For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியத்திற்கு சிறந்த சில மதுபானங்கள் - அட, மெய்யாலுமே தாம்பா!!!

By John
|

மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு, உயிரை பறிக்கும் என்று தானே நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அட இது என்னப்பா புதுசா ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு சொல்றீங்க??? என்று ஆச்சரியமாக இருக்கிறதா. ஆம் எல்லாம் இந்த ஆராய்ச்சியாளர்களால் தான்.

அல்கஹோல் மற்றும் இரத்த சர்க்கரை பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

பொதுவாகவே, நமது உடலுக்கு அனைத்து வகையான சத்துகளும் தேவை. அதில், ஆல்கஹாலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலக் குறைவு ஏற்படும் போது நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளில் ஆல்கஹாலின் பங்கு சிறிதளவு இருக்கிகிறது என்பதை நீங்கள் முன்பே அறிந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

சரக்கு உடலுக்கு தான் தீங்கு, சருமத்திற்கு அல்ல!

அந்த வகையில் சில மது பானங்கள் உங்கள் உடல்நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இனி, அந்த மது பானங்கள் குறித்துப் பார்க்கலாம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வோட்கா சோடா

வோட்கா சோடா

ஹிப்ஹாப் கலைஞர்கள் இது உற்சாகம் அளிப்பதாக கூறுகின்றனர். மற்றும் ரஷ்யாவில், வோட்கா அவர்களது உடல்நலக் கோளாறுகளை போக்க உதவுவதாக நம்புகின்றனர். இது மட்டுமின்றி, உலகின் சில கலாச்சாரங்களில், தினமும் 30மில்லி வோட்கா பருகுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

பெல்லினி (Bellini)

பெல்லினி (Bellini)

பெல்லினி எனும் பானம், ஆரஞ்சு மற்றும் பீச் பழச்சாறுகளை வைத்து தயாரிக்கப்படுகிறது. இதில் நிறைய ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன. இது உங்கள் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் பானமாகும். இதில், வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன.

சிவப்பு ஒயின்

சிவப்பு ஒயின்

இத்தாலிய, பிரெஞ்சு மட்டுமின்றி இந்தியாவிலும் கூட தற்போது ஒயின் குடிப்பது சாதாரணம் ஆகிவிட்டது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் உடலை வலுபடுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும், எலும்புகளை உறுதியாக்கவும் உதவுகிறதாம். இது, பெண்களுக்கு உச்சமடைய உதவும் என்பது கொசுறு தகவல்.

வெள்ளை ஒயின்

வெள்ளை ஒயின்

சிவப்பு ஒயின் அளவு பிரபலமாக இல்லை எனிலும், வெள்ளை ஒய்னிலும் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இதில் இருக்கும் ஹைட்ராக்ஸிடைரோஸல், உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறதாம்.

கின்னஸ் பீர்

கின்னஸ் பீர்

பீர் குடித்தால் தோப்பைப் போடும் என்பது உலக நியதி. ஆனால், கின்னஸ் பீரில் கலோரிகள் மிகவும் குறைவு. சிவப்பு ஒயினில் இருக்கும் அதே அளவில் கின்னஸ் பீரிலும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், இரத்த கட்டிகளை அகற்றவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Five Healthiest Alcohol Drinks

Do you know about the top five healthiest alcohol drinks? read here.
Desktop Bottom Promotion