For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரிமான மண்டலத்திற்கு சிக்கலாக அமையும் பத்து பழக்கங்கள்!!

|

பிரச்சனை இல்லாத வாழ்க்கை என எதுவுமே இல்லை. ஏழைக்கு பணம் இல்லை என்ற பிரச்சனை, செல்வந்தனுக்கு நிம்மதி இல்லை என்ற பிரச்சனை. ஆகமொத்தம் பிரச்சனை இன்றி இங்கு யாருமே இல்லை. என்ன தான் பிரச்சனை இருந்தாலும் காலை எழும் போது அனைவரும் நிம்மதியாக போக வேண்டிய இடம் ஒன்றிருக்கிறது.

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்!!!

ஆம், கழிவறை... பலருக்கு இதுவே பெரும் பிரச்சனை. காலையில் எழுந்ததும் இந்த கடனை கழிக்க சிலர் பலவிதத்தில் முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். டீ, பழம், புகை என இந்த பட்டியல் நீள்கிறது. ஆனால், உங்களது சில பழக்கவழக்கத்தினால் தான் பெரும்பாலும் இந்த பிரச்சனையே ஏற்படுகிறது...

காலையில் காபி குடித்தால் தான் மலம் வருகிறதா? அதற்கான காரணம் இவை தான்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்து குறைபாடு

நார்ச்சத்து குறைபாடு

நீங்கள் உட்கொள்ளும் உணவு அல்லது உங்களது அன்றாட உணவு பழக்கத்தில் நார்ச்சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில் செரிமானத்தில் சிக்கல் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

நள்ளிரவில் சாப்பிடும் பழக்கம்

நள்ளிரவில் சாப்பிடும் பழக்கம்

சிலர் நள்ளிரவில் உணவு உட்கொள்ளும் பழக்கம் வைத்திருப்பார்கள். இவ்வாறு செய்வதால் நெஞ்செரிச்சல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. குறைந்தது நீங்கள் உறங்கும் இரண்டு மணிநேரத்திற்கு முன்னரே இரவு உணவை சாப்பிட்டு விட வேண்டும்.

வேகமாக சாப்பிடுவது

வேகமாக சாப்பிடுவது

சிலர் உணவை வேகமாக சாப்பிடும் போது, காற்றையும் சேர்த்து விழுங்குகிறார்கள். உணவோடு சேர்ந்து காற்றும் நிறைய கலக்கும் போது செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது.

கடினமாக சாப்பிடுவது

கடினமாக சாப்பிடுவது

சிலர் ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடுவார்கள். கேட்டால், நான் காலையில் கொஞ்சம் தான் சாப்பிட்டேன் அதனால் தான் என்று விளக்கம் கூறுவார்கள். அப்படி அதிகமாக பசித்தால், கொஞ்சம் கொஞ்சமாக நேர இடைவேளை எடுத்து சாப்பிடவும். இவ்வாறு சாப்பிடுவதால் செரிமானத்தில் சிக்கல் கண்டிப்பாக ஏற்படும்.

சோடா

சோடா

தினமும் சோடா பானம் பருகுவது அல்லது, அதிகமாக சோடா பானம் பருகுவது உங்களது செரிமானத்திற்கு பெரிய சிக்கலாக அமைகிறது. மேலும் இது உங்களது உடல் எடையை அதிகரிக்கவும் செய்கிறது.

குளிர் பானங்கள்

குளிர் பானங்கள்

டீ, காபி, சாப்ட் ட்ரிங்க்ஸ் என நீங்கள் உணவு உட்கொள்ளும் எந்த ஒரு பானத்தையும் சேர்த்து உட்கொள்வது தவறான அணுகுமுறை. இது கண்டிப்பாக செரிமானத்திற்கு சிக்கலாக அமையும்.

சுவிங் கம்

சுவிங் கம்

சுவிங் கம் மெல்லும் போது, காற்று உங்கள் வாயின் மூலமாக உட்செல்கிறது . இதனால் வாயுத்தொல்லை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் செரிமானத்திற்கு சிக்கலாக இருக்கிறது.

அதிகமான மது

அதிகமான மது

அல்சர், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மது பழக்கம். இது செரிமானத்தை பெருமளவில் பாதிக்கிறது.

மலத்தை அடக்குதல்

மலத்தை அடக்குதல்

மலத்தை எக்காரணம் கொண்டும் அடக்க கூடாது. உங்கள் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை இது வெகுவாக பாதிக்கும்.

புகைப்பது

புகைப்பது

சிலர் புகைத்தால் தான் காலை கடனை கழிக்க முடியும் என்று கூறுவதுண்டு. ஆனால், அதிகமாக புகைப்பது தான் பெரும் சிக்கலே. இதனால் உங்கள் செரிமான செயல்திறனில் குறைபாடு ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Habits Bad For Your Digestive System

Do you know about the ten habits that bad for your digestive system? read here.
Desktop Bottom Promotion