ஒவ்வொரு ஆணும் தன் ஆரோக்கியம் குறித்து கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்!!!

By:
Subscribe to Boldsky

பெண்களை விட ஆண்கள் தான் அதிக நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதற்கு அவர்களது வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். மேலும் இன்றைய காலத்தில் பணிபுரியும் இடத்தில் உள்ள அதிகப்படியான வேலைப்பளுவினால், ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகள்!!!

ஒருமுறை ஒருவர் மன அழுத்தத்திற்கு உள்ளானால், அவர்கள் நாளடைவில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இருப்பினும் இவர்களுள் ஆண்கள் தான் அதிக மன அழுத்தத்தினால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பதற்றம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக 30 வயதை எட்டிய ஆண்கள் தான் இப்பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் அன்றாடம் செய்யும் தவறுகள்!!!

இவற்றைத் தவிர்க்க ஆண்கள் தங்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தினால், நிச்சயம் வாழ்நாளின் அளவை அதிகரிப்பதோடு, நோயின்றி சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும். சரி, இப்போது ஒவ்வொரு ஆணும் ஆரோக்கியாக வாழ கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நேரத்திற்கு வீட்டிற்கு செல்லவும்

அலுவலகத்தில் வேலை இருக்கத் தான் செய்யும். அதற்காக அலுவலகத்தில் நீண்ட நேரத்தை செலவழித்தால், அதனால் வேலை குறைகிறதோ இல்லையோ, உங்களின் ஆரோக்கியம் மெதுவாக பாதிக்கப்பட்டுக் கொண்டே வரும். அலுவலத்தில் நீண்ட நேரம் வேலை செய்தால், அதுவே பதற்றம் மற்றும் மன இறுக்கத்திற்கு வழிவகுத்து, ஆரோக்கியத்தையே பாதிக்கும்.

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

தனிமையில் இருப்பதை தவிர்த்து, குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவழித்தால், வாழ்நாளின் அளவை அதிகரிக்கலாம். ஏனெனில் தனிமையில் இருப்பது என்பது இதய நோயால் மிகுந்த கஷ்டத்தை சந்திக்க வழிவகுக்கும்.

மீன் சாப்பிடவும்

மீனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. எனவே சிக்கன், மட்டனை அதிகம் சாப்பிடுவதை விட, மீனை தவறாமல் வாரம் 2 முறை உணவில் சேர்த்து வாருங்கள்.

சூரியனுடன் விளையாடுங்கள்

தினமும் சூரிய வெளிச்சத்தில் 15-20 நிமிடங்கள் இருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின் டி சத்து கிடைக்கும். தினமும் உடலுக்கு போதிய அளவில் வைட்டமின் டி சத்து கிடைத்தால், நீரிழிவு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சாதாரண இருமல் கூட உடலை அணுகவிடாமல் தடுக்கும். இருப்பினும் அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்கள் சருமத்தில் படுமாயின், அது சரும புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும். எனவே கவனமாக இருங்கள்.

அதிக அளவு டிவி

வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், பலரும் டிவியைத் தான் போடுவார்கள். முதலில் அவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் டிவி அதிகம் பார்ப்பவருக்கு, டிவி பார்க்காதவர்களை விட அதிக அளவு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே டிவி பார்ப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

அளவாக குடிக்கவும்

மது அருந்துவதாக இருந்தால், அளவாக குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே இதய நோய்க்கு வழிவகுத்துவிடும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே இதய பிரச்சனை இருந்தாலோ அல்லது பரம்பரையில் யாருக்கேனும் இதய பிரச்சனை ஏற்பட்டிருந்தாலோ, மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.

 

 

இரத்த சர்க்கரை அளவை கவனியுங்கள்

உலகில் பெரும்பாலானோர் முன்-நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பலருக்கும் இது தெரிவதில்லை. எனவே இந்த முன்-நீரிழிவைத் தவிர்க்க தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொண்டு, உணவில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

PSA பரிசோதனை

ஆண்கள் தனது புரோஸ்டேட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு 30 வயதிற்கு மேல் வருடத்திற்கு ஒருமுறை PSA பரிசோதனை செய்து கொண்டால், புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறியலாம். ஏனெனில் புரோஸ்டேட்டில் கட்டிகள் வளர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஆண்கள் இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கருவுறுதல்

தற்போது இளம் வயதினரால் கூட குழந்தைப் பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு காரணம் விந்தணுவை அழிக்கும் காரணிகளான மிகவும் சூடான நீரில் குளிப்பது, லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மாட்டிறைச்சி கூடாது

மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடும் ஆண்கள் பலர் உள்ளனர். ஆனால் மாட்டிறைச்சியை ஆண்கள் அதிக அளவில் உட்கொண்டு வந்தால், அதனால் இதய நோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். எனவே மாட்டிறைச்சி உட்கொள்வதைத் தவிர்த்து, மீன் சாப்பிடுவதை அதிகரிக்க வேண்டும்.

புகைப்பிடிப்பது

அனைவருக்குமே இது ஆரோக்கியமற்ற பழக்கம் என்று தெரியும். இருப்பினும் டென்சன் குறைய பல ஆண்கள் இப்பழக்கத்தை மேற்கொள்கிறார்கள். அப்படி மேற்கொண்டு நுரையீரல் பிரச்சனைகள், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிற்கு உள்ளாகி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

மூட்டு வலியில் கவனம் தேவை

மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆரம்பத்திலேயே மூட்டு வலியை கவனிக்காமல் விட்டால், அதனால் ஆர்த்ரிடிஸ் ஏற்படக்கூடும். எனவே மூட்டு வலி இருந்தால், உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

அளவான காபி

ஆய்வுகளில், ஆண்களுள் யார் காபியை அளவாக பருகி, அன்றாடம் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைந்து, வாழ்நாள் அதிகமாவது தெரிய வந்துள்ளது.

மஞ்சள்

ஆண்கள் தங்களின் உணவில் மஞ்சள் சேர்ப்பதன் மூலம், உள்காயங்கள் குறைவதோடு, மன இறுக்கம் மற்றும் அல்சைமர் என்னும் ஞாபக மறதி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

மத்தியதரைக்கடல் உணவுப்பழக்கம்

மத்தியதரைக்கடல் உணவுப்பழக்கமான, காய்கறிகள், நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள், தானியங்கள் மற்றும் மீன் போன்றவற்றை ஆண்கள் உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதி தடுக்கப்பட்டு, முதுமையிலும் நினைவுகளை தக்க வைக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

காலனோஸ்கோபி

பெண்களை விட ஆண்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது. அதிலும் 50 வயதிற்கு மேல் தான் ஆண்களுக்கு இந்நோய் பெரும்பாலும் தாக்கும். எனவே 50 வயதிற்கு மேல் ஆண்கள் காலனோஸ்கோபி என்னும் பரிசோதனையை செய்து கொள்வது, வாழ்நாளைப் பாதுகாக்க உதவும்.

 

 

பீர் குடிக்கவும்

ஜாந்தோஹூமல் என்னும் ப்ளேவோனாய்டு பீரில் உள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதாக, மிருகங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதய நோய்

பெண்களை விட ஆண்கள் தான் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவெனில், வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம் என்பது தான். எனவே நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை மேற்கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ரால்

ஆண்கள் தான் பெண்களை விட மாரடைப்பினால் உயிரிழக்கின்றனர். எனவே கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களான ஜங்க் உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

நல்ல வாழ்க்கைத்துணை

நல்ல வாழ்க்கைத்துணை அமைந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படுமாம். மேலும் ஆய்வு ஒன்றில், திருமணமாகாமல் அல்லது சந்தோஷமான வாழ்க்கையை வாழாமல் இருக்கும் ஆண்களை விட, திருமணமாகி துணையுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழும் ஆண்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைவது தெரிய வந்துள்ளது.

விறைப்புத்தன்மை குறைபாடு

விறைப்புத்தன்மை குறைபாடானது அதிகப்படியான மன அழுத்தத்தினால் ஏற்படும் ஒன்று. இதற்கு மன அழுத்தத்தைக் குறைத்தால் இப்பிரச்சனை குணமாகும். ஆனால் இந்த விறைப்புத்தன்மை குறைபாடு இதய நோயின் தீவிரத்தையும் குறிக்கும். எனவே உங்களுக்கு நீண்ட நாட்களாக இப்பிரச்சனை இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சோடாவை தவிர்க்கவும்

நண்பர்களுடன் வெளியே செல்லும் போது, கூல்டிரிங்க்ஸ் என்னும் டின் சோடா வாங்கிக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோடாவில் உள்ள ஒருவகையான சர்க்கரை, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, நாளடைவில் இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

30 நிமிட உடற்பயிற்சி

தினமும் 30 நிமிடம் சைக்கிளிங், ஜாக்கிங், ரன்னிங், வாக்கிங் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், அதனால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆண்களே! உடனே களத்தில் குதியுங்கள்.

ஏரோபிக் உடற்பயிற்சி

வாரத்திற்கு குறைந்தது மூன்று மணிநேரம் ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கண்டு வந்தால், மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு மேம்பட்டு, முதுமையிலும் நினைவுகள் சேகரிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Stay-Healthy Tips for Men

Here are some of the health tips for men. Take a look...
Story first published: Tuesday, July 7, 2015, 12:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter