For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிமுறைகள்!!!

|

உடல் சூட்டை குறைக்க வழிதெரியாது இருக்கிறீர்களா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, உடல் சூடு என்பது கோளாறு அல்ல, அது அனைவரின் உடல் நிலையிலும் இயற்கையாக ஏற்படும் மாற்றம். ஆனால், உடல் சூடு அதிகரிக்கும் போது தான் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் சூடு என்பது பெரும்பாலும் உங்களது உணவுப் பழக்க வழக்கத்தின் காரணத்தினால் ஏற்படும் ஒன்றாகும். சில சமயங்களில் நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது கூட உடல் சூடு அதிகரிக்கும்.

உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்!!!

பெரும்பாலும் உடல் சூடு அதிகரிக்கும் போது உங்களது மூக்கில் இரத்தம் கசியும். உடல் சூட்டை தணிக்க எளிதான வழி, நீங்கள் நிறைய தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீரின் அளவு குறையும் போது கூட உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எனவே, உங்களது உடலின் நீரின் அளவை கட்டுக்குள் வைப்பதும் அவசியம். இனி உங்கள் உடலின் சூட்டை தணிப்பதற்கான வழிமுறைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

உடல் சூட்டை பெரும்பாலும் அதிகரிப்பது வறுத்த உணவுகள் தான். அதனால், முடிந்த வரைவறுத்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுங்கள். மற்றும் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது உங்களது உடல் சூட்டை தணிக்க உதவும்.

சோடியும்

சோடியும்

சோடியம் கலந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்த்திடுங்கள். ஏனெனில், இது உங்கள் உடல் சூட்டை அதிகரித்துவிடும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

மாதுளை ஜூஸ் உடன், பாதாம் எண்ணெய்யை கலந்து காலை வேளையில் எடுத்துக் கொண்டால், உடல் சூட்டை கட்டுப்படுத்தலாம்.

காரமான உணவு

காரமான உணவு

காரமான உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கும். எனவே, காரம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அல்லது உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாம்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீரில் சிறிது நேரம் கால்களை நனைய வைப்பது, உங்க உடல் சூட்டை தணிக்கும்.

சைவ உணவுகள்

சைவ உணவுகள்

சைவ உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்கள், உங்களது உடல் சூட்டை குறைக்க வெகுவாக உதவும்.

நட்ஸ்

நட்ஸ்

உடல் சூடு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், சில நாட்கள் நட்ஸை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில், நட்ஸ் உடல் சூட்டை அதிகரிக்கவல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Reduce Body Heat

Are you worrying about your body heat. dont worry there are few ways to reduce your body heat.
Story first published: Friday, February 27, 2015, 18:18 [IST]
Desktop Bottom Promotion