For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயாகராவை வைத்து பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் புதியக் கண்டுப்பிடிப்பு!!!

|

வயாகரா என்றாலே வாலிப வயோதிக அன்பர்களுக்கானது என்று தான் இத்தனை நாள் நினைத்து வந்தோம். ஆனால், இது கொசுக்களால் மனிதர்களுக்கு இடையே பரவும் மலேரியா காய்ச்சலையும் தடுக்க உதவும் என்று பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயே ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

வயாகரா பற்றி நீங்கள் அறிந்திராத 7 விஷயங்கள்!

முன்பு, ஒரே ஒரு விஷயத்திற்காக ஆங்காங்கே பயந்து பயந்து வாங்கிக் கொண்டிருந்த வயாகரா இந்த கண்டுப்பிடிப்பினால், நோவால்ஜின், கிரோசின், போல ஆகிவிடுமோ என்று நம் நாட்டு அம்பிகள் பதறுகின்றனர்., ரெமோக்கள் பாய்கின்றனர்.

வயாகராவிற்கு இணையான சக்தி வாய்ந்த பத்து உணவுகள்!

ஆனால், ஆராய்ச்சியாளர்கள், விறைப்புத்தன்மையை அதிகரிக்கும் இந்த வயகாரா, மலேரியாவைக் கட்டுப்படுத்த உதவுவதை நினைத்துப் பெருமை அடைகின்றனர். ஏனெனில், சாதாரண கொசுவால் ஏற்படும் இந்த காய்ச்சல், பல ஏழை நாடுகளில் பரவலாக ஏற்படும் உயிர்கொல்லி நோயாக திகழ்ந்து வருகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு இரத்த அணுக்கள்

சிவப்பு இரத்த அணுக்கள்

கொசுவின் தாக்குதலால், வலுவிழந்து இருக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உடலில் இருந்து அகற்றவும், வடிகட்டி அதை நீக்கவும் இந்த மாத்திரை உதவுகிறதாம்.

வலிமை தருகிறது

வலிமை தருகிறது

மலேரயா தாக்கத்தினால் வலுக் குறைந்து போன சிவப்பு இரத்த அணுக்களுக்கு வலுக் கொடுக்க வயாகரா பயனளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிறந்த பயனளிக்கும்

சிறந்த பயனளிக்கும்

தற்போது அளிக்கப்படும் மலேரியாவிற்கான சிகிச்சைகள் முதிர்ச்சியற்றவை என்றும். வயாகரா (sildenafil [Viagra]) நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளை முழுமையாக அழிக்க உதவும் என்றும் கூறியிருக்கின்றனர்.

மாற்றம் தேவை

மாற்றம் தேவை

நேரடியாக வயாகராவை மலேரியா தாக்கம் உள்ளவர்களுக்கு கொடுப்பதில் பிரச்னை இருக்கின்றது. இது விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்யும் மருந்து என்பதால், சில மாற்றங்கள் கொண்டுவந்த பிறகு இதை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பக்க விளைவு

பக்க விளைவு

மலேரியா போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், வயாகராவை அவ்வாறு உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. எனவே, இம்மருந்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர்.

மரண எண்ணிக்கை

மரண எண்ணிக்கை

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 198 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை

ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை

இதற்கு முன்பு வரை இருந்த சிகிச்சை முறையில், 30% வரையிலான நோயாளிகளுக்கு மட்டும் தான் முழுமையான தீர்வளித்தது. ஆனால், இப்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறையானது முழுமையான தீர்வளிக்கக் கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.

மக்களின் பாரம் குறையும்

மக்களின் பாரம் குறையும்

உலக அளவில், மக்கள் அஞ்சும் நோயாக கருதப்பட்டு வந்த மலேரியா நோயினால் ஏற்பட்டு வந்த உயிரிழப்புகள் இனிக் குறையும் என்றும். இது குறித்து பயந்து வந்த மக்களின் பாரம் விலகும் என்றும், தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர். பிரைன் கிரீன்வூட் கூறியிருக்கிறார்.

லிட்டில் ப்ளூ பிள் (Little blue pill)

லிட்டில் ப்ளூ பிள் (Little blue pill)

உலகின் மிக பிரபலமான "லிட்டில் ப்ளூ பிள்" எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தான் இதைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Viagra Could Prevent Malaria Transmission By Recruiting Red Blood Cells

Do You Know Viagra Could Prevent Malaria Transmission By Recruiting Red Blood Cells? Read Here.
Desktop Bottom Promotion