For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளான் சாப்பிட்டால் தொப்பையை குறைக்கலாம் - ஆய்வு முடிவு

By Maha
|

தொப்பையால் கஷ்டப்படுபவர்களுக்கான ஓர் நற்செய்தி. அது என்னவெனில் சமீபத்தில் காளானை சாப்பிட்டால், குறிப்பாக அதன் திரவச்சாற்றினை குடித்தால், தொப்பையைக் குறைக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இந்த குறிப்பிட்ட சாற்றிற்கு உடல் பருமன் அதிகமாவதைத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியானது எலியின் மீது நடத்தப்பட்டு, அதனால் சாதகமான முடிவு வந்ததுள்ளதாம். சரி, இப்போது அந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைவான் பல்கலைகழக ஆராய்ச்சி

தைவான் பல்கலைகழக ஆராய்ச்சி

தைவானில் உள்ள சாங் கங் பல்கலைகழக ஆய்வாளர்கள் லிங்க்ழி என்னும் காளானைப் பரிசோதித்தனர். அப்பரிசோதனையில் காளானிற்கு குடலில் உள்ள ஆரோக்கியமற்ற கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் குடலில் இருக்கும் ஆரோக்கியமற்ற கிருமிகள் தான் தொப்பை வருவதற்கு காரணம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

எலி சோதனை

எலி சோதனை

இந்த ஆராய்ச்சிக்கு எலியைப் பயன்படுத்தினர். இந்த ஆராய்ச்சியில் எலிக்கு கொழுப்புமிக்க உணவுகளைக் கொடுத்து வந்ததோடு, காளானும் கொடுக்கப்பட்டது. அப்படி கொடுத்ததில், காளான் எலியின் குடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது தெரிய வந்ததோடு, எலியும் குண்டாகாமல் இருந்தது.

மற்ற பிரச்சனைகள்

மற்ற பிரச்சனைகள்

இந்த ஆராய்ச்சியில் காளானில் உள்ள சத்துக்களானது உடலில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளான இன்சுலின் பிரச்சனை, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், தூக்கமின்மை, டைப்-2 நீரிழிவு போன்றவற்றையும் குறைப்பதாக தெரிய வந்தது.

உடல் பருமன்

உடல் பருமன்

உலகில் சுமார் 500 மில்லியன் மக்கள் தொப்பையாலும், 1.4 பில்லியன் மக்கள் உடல் பருமனாலும் கஷ்டப்படுகின்றனர். நிச்சயம் அத்தகையவர்களுக்கு இச்செய்தி சந்தோஷமான ஒன்றாக இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், காளான் சாற்றினை குடிக்க முடியாவிட்டாலும், தங்களின் உணவில் காளானை அதிகம் சேர்த்தாலே போதும், எடை தானாக குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Want To Stop Obesity? Eat Mushrooms

According to new research, mushrooms particularly their liquid extract, can help fight obesity. Take a look...
Story first published: Friday, September 25, 2015, 15:13 [IST]
Desktop Bottom Promotion