கோக் குடிப்பதை நிறுத்தியதால் 50 கிலோ எடை குறைத்த பெண்மணி!!!

Subscribe to Boldsky

சில வாரங்களுக்கு முன்பு கோக் பானம் குடித்த ஒரு மணி நேரத்தில் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ற இன்ஃபோகிராபிக் ஒன்று உலகம் முழுதும் வைரலாக பரவியது. இது, பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. வெறும் கோக் பானத்தோடு நிற்காமல் இது, டயட் கோக், பெப்ஸி, ரெட் புல் என பல முன்னணி சோடா குளிர் பானங்களையும் வீதியில் இழுத்துவிட்டது.

கோக் குடித்த ஒரு மணிநேரத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற ஓர் கோக் பான ரசிகை, தனது வாழ்நாளில் இனிமேல் கோக் குடிக்கவே கூடாது என முடிவு செய்தார். இந்த முடிவு அவருக்கு 50 கிலோ வரை எடையைக் குறைக்க உதவியது. இப்போது அந்த இன்ஃபோகிராபிக் விளம்பரம் போலவே இந்த பெண்மணியும் இணையங்களில் வைரலாக பரவி வருகிறார்...

எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் பிட்சாவினால் கல்லீரல் புற்றுநோய் - பாடி பில்டர் கவலைக்கிடம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சாரா டர்னர்

சாரா டர்னர், இவர் 27 வயது பெண். கோக் என்றால் இவருக்கு அளவற்ற பிரியம். குறைந்தது ஒருநாளுக்கு 4 லிட்டர் கோக் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

இன்ஃபோகிராபிக் கண்டு அதிர்ச்சியடைந்த சாரா

கோக் குடித்த ஒருமணி நேரத்தில் உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை உணர்த்தி வெளியான இன்ஃபோகிராபிக் கண்டு அதிர்ச்சியடைந்த சாரா கோக் குடிப்பதை கைவிட்டாராம்.

111 கிலோவில் இருந்து 57 கிலோ எடை குறைவு

கோக் குடிப்பதை நிறுத்தியதால் உடல்நலம் கெடாமல் இருக்கும் என நினைத்த சாராவிற்கு இன்னுமொரு ஆச்சரியமும் காத்திருந்தது. 111 கிலோ எடைக் கொண்டிருந்த சாரா, இப்போது ஏறத்தாழ 50 கிலோ எடை குறைந்து வெறும் 57 கிலோ எடை தான் உள்ளார்.

உடல் சோர்வு நீங்கியது

பிரிட்டிஷை சேர்ந்த இளம் தாயான சாராவிற்கு எப்போதுமே உடல் சோர்வு இருந்து வந்ததாம். உடல் சக்தி மிகவும் குறைவாக இருந்ததை உணர்ந்து வந்தவர். இப்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிராராம்.

மனதில் இருந்த குறை நீங்கியது

ஸ்லிம்மாக இருக்கும் தாய்மார்களை கண்டு மனம் வருந்தி வந்த சாரா, இப்போது அந்த கவலையே இல்லாமல் இருக்கிறார். இப்போதெல்லாம் குழந்தைகளோடு பார்க் சென்று, அவர்களோடு சேர்ந்து ஓடி விளையாடுகிறேன் என கூறுகிறார் சாரா.

கோக் பானத்தால் விருது வாங்கிய சாரா

ஸ்லிம்மிங் வேர்ல்ட் விருதுகள் - "Greatest Loser 2015" என்ற விருதையும் வென்றுள்ளார் சாரா டர்னர். இதற்கெல்லாம் இவர் கோக் பானத்திற்கு தான் நன்றி கூற வேண்டும். சோடா பானம் குடிப்பதை நிறுத்தியதால் 50 கிலோ எடை வரை குறையும் என்று இவர் நினைக்கவே இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy : NYPost

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

This Woman Gave Up Coca-Cola And Lost Over 50 Kilos

Do you know? This Woman Gave Up Coca-Cola And Lost Over 50 Kilos!
Story first published: Friday, September 11, 2015, 15:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter