For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் குறுஞ்செய்தி அனுப்புவதன் பின்னணியில் நடக்கும் சில விசித்திரமான விஷயங்கள்!!!

|

குறுஞ்செய்தி அனுப்பும் தொழிநுட்பம் மட்டுமே மாறியிருக்கிறதே தவிர, அதன் முறையிலோ, எண்ணிக்கையிலோ, உபயோகிக்கும் விதத்திலோ எள்ளளவும் மாற்றம் ஏற்படவில்லை. பேஜரில் தொடங்கி, பழைய செங்கல் செட்டு மொபைலில் ஒற்றை வரி செய்தி, பிறகு எஸ்.எம்.எஸ்.., இதன் தொடர்ச்சியாய் பல கணினி உபயோக சாப்ட்வேர்கள், இப்போது வாட்ஸ்-அப் என பரிணாமம் மாறினாலும், பயன்படுத்தும் முறை மாறவே இல்லை.

மொபைல் ஃபோன் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்!!!

தலைவர் பாணியில் கூற வேண்டும் என்றால், "வயசானாலும், ஸ்டைல் மாறவே இல்ல!!!". ஈசலின் இறகுகளின் வேகத்தை விட வேகமாக செய்தியை டைப் செய்து அனுப்பும் திறன் பருவ வயது இளைஞர்களுக்கு இருக்கிறது. காதலில் இருப்பவர்கள் "அதுக்கும் மேல..."

செல்போன் யூஸ் பண்ணுவதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்!!!

நீங்கள் இவ்வாறு செய்து அனுப்பும் பின்னணியில் நடக்கும் சில விசித்திரமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுறவு வாழ்க்கையை அதிகரிக்கிறதாம்

உடலுறவு வாழ்க்கையை அதிகரிக்கிறதாம்

நேரில் முகத்திற்கு முன் பேச கூச்சப்படும் நபர்கள் கூட, குறுஞ்செய்தியில் "கசமுசா" பற்றி அதிகம் பேசுகிறார்கள். இது, இருபாலரையும் ஈர்த்து அதிகம் உடலுறவில் ஈடுபட தூண்டுகிறதாம்.

கழுத்து வலி

கழுத்து வலி

நீங்கள் அமர்ந்தவாறு, படுத்தவாறு தான் செய்தி அனுப்புவதாக நினைத்து வருகிறீர்கள். உங்களுக்கு ஏற்படும் கழுத்து மற்றும் முதுக்கு வலிக்குகாரணமே, தொடர்ந்து பல மணிநேரம் ஒரே நிலையில் உங்கள் கழுத்தை வைத்தவாறு செய்து அனுப்புவது தான்.

உணர்ச்சியை குறைக்கிறது

உணர்ச்சியை குறைக்கிறது

சிரிப்பு, அழுகை, காதல், காமம் என அனைத்து உணர்சிகளும் வெறும் ஸ்மைலி, எமொஜி எனப்படும் பொம்மைகளுக்குள் அடங்கிவிட்டது. நகைச்சுவை கூறி குறுஞ்செய்தி வந்தால் கூட சிரிக்கும் எமொஜியை அனுப்பிவிட்டு மொரைப்பாக தங்களது வேலையை செய்யும் ஆட்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். காதலிக்கு எமொஜி முத்தம் கொடுத்துவிட்டு, எதிரில் நண்பனை கடித்துகொதரும் ஆட்களும் இருக்கிறார்கள்.

பாதை மாறுகிறார்கள்

பாதை மாறுகிறார்கள்

பெரும்பாலும் குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் நடந்து செல்லும் நபர்கள் அவர்கள் செல்ல வேண்டிய பாதை மாறியோ அல்லது காலதாமதமாக தான் செல்கிறார்களாம். இதன் காரணத்தால் தங்களது வேலையில் கோட்டைவிட்டுவிடுகிறார்களாம்.

உறவுகளில் பிரியமும், பிரிவும்

உறவுகளில் பிரியமும், பிரிவும்

பல உறவுகளில் அதிகமாக பிரிவுகள் மற்றும் பிரியங்கள் ஏற்பட இந்த குறுஞ்செய்தி ஓர் கருவியாக இருக்கிறது. முக்கியமாக வாட்ஸ்-அப். தாங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தும் பதில் அளிக்காமல் இருக்கிறார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி உறவை உடைக்கிறது. மற்றும் அடிக்கடி அவரவர் புகைப்படங்கள், மற்றும் ஒலிப்பதிவு பகிர்வுகள் மூலம் உறவில் பிரியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உடல்நல முன்னேற்றம்

உடல்நல முன்னேற்றம்

சிலர் தங்களது மருந்து உண்ணும் வாடிக்கை, மருத்துவரை காண வேண்டிய வேளைகள் போன்றவற்றை தங்களது குறுஞ்செய்தியில் ரிமைன்டராக வைத்துக்கொண்டு, சரியான நேரத்திற்கு மருந்துகளை சாப்பிட்டு உடல்நலத்தை பேணிக் காக்கிறார்கள்.

உடல் எடை குறைகிறதாம்

உடல் எடை குறைகிறதாம்

ஒரு சிலர் நடந்தவாறே குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கம் கொண்டிருப்பார்கள். மணிக்கணக்காக மொபைலும் கைய்யுமாக குறுஞ்செய்தி அனுப்பியவாறு நடந்துக்கொண்டிருப்பர்கள். இவர்களுக்கே தெரியாது, இவர்களது உடல் எடை குறைவதற்கு இது தான் காரணம் என்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Things That Happen When You Send A Text

Do you know about the weird things that happen when you send a text? read here.
Story first published: Tuesday, July 28, 2015, 16:12 [IST]
Desktop Bottom Promotion