For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல்நலப் பிரச்சனைகளா? மருந்துகள் தேவையில்லை, இந்த காய்கறி, பழங்களே போதும்!!!

By John
|

நமது அன்றாட உணவுப் பழக்கங்கள் ஏகபோகமாக மாறிவிட்டது. நமது உடலின் அணைத்து பாகங்களும் நன்கு செயல்பட வேண்டும் எனில், நாம் அனைத்து ஊட்டச்சத்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு பழமும் நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கு நல்ல பயனளிக்க கூடியதாக இருக்கிறது.

தினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மற்றும் எந்த பழம் சாப்பிடுவதால், எந்த உடல் பாகத்திற்கு நன்மை விளைகிறது என தெரிந்துக் கொள்வதால், எதிர்காலத்தில் நமக்கே உடல்நிலை குறைவு ஏற்பட்டால் கூட அதற்கு எந்த பழங்கள் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையலாம் என நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். இதனால் உங்களது அன்றாட உடல்நலமும் நல்ல மேன்மை காணும்....

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எலுமிச்சை

எலுமிச்சை

நரம்பு மண்டலத்திற்கு நன்மை விளைவிக்க கூடியது எலுமிச்சை. இது, தூக்கமின்மை, தலைவலி, வலி நிவாரணியாக பயன் தரவல்லது.

பப்பாளி

பப்பாளி

பப்பாளி பழம் நமது சுரப்பி மண்டலத்திற்கு உகந்தது. இது, புளித்த ஏப்பம், வெண் தோல், வெள்ளை போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடியது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

இரத்த ஓட்டத்தை சீராக்கும் குணமுடையது நெல்லிக்காய். இது, கால் வீக்கம், தலை முடி உதிர்தல் மற்றும் பல வகை கட்டிகளிடம் இருந்து தீர்வு தரும் குணமுடையது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

ஜீரண மண்டலத்திற்கு நன்மை விளைவிக்கும் திறன் கொண்டது அன்னாசிப்பழம். இது, பசியின்மை, காய்ச்சல், புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

இஞ்சி

இஞ்சி

எலும்புத்தசை வலிமைக்கு நல்ல பயன்தரும் இஞ்சி. சோர்வு, கெண்டைக்கால் வலி, இளப்பு நோய் எனப்படும் ஆஸ்துமா போன்றவைக்கு நல்ல பலன் தரவல்லது இஞ்சி.

கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது கருணைக் கிழங்கு. இது, மூலம், மூட்டுவலி, குடற்புண் போன்றவைக்கு தீர்வளிக்க கூடியது.

பூசணிக்காய்

பூசணிக்காய்

சிறுநீர் உபாதைகளுக்கு நல்லது தீர்வு தரவல்லது பூசணி. இது, மலச்சிக்கல், தலைபாரம், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றுக்கு நல்ல பலனளிக்கும்.

அரசாணிக்காய்

அரசாணிக்காய்

நிணநீர் பிரச்சனைகளுக்கு பயன் தரவல்லது அரசாணிக்காய். ஒவ்வாமை, வாந்தி, பேதி, பித்தப்பை கல் போன்றவைக்கு அரசாணிக் காய் சாப்பிடுவதால் நல்ல தீர்வு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Some Useful Benefits Of Fruits For Everyday Health

Everyone should know about this benefits of fruits, which gives us awesome benefits for our everyday health.
Desktop Bottom Promotion