்பினும் சிறுநீரின் நிறம் மாறுவதால் உடல் ஆரோக்கியத்தில் எவ்வகையான தாக்கம் உள்ளது என்பதை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும். வைக்கோல் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால் அது ஆரோக்கியமான சிறுநீராக கருதப்படுகிறது. இதை தவிர மற்ற எந்த ஒரு நிறமாக சிறுநீர் இருந்தாலும் சரி, உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டு அதற்கு ஒரு அர்த்தம் உண்டு.

மலச்சிக்கல் ஏற்படுவது பற்றி நீங்கள் அறிந்திராத 10 காரணங்கள்!!!

பொதுவாகவே நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் தான் சிறுநீரின் நிறம் மாறுதல் சம்பந்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் நீங்கள் உண்ணும் உணவு மற்றும் மருந்துகளின் அடிப்படையிலும் கூட சிறுநீரின் நிறம் மாறலாம். மருந்து உண்ணுவதை நிறுத்தியவுடன் சிறுநீரின் நிறமும் இயல்பு நிலைக்கு மாறலாம்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்!!!

சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி என்ன கூறுகிறது என்பதை பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூற போகிறோம். சில சிறுநீர் நிறங்களை பற்றியும், உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்படுத்தி பார்க்கையில் அதற்கான அர்த்தங்களையும் இப்போது பார்க்கலாம். இது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெளிவாக தெரிதல்

தெளிவாக தெரிதல்

உங்கள் சிறுநீர் தெளிவாக தெரிந்தால், நல்ல நீர்ச்சத்துடன் உள்ளீர்கள் என்பதை அது குறிக்கும். இருப்பினும் சில நேரங்களில், நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடிக்கிறீர்கள் என்பதையும் கூறும். இதனால் தண்ணீர் நஞ்சாதல் ஏற்படும் இடர்பாடு உள்ளது. அளவுக்கு அதிகமான நீர்ச்சத்து என்றால் நீங்கள் தவிக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என அர்த்தமாகும். இதனால் உடலில் உள்ள உப்புகளை நீர்த்து போக செய்து உடலுக்கு தீங்கை விளைவிக்கிறீர்கள். இது எந்த ஒரு ஆபத்தான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தாது தான். ஆனாலும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என உடலை கஷ்டப்படுத்தாதீர்கள்.

நிறமில்லாத சிறுநீர்

நிறமில்லாத சிறுநீர்

நலல் தெளிவாக, நிறமே இல்லாமல் சிறுநீர் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். ஆம், உங்கள் சிறுநீரில் நிறமே இல்லையென்றால், அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக தான் இருக்கும். தொடர்ச்சியான தாகம் மற்றும் தொடர்ச்சியான சிறுநீர் கழித்தால் ஆகியவை இதற்கான மற்ற அறிகுறிகளாகும். அதிகமாக எப்போ பார்த்தாலும் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால, நீங்கள் சர்க்கரை நோய்க்கான சோதனையை மேற்கொள்ள வேண்டும். நிறமே இல்லாத சிறுநீரும் கூட உடல் நலத்தில் தாக்கத்தை கொண்டிருக்கும்.

வெளிரிய வைக்கோல் முதல் தேன் நிறம் வரை

வெளிரிய வைக்கோல் முதல் தேன் நிறம் வரை

வைக்கோல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் சிறுநீர் ஆரோக்கியமாக உள்ளது என அர்த்தமாகும். ஆனால் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறிக்கொண்டே போனால் நீர்ச்சத்து குறைந்து கொண்டே வருகிறது என அர்த்தமாகும். நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க அவேண்டி வரும். சிறுநீர் அதிக அடர்த்தியான நிறத்தில் இருந்தால், கடுமையான மனத்துடன் வெளியேறும். சில உணவுகளும் கூட உங்கள் சிறுநீரை அடர்ந்த மஞ்சளாக மாற்றும். உதாரணத்திற்கு, பீட்ரூட் உட்கொண்டால் உங்கள் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறும்.

பழுப்பு நிறம்

பழுப்பு நிறம்

உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருந்தால், சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறும். நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறலாம். உங்கள் நுரையீரல் சரியாக செயல்படவில்லை என்றால், மலம் மூலமாக வெளியேற வேண்டிய பித்த உப்புகள் சிறுநீர் வழியாக வெளியேறும். அதற்கு காரணம் இரத்தத்தில் அவைகள் அடர்த்தியாக இருப்பதே. ஹெபடைடிஸ் (ஈரல் அழற்சிபறை) எனப்படும் நுரையீரல் அழற்சி, இதற்கான ஒரு உதாரணமாகும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் கூட இப்படி ஏற்படலாம். அதனால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

பிங்க் முதல் சிவப்பு நிறம் வரை

பிங்க் முதல் சிவப்பு நிறம் வரை

சிறுநீரில் இரத்தம் கலக்கும் போது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேற்றும் . இதனை ஹீமெச்சூரியா என கூறுகிறார்கள். சிவப்பு என்றாலே பொதுவாக எச்சரிக்கைக்கான நிறமாகும். சிறுநீரக பாதையில் தொற்றுக்கள், கிட்னி மற்றும் சிறுநீர்ப்பைகளில் கற்கள், கிட்னி, புரோஸ்டேட் அலது சிறுநீர்ப்பையில் புற்று நோய் போன்ற காரணங்களால் இரத்த கசிவும் சிவப்பு சிறுநீரும் வெளியேறும். இந்த நிலை ஏற்படும் போது சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் சிறுநீர் கழிப்பதே சிரமமாகி விடும். நீங்கள் உட்கொண்ட சில உணவுகளாலும் கூட உங்கள் சிறுநீரின் நிறம் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் வெளியேறும். அதனால் நீங்கள் முதலில் அதனை நிறுத்தி விட்டு பார்க்க வேண்டும். பீட்ரூட், ப்ளாக்பெர்ரி மற்றும் இளவேல் சீனி போன்ற உணவுகள் இதற்கு காரணமாக இருக்கும். ஆனால் உணவுகளால் இந்த நிறம் மாற்றம் ஏற்படாமல், பல முறை நடந்தால், அது ஆபத்தான உடல்நல பிரச்சனையாக கூட இருக்கலாம்.

நீல நிறம்

நீல நிறம்

இந்த அரிதான நிலையை பார்ஃபிரியா என கூறுவார்கள். இது ஒரு மரபுரிமை என்சைம் நிலையாகும். இது ஒருவரின் சிறுநீர் நிறத்தை நீலம் அல்லது ஊதா நிறத்தில் மாற்றும். இருப்பினும், இந்த சிறுநீரில் நீலம் கலந்த இளஞ்சாயம் தென்படும். இது சாயங்கள் கலந்துள்ள சில உணவுகள் மற்றும் மருந்துகளை உண்ணுவதாலும் கூட ஏற்படலாம். ட்ரையம்டெரென் அல்லது வயாக்ரா போன்ற மாத்திரைகளை உண்ணுவதால் சிறுநீர் நிறம் இப்படி மாறும்.

பச்சை

பச்சை

சிறுநீரில் சீழ் இருந்தால், சிறுநீர் பச்சை நிறத்தில் வெளியேறலாம். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிறுநீரக பாதை தொற்றுக்கள் தான். தண்ணீர் விட்டான் கொடி போன்ற உணவுகளாலும் கூட இது ஏற்படலாம். இவைகளை சாப்பிட்ட பின் சிறுநீர் கழிக்கையில் ஒரு வித மனமும் உண்டாகும். கருப்பு அதிமதுரம் அல்லது குடல்களில் உறிஞ்சப்படாமல் இருக்கும் அடர்த்தியான நிறங்களை கொண்டுள்ள சில உணவுகளும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண்டி-பையாடிக்ஸ் போன்ற சில மருந்துகளை உண்ணுவதாலும் கூட சிறுநீர் பச்சையாக வெளியேறும்.

நுரை கலந்துள்ள சிறுநீர்

நுரை கலந்துள்ள சிறுநீர்

சிறுநீரில் புரதம் வெளியேறினாலும் கூட இது ஏற்படலாம். இது கிட்னி அல்லது பித்தப்பை பிரச்சனியாக இருக்கலாம். எனவே இந்த நிலையை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இது ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

பால் நிறத்திலான சிறுநீர்

பால் நிறத்திலான சிறுநீர்

நுண்ணிய இரத்தம் இருப்பதால் பால் நிறத்திலான சிறுநீர் வெளியேறலாம். சிறுநீர் பாதையில் தொற்று, பித்தப்பை தொற்று அல்லது கிட்னி கற்கள் போன்றவைகளாலும் கூட இது ஏற்படலாம். வெட்டை நோய் போன்ற பாலியல் ரீதியான நோய்களால் கூட உங்கள் சிறுநீரின் நிறம் மாறலாம். யோனிமடற்கழிவு ஏற்பட்டாலும் கூட சிறுநீர் பால் நிறத்தில் வெளியேறும்.

கருப்பு

கருப்பு

ரசாயனங்கள் மற்றும் இதர உடல்நல பிரச்சனைகளால் கருப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம். அப்படியானால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Does Your Urine Colour Say About Your Health

Colour of urine is health indicator of diseases. Urine colour change shows diabetes. Brown and red urine causes are many.
Desktop Bottom Promotion