பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

By: Babu
Subscribe to Boldsky

தினமும் 1 முறைக்கு 2 முறை குளித்தும், நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டும், உள்ளாடையை தினமும் மாற்றியும், பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா? இதனால் உங்களால் உடலுறவில் நன்கு செயல்பட முடியவில்லையா? அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா?

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

அப்படியெனில் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இக்கட்டுரையில் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொரு பெண்ணும் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சரி, இப்போது பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பெண்களே! பிறப்புறுப்பை துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காண்டம்

சில பெண்களுக்கு காண்டம் செய்வதற்கு பயன்படுத்தும் குறிப்பிட்ட மெட்டீரியல் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அந்த அலர்ஜியால் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்கள் அழிவதோடு, கடுமையான துர்நாற்றமும் வீசும்.

அதிகமாக கழுவுவது

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்கிறேன் என்று அளவுக்கு அதிகமாக கழுவினாலும், அது அவ்விடத்தில் பாதுகாப்பை வழங்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, தொற்றுக்களை ஏற்படுத்தி, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டால், வியர்வை அதிகமாக வெளியேறி, அவ்விடத்தில் தேங்கி, அதனால் கடுமையான துர்நாற்றம் வீசும்.

இறுக்கமான ஆடை

இறுக்கமான உள்ளாடை அல்லது பேண்ட் அணிந்தால், அவ்விடத்தில் வியர்வை அதிகரித்து, அதனால் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசும்.

டேம்பான் (Tampon)

டேம்பான் என்பது மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பினுள் வைக்கும் ஒரு உறிபஞ்சுகளாகும். இப்பஞ்சுகள் பிறப்புறுப்பில் சிறிது இருந்தாலும், அவை அவ்விடத்தில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தி, அதனால் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே டேம்பான் பயன்படுத்துவதாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இரவில் உள்ளாடை

பகல், இரவு முழுவதும் வியர்வையை உறிஞ்சிய உள்ளாடையினால் அப்பகுதியை மூடி வைத்தால், துர்நாற்றம் தான் வீசும். எனவே இரவில் படுக்கும் போது, உள்ளாடையின்றி காற்றோட்டமாக படுத்தால், இதனைத் தவிர்க்கலாம்.

நறுமணமிக்க சோப்பு

பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறது என்று, பலரும் நறுமணமிக்க சோப்பு அல்லது பாடி வாஷ் கொண்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்வார்கள். ஆனால் அவற்றைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினால், அதில் உள்ள கெமிக்கல்கள் வறட்சியை அதிகரித்து, தொற்றுக்களை உருவாக்கி, துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

துணி துவைக்கும் சோப்பு

உள்ளாடையை நல்ல நறுமணமிக்க துணி துவைக்கும் சோப்பு கொண்டு துவைத்தால், அதனால் பிறப்புறுப்பில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்பட்டு, அதனால் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த வாசனைக் கொண்ட சோப்பு கொண்டு உள்ளாடையைத் துவைக்க வேண்டாம். அப்படியே துவைத்தாலும், நீரில் பலமுறை நன்கு அலசுங்கள்.

அந்தரங்க முடி

அந்தரங்கத்தில் முடி அளவுக்கு அதிகமாக இருந்தால், அதனால் அப்பகுதியில் அந்தரங்க முடி பேன் ஏற்பட்டு, அதனால் நோய்த்தொற்றுகள் வர ஆரம்பித்து, துர்நாற்றம் வீசும். எனவே அவ்வப்போது அந்தரங்க முடியை ட்ரிம் அல்லது ஷேவ் செய்ய வேண்டும்.

காட்டன் உள்ளாடை

மிகவும் சிறந்த உள்ளாடை எனில் அது காட்டன் மெட்ரியல் மூலம் தயாரிக்கப்பட்ட உள்ளாடை தான். சிந்தடிக் மெட்டீரியல் உள்ளாடையானது அந்தரங்க பகுதியில் காற்றோட்டத்தைத் தடுத்து, அதனால் வியர்வையை அதிகரித்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

 

 

காரமான உணவுகள்

காரமான உணவுகளை அளவுக்க அதிகமாக உட்கொண்டால், வெள்ளைப்படுதல் அதிகரிப்பதோடு, பிறப்புறுப்பு துர்நாற்றமும் அதிகரிக்கும்.

உடலுறவு

ஆய்வு ஒன்றில் உடலுறவு கொண்ட பின் துர்நாற்றம் வீசும் என்று தெரிய வந்துள்ளது. அதுவும் எப்படியெனில் உடலுறவு கொண்ட பின் ஆணின் விந்தணுவானது, பெண்ணின் பிறப்புறுப்பினுள் செல்லும் போது, அப்பகுதியில் உள்ள இயற்கையான pH அளவை பாதித்து, அதனால் துர்நாற்றத்தை ஏற்படுத்துமாம்.

கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் குழந்தைக்கு செல்வதால், பிறப்புறுப்பில் உள்ள pH அளவு குறைந்து, அதனால் துர்நாற்றம் ஏற்படும்.

 

 

மற்ற உணவுகள்

பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Things That Can Cause Vaginal Odor

There are some causes of vaginal odor that professionals have pinpointed.
Story first published: Wednesday, July 1, 2015, 15:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter