For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்...

By Maha
|

பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கையின் மீதே ஒரு ஆசை இருக்கும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தம் பிறப்பின் பயனாய் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும். அப்படி சாதித்தால் தான் இவ்வுலகில் பிறந்ததற்கே அர்த்தம் இருக்கும். அதைவிட்டு ஏனோதானோவென்று கண்ட கண்ட பழக்கங்களை பின்பற்றி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தால், நோய்வாய்ப்பட்டு நிம்மதியாக வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வாழ ஆசை இருந்தால், அன்றாடம் ஒருசில பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். அந்த பழக்கங்களை கடைப்பிடித்து, மனதில் ஒருசிலவற்றை நினைவில் கொண்டு வாழ்ந்து வந்தால், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக நோயின் தாக்கம் இல்லாமல் வாழலாம். இங்கு வாழ்நாள் முழுவதும் நோயில்லாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரிசோதனை

பரிசோதனை

ஒவ்வொருவரும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனையை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சனை உடலில் வந்தாலும், மருத்துவரை அணுக தவறக் கூடாது. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நோய்களையும் விரைவில் கண்டறிந்து போக்கலாம்.

தூக்கம்

தூக்கம்

ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இன்றைய காலத்தில் அதிகப்படியான வேலைப்பளுவால் பலர் தூக்கத்தை இழக்கின்றனர். இதனால் உடல் மட்டுமின்றி, மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஆகவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் இதயம் மற்றும் நுரையீரல் போன்றவை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும். இதற்கு காரணம் உடற்பயிற்சியினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டம் வேகமாக செல்லும்.

ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமான உணவுகள்

பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை உணவில் அதிக அளவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் சரியாக கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் குடிக்கவும்

தூக்கம் போலவே தண்ணீரும் மிகவும் முக்கியமான ஒன்று. உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் தண்ணீர் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடல் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

எந்த ஒரு பிரச்சனையானாலும், அதனை நினைத்து மனதிற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கக்கூடாது. பிரச்சனை வந்தால், அதனை சமாளிக்க மனதில் தைரியத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தத்திற்கு உள்ளானால், இதயம் முதல் செரிமான பிரச்சனைகள் வரை அனைத்தும் வந்து, அதுவே தேவையில்லாத டென்சனை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Lead A Healthy Lifestyle

Here are some simple ways which we can ensure a healthy lifestyle.
Story first published: Wednesday, March 4, 2015, 18:08 [IST]
Desktop Bottom Promotion