For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் காலையில் ஒவ்வொருவரும் செய்யும் தவறுகள்!!!

By Maha
|

ஒரு நாள் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், காலை வேளையில் மேற்கொள்ளும் பழக்கங்கள் மிகவும் முக்கியமானவை. காலையில் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் செயல்களை மேற்கொண்டு வந்தால், நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

அதற்கு ஒவ்வொருவரும் காலையில் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, எவ்வித பதற்றமும் இல்லாமல், காலையில் பொறுமையாக அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டும். இல்லாவிட்டால், அன்றைய நாள் முழுவதும் அனைத்து செயல்களையும் பதற்றத்துடன் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

சரி, இப்போது காலையில் ஒவ்வொருவரும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து இனிமேல் அவற்றை காலையில் பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெட் காபி

பெட் காபி

காலையில் எழுந்ததும் பற்களை துலக்காமல் பெட் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் காபியை காலையில் குடிப்பதற்கு பதிலாக, க்ரீன் டீ குடிப்பது நல்லது.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

காலையில் யார் சிகரெட் பிடிப்பார்கள் என்று பலர் கேட்கலாம். ஆனால் சிகரெட் பிடிப்பவர்களுக்கு இப்பழக்கம் கட்டாயம் இருக்கும். இப்பழக்கம் உள்ளவர்கள் உடனே இதனை நிறுத்த வேண்டும். ஏனெனில் இது அன்றைய நாளை மோசமாக்குவதோடு, உடல் நலத்தை மிகவும் தீவிரமாக பாதிக்கும்.

கொழுப்புமிக்க உணவுகள்

கொழுப்புமிக்க உணவுகள்

காலை உணவின் போது இட்லி, தோசை, சப்பாதி அல்லது செரில் போன்றவைகளை எடுக்கலாம். ஆனால் கொழுப்புமிக்க மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

காலை உணவைத் தவிர்ப்பது

காலை உணவைத் தவிர்ப்பது

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று சிலர் காலை உணவையே தவிர்ப்பார்கள். அப்படி காலை உணவைத் தவிர்த்து அலுவலகத்திற்கு சென்றால் கூட, உங்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் காலை உணவைத் தவிர்த்தால், நாள் முழுவதும் மிகுந்த சோர்வை உணர்ந்து, அன்றைய நாளையே நீங்கள் வெறுத்துவிடுவீர்கள்.

குளிப்பதைத் தவிர்ப்பது

குளிப்பதைத் தவிர்ப்பது

சிலர் காலையில் தாமதமாக எழுவதால், குளிப்பதைத் தவிர்த்து, நல்ல நறுமணமிக்க பெர்ஃப்யூம்களை அடித்துக் கொண்டு செல்வார்கள். ஆனால் அப்படி குளிக்காமல் அலுவலகம் சென்றால், அன்றைய நாள் முழுவதும் கடுமையாக வியர்ப்பதோடு, உங்களால் வேலையில் முழு கவனத்தை செலுத்தவே முடியாது.

தாமதமாக எழுவது

தாமதமாக எழுவது

சிலர் இரவில் நீண்ட நேரம் டிவி பார்ப்பது, மொபைலில் நண்பர்களுடன் சாட் செய்வது, லேப்டாப்பில் வேலை பார்ப்பது என்று இருந்து, மறுநாள் காலையில் தாமதமாக எழுவார்கள். இப்படி தாமதமாக எழுவதால், அன்றைய நாள் முழுவதும் அனைத்துமே தாமதமாக ஒருவித பதற்றத்துடன் இருக்க வேண்டியிருக்கும். எனவே இரவில் வேகமாக தூங்கி, காலையில் வேகமாக எழ முயற்சி செய்யுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

பற்களை சரியாக சுத்தம் செய்யாதது

பற்களை சரியாக சுத்தம் செய்யாதது

சிலர் காலையில் வேகமாக கிளம்புகிறேன் என்ற பெயரில் சரியாக பற்களைத் துலக்கமாட்டார்கள். ஆனால் ஒருவர் குறைந்தது 3-4 நிமிடங்களாவது தங்களின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பற்களில் கறைகள் தங்கி, பற்களின் அழகு மட்டுமின்றி, ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

துவைக்காத உடைகள்

துவைக்காத உடைகள்

முக்கியமாக இந்த பாயிண்ட் ஆண்களுக்குப் பொருந்தும். குறிப்பாக பேச்சுலர்கள் தான் தங்களின் துவைத்த மற்றும் துவைக்காத ஆடைகளை ஒன்றாக வைத்துக் கொண்டு, பல நாட்களாக ஆடைகளைப் பயன்படுத்துவார்கள். இது இருப்பதிலேயே மிகவும் ஆரோக்கியமற்ற பழக்கம். இதனால் உங்களின் மீது துர்நாற்றம் வீசுவதோடு, உங்கள் சருமத்தில் எப்போதுமே பாக்டீரியாக்கள் இருந்தவாறு இருக்கும்.

காலைக் கடனை கழிக்காமல் இருப்பது

காலைக் கடனை கழிக்காமல் இருப்பது

சில மக்கள் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று காலைக்கடனை கழிக்காமல் அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இப்படி வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை அடக்கினால், அக்கழிவுகளில் உள்ள பாக்டீரியாக்கள் இரத்தத்தில் பரவ ஆரம்பித்து, பிற்காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unhealthy Things We Do Every Morning

Morning habits are important as how you start your day decides how you generally feel throughout the day.
Desktop Bottom Promotion