முப்பது வயதுக்கு மேல் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

Subscribe to Boldsky

முப்பது வயதுக்கு மேல் ஆண்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களின் உடலிலும் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படும். வயதாக வயதாக மனிதர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது சாதாரணம் தான்.

ஆனால், இயற்கையை மிஞ்சி, நமது வாழ்வியல் முறை, உணவுப் பழக்கத்தில் அக்கறையின்மை போன்றவை இம்மாற்றங்களை வேறு மாதிரியான விளைவுகள் ஏற்படும் வண்ணம் மாற்றிவிடுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்து, புற்றுநோய் வரை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம்

சில ஆண்களிடம், முப்பது வயதுக்கு மேல் தான் புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் தென்படுகிறது. சிறிநீர் கழிக்கும் போது வலி, ஆண்மை குறைபாடு, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. இவை, புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மட்டும் அல்ல, சாதாரண தொற்றாக கூட இருக்கலாம். ஆனால், பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

தசை வலு இழப்பு

முப்பது வயதிற்கு மேல் ஆண்களிடம் தசை வலு இழப்பு ஏற்படலாம். இதற்கான ஒரே தீர்வு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடுதல் தான்.

எலும்பு தேய்மானம் ஏற்படுதல்

பெண்கள் மட்டுமின்றி இப்போது ஆண்களின் மத்தியிலும் எலும்பு தேய்மான பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், உட்கார்ந்தே வேலை செய்வது, அதிகம் சோடா பானங்கள் குடிப்பது.

உடல் எடை அதிகரித்தல்

இடுப்பை சுற்றி டயரை கட்டி கொண்டு திரிவது அதிகமாகலாம். முப்பது வயதிற்கு மேல் தான் ஆண்களுக்கு அதிகம் தொப்பை அதிகரிக்கிறது. இது தான் இதய பிரச்சனை, நீரிழிவு போன்றவை ஏற்படவும் காரணமாக இருக்கிறது.

மன அழுத்தம்

குழந்தை, இல்லறம், படிப்பு செலவு என முப்பது வயதிற்கு மேல் தான் பண நெருக்கடி ஆண்களுக்கு ஏற்படுகிறது. இதனால தான் நிறைய ஆண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

இதய பாதிப்புகள்

இதயத்தை கவனிக்க வேண்டிய காலம் இங்கிருந்து தான் தொடங்குகிறது. இரத்த கொதிப்பு, இரத்த கொழுப்பு, இரத்த சர்க்கரை அளவு என இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சரியான உணவு முறையை பின்பற்றி உங்கள் இதயத்தை நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.

டெஸ்டோஸ்டிரோன் அளவு

டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆண்களுக்கு முப்பது வயதில் இருந்து தான் குறைய ஆரம்பிக்கிறது. இது மெல்ல மெல்ல, இல்லற வாழ்க்கையை பாதிக்கலாம். இதனால் மன அழுத்தம் ஏற்பட கூட வாய்ப்பிருக்கிறது.

விதை புற்றுநோய்

முப்பது வயதுக்கு மேல் ஆண்களுக்கு ஏற்பட கூடிய அபாய தாக்கங்களில் ஒன்று விதை (Testicular) புற்றுநோய். விதையில் வலி ஏற்படுவது இதன் அறிகுறியாக கருதப்படுகிறது. வலி ஏற்படுவது போன்று உணர்ந்தால், உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

What changes after 30 in men

What changes after 30 in men? Well, many bodily changes like muscle contraction may occur. Read on to know about many physical changes after 30.
Story first published: Monday, September 7, 2015, 12:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter