For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் சிறுநீருடன் விந்தணு வெளிவருவதற்கான காரணங்கள்!!!

By Ashok CR
|

பொதுவாக ஆண்களுக்கு சிறுநீர் வழியாக விந்தணு வெளியேறுவது அரிதான ஒன்றே. ஆனால் இவை நடப்பதற்கு இரண்டு பொதுவான காரணங்கள் உள்ளன. ஒன்று சுக்கியன் அழற்சி என்ற மருத்துவ பிரச்சனையால் ஏற்படுவது. இது புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைவதால் இந்நிலை ஏற்படும். மற்றொன்று, பிற்போக்கு விந்துதள்ளல். அதாவது விந்துதள்ளல் ஏற்படும் போது விந்தணு ஓட்டம் பின்னோக்கி இருந்து, மாட்டிக் கொள்வதால் உண்டாவது. இது சிறுநீர்ப்பை பிரச்சனைகளால் ஏற்படுவது. இந்த இரண்டு நிலைகளுக்கும் சிகிச்சை அளிக்கலாம். இருப்பினும் அது வரைக்கும் அசௌகரியமும் வலியும் ஏற்படலாம்.

இப்பிரச்சனை மிக தீவிரமாக மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் வேறு ஏதோ பெரிய பிரச்சனை என்பதற்கான அறிகுறி இது. தங்கள் சிறுநீரில் விந்தணுவும் சேர்ந்து வெளியேறுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் இந்த பிரச்சனையின் காரணத்தை கண்டுபிடிக்க உடனே ஒரு மருத்துவரின் உதவியை நாடிடுங்கள். பொதுவாக வெளியேறுவது விந்தணுவா என்பதை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறும் சளி அல்லது பஸ் ஆகியவற்றை பார்க்கும் போது, அதுவும் கூட விந்தணு போலவே தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are The Common Causes Of Sperm In Urine?

Men who suspect that they are releasing semen with their urine should usually get evaluated by a medical professional to get to the bottom of the issue, as well as to rule out other possible conditions.
Desktop Bottom Promotion