பேய் படத்தை தனியாக பார்த்தால் இரத்த உறைவு ஏற்படுமாம் - நெதர்லாந்து ஆய்வில் தகவல்!

By:
Subscribe to Boldsky

உங்களுக்கு பேய் படம் பார்க்க பிடிக்குமா? அதிலும் தனியாக பார்க்கும் அளவில் நீங்கள் தைரியசாலியா? என்ன தான் பேய் படம் ஒரு திகில் அனுபவத்தைக் கொடுத்தாலும், அதில் வரும் சில காட்சிகளால் மனதில் ஏற்படும் பயம் காரணமாக உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இல்லை தானே! ஆனால் அதுவே உண்மை.

நெதர்லாந்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பேய் படத்தை தனியாக பார்ப்பது ஆபத்தானது என்பது தெரிய வந்துள்ளது. அதுவும் பேய் படத்தைப் பார்த்தால், இரத்த உறைவு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

லைடன் பல்கலைகழகம், நெதர்லாந்து

சமீபத்தில் நெதர்லாந்தில் இருக்கும் லைடன் பல்கலைகழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 30 வயதிற்குட்பட்ட 25 பேரைக் கொண்டு, பேய் படத்திற்கும், இரத்த உறைதலுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

பேய் படம் மற்றும் சாதாரண படம்

ஆய்வில் 14 பேரை ஒரு குழுவாகவும், 10 பேரை ஒரு குழுவாகவும் பிரித்தனர். பின் ஒரு குழுவில் உள்ளோரை தனித்தனியாக முதலில் பேய் படம் பார்க்க வைத்து, பின் சாதாரண படத்தை பார்க்க வைத்தனர். அடுத்த குழுவில் உள்ளோரை தனித்தனியாக முதலில் சாதாரண படத்தையும், பின் பேய் படத்தையும் பார்க்க வைத்தனர்.

இரத்த பரிசோதனை

படத்தைப் பார்க்க வைக்கும் 15 நிமிடங்களுக்கு முன் மற்றும் படம் பார்த்து 15 நிமிடங்களுக்குப் பின் இரத்த மாதிரிகளை வாங்கி, அதனை சோதனை செய்தனர்.

சோதனை முடிவு

இந்த சோதனையில் பேய் படம் பார்த்தவர்களின் இரத்த மாதிரிகளில் இரத்த உறைவு இருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம் சாதாரண படத்தைப் பார்த்தவர்களின் இரத்த மாதிரிகள் சாதாரணமாக இருந்தது தெரிய வந்தது.

பயம்

இப்படி இரத்த உறைவு ஏற்படுவதற்கு அதிகப்படியான பயத்தினால், சாதாரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் திசுக்களால் உறையாமல், இரத்த உறைவு காரணி VIII-ன் அளவு தூண்டப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

குறிப்பு

எனவே குழந்தைகள், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள் போன்றோர் பேய் படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. என்ன நண்பர்களே! இனிமேல் நீங்க பேய் படத்தை தனியா பார்ப்பீங்க...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Watching Horror Movies Can Curdle Blood, Confirms New Study

Watching horror movies can indeed cause the blood to curdle, researchers at Leiden University have discovered.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter