நீங்க எப்பவும் காரமா தான் சாப்பிடுவீங்களா? அப்ப உடனே இத படிங்க...

By:
Subscribe to Boldsky

சிலருக்கு உணவுகள் காரமாக இருந்தால் தான் பிடிக்கும். அதனால் உணவுகளில் மிளகாயை அதிகம் சேர்ப்பார்கள். அப்படி காரமான உணவை விரும்பி சாப்பிடுபவர்களின் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெரியுமா? ஆம், காரமான உணவுகளை சாப்பிடுவதால் உடலில் பல பிரச்சனைகள் நீங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் மிளகாயை சேர்த்து உட்கொண்டால், உடல் எடை விரைவில் குறைக்கலாம். இதுப்போன்று ஏராளமான நன்மைகள் காரமான உணவுகளை உட்கொள்வதால் கிடைக்கும். சரி, இப்போது அதிக காரத்தை விரும்பி உண்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எடை குறையும்

யார் ஒருவர் உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக் கொள்கிறாரோ, அவரது உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேராமல் இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், உணவில் மிளகாயை அதிகம் சேர்ப்பதால், அதில் உள்ள காப்சைசின் என்னும் பொருள் உடலின் வெப்பத்தை அதிகரித்து, அதிகப்படியான அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டு, அதனால் உடல் எடை குறையும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

புற்றுநோயைத் தடுக்கும்

மிளகாயில் உள்ள காப்சைசின், புற்றுநோய் செல்களை அழிப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த ஆராய்ச்சியில் மிளகாய் சேர்த்த உணவுகள் சளி, இருமல் பிரச்சனையில் இருந்தும் விடுவிப்பதாக கூறியுள்ளது.

கோபத்தைக் குறைக்கும்

காரமான உணவுகள் நல்ல மனநிலையை உணர வைக்கும் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, கோபத்தைக் குறைத்து, மனநிலையை அமைதியாக்கி மேம்படுத்தும்.

இரத்த அழுத்தம் குறையும்

மிளகாயை உணவில் சேர்ப்பதால், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மிளகாய் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

கொலஸ்ட்ரால் குறையும்

மிளகாயை உணவில் சேர்ப்பதன் மூலம், இரத்தத்தில் கொழுப்புக்களின் அளவு அதிகமாவதைத் தடுக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதய ஆரோக்கியம் மேம்படும்

மிளகாய் இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். அதிலும் இதனை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உடலில் கொழுப்புக்கள் குறைக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Top Six Hidden Benefits Of Spicy Foods

Here are top six hidden health benefits of spicy foods. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter