For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிடுக்கான போன்களை பயன்படுத்துபவர்களுக்கான மிடுக்கான யோகாக்கள்!!!

By Art Of Living
|

உங்களுடைய கைபேசி பயன்பாடு கழுத்து வலியை அல்லது தலைவலி அல்லது தோள் வலியை ஏற்படுத்துகின்றதா? அதிகத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில் நாம் வாழ்கின்றோம். கைப்பேசிகள் விவாதத்திற்கே இடமின்றி, கைப்பேசிகள் உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன.

கல்வி முதல், உடல் நலம் வரை, உறவுகள் முதல் தொழில் வரை, கைப்பேசிகள் உலகையே அடிப்படையில் மாற்றி வருகின்றது. ஆனால் பரவலான அதன் பயன்பாட்டினால், வாழ்க்கை முறையில் பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற சில தீங்குகளையும் கொண்டு வந்து விட்டது.

உதாரணமாக, இந்தக் கட்டுரையை நீங்கள் உங்கள் கை பேசியில் படித்துக் கொண்டிருந்தால், உங்கள் கைகள் உங்கள் பக்கவாட்டில் வளைந்து கொண்டிருக்கின்றன, முதுகு கூன் போட்டு விட்டது, கழுத்து முன்புறமாக வளைந்து கொண்டிருக்கின்றது, அல்லவா?

இந்தத் தோற்ற நிலை உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ வலியை ஏற்படுத்தலாம். சிகிச்சையாளர்கள் அழைக்கும் "உரை கழுத்து" என்னும் உடல்நிலைக் கோளாறுக்கு நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உரை கழுத்து

உரை கழுத்து

"உரை கழுத்து" என்பது வாழ்கை முறை சார்ந்த கழுத்து மற்றும் முதுகில் ஒரு வலியை உருவாக்கும் நிலையாகும். கூன் போட்டு முதுகை வளைத்திருக்கும் நிலையில் அதிக நேரம் செலவழிப்பதால் இது ஏற்படுகின்றது. கைப்பேசிகள், மடிக்கணினி, இ-புத்தகங்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றது.

கைப்பேசியால் சிரமமடையும் முதுகெலும்பு

கைப்பேசியால் சிரமமடையும் முதுகெலும்பு

சாதாரணமாக சமநிலையில் ஒரு மனிதத் தலையின் எடை 4.5 கிலோ கிராம் ஆகும். நீங்கள் தலையை முன்னால் சாய்க்கும் போது ஒவ்வொரு அங்குலத்திற்கும் முதுகெலும்பின் அழுத்தம் கூடுகின்றது. உங்களுடைய மிடுக்கான கைபேசியை உங்கள் மடியில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் கழுத்து, 10 முதல் 14 கிலோ வரையில் எடையைத் தாங்குகின்றது. இத்தகைய அதிகப் படியான அழுத்தம், உங்கள் முதுகெலும்பிற்கு சிரமத்தை ஏற்படுத்தி, அதன் சீரமைப்பைக் குலைக்கின்றது.

கைப்பேசியின் தாக்கத்தில் இருந்து விடுபட உதவும் யோகாக்கள்

கைப்பேசியின் தாக்கத்தில் இருந்து விடுபட உதவும் யோகாக்கள்

கைபேசிகளை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய அசாதரணமான அழுத்தம் மற்றும் முதுகெலும்புப் பிரச்சினைகள் இவற்றிலிருந்து காக்க வலுவான நெகிழ்வான முதுகும், கழுத்தும் தேவையானவையாகும். இங்கு தரப்பட்டிருக்கும் யோகப் பயிற்சிகள் உங்களது முதுகையும் கழுத்துத் தசைப் பகுதிகளையும் தளர்த்தி, வலுவாக்கும். இவற்றை சீரான முறையில் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களிடம் பேசி, குறிப்பெழுதி மகிழும் போது குறுக்கிடும் எந்த விதமான வலி, தசைப் பிடிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடுங்கள்!

காதுகளை இழுத்து உருவி விடுதல்

காதுகளை இழுத்து உருவி விடுதல்

மேலிருந்து கீழாக உங்கள் காதினை அழுத்துங்கள். இரு முறை இழுங்கள். பின்னர், வலமிருந்து இடமாக அடுத்து இடமிருந்து வலமாகச் சுழற்றுங்கள். இது அந்தப் பகுதியிலுள்ள அழுத்தத்தை விடுவிக்கும்.

கைகளை நீட்டுதல்

கைகளை நீட்டுதல்

உள்ளங்கைகள் வானத்தை நோக்கியிருக்கும்படி, உங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்துங்கள்.பின்னர் வானத்தை நோக்கி கைகளை நீட்டி இழுங்கள். இதைத் தொடர்ந்து, பக்கவாட்டில் உங்கள் கைகளை நீட்டி விரல்களை நீட்டி மடக்குங்கள். கைகளிலும் தோள்களிலும் தோன்றிய அழுத்தத்திற்கு விடை கொடுங்கள்.

தோள்கள் சுழற்சி

தோள்கள் சுழற்சி

உங்கள் இரு கைகளையும் பக்க வாட்டில் நீட்டி, கட்டை விரலால் சுண்டு விரலின் அடிப்பகுதியைத் தொடுங்கள். அசையாத அதே நிலையில் தோள்களை ஐந்து முறை வலமிருந்து இடமாகவும் ஐந்து முறை இடமிருந்து வலமாகவும் சுழற்றுங்கள்.

உள்ளங்கை அழுத்துதல்

உள்ளங்கை அழுத்துதல்

உள்ளங்கைகளின் அடிப்பகுதியை உங்கள் மார்புக்கு நேராகக் கொண்டு வாருங்கள். ஒன்றோடொன்று அழுத்தமாக வைத்துக் கொண்டு தோள்கள் அசைவின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளை இரு முறை அழுத்தி அழுத்தி விட்டு விடுங்கள். பின்னர் இதையே திரும்பவும் செய்யுங்கள்.

மணிக்கட்டு எட்டு

மணிக்கட்டு எட்டு

மார்புக்கு நேரே இரு கைகளையும் கொண்டு வந்து விரல்களை ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ளுங்கள். மார்புக்கெதிரேயே உள்ளங்கைகள் வைத்திருக்கப்பட வேண்டும், உங்களுடைய மணிக்கட்டுக்களையும் தோள்களையும் மட்டும், எட்டு போன்ற வடிவில் அலையலையாக அசையுங்கள்.

கட்டைவிரல்களை அழுத்துதல்

கட்டைவிரல்களை அழுத்துதல்

உங்களது மார்புகெதிராக கட்டை விரல்களைக் கொண்டு வந்து, இரு திசைகளிலும் சில தடவைகள் சுழற்றுங்கள். விரல்களை நன்றாக அழுத்திப் பிடித்து பின்னர் விட்டு விடுங்கள். இரு முறை இவ்வாறு செய்யுங்கள்.

கருவியின் இடத்தை மாற்றுங்கள்

கருவியின் இடத்தை மாற்றுங்கள்

உங்களுடைய மடியில் கருவியினை வைத்து உபயோகிப்பதற்கு பதில், சற்றே உயரத்தில் கண்ணுக்கு நேர்கோட்டில் அமையுமாறு அதன் இடத்தை மாற்றுங்கள்.

 இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்

இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்

இக்கருவிகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதானால், அவ்வப் போது சற்று இடை நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இட நிலையினையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

குறிப்பு

குறிப்பு

இந்தப் பயிற்சிகளைச் செய்து எவ்விதமான உடல்கோளாறுகளுக்கும் ஆளாகாமல் மிடுக்கான கைபேசி யோகியாக இருங்கள்! இக்கட்டுரை கமலேஷ் பர்வால் என்னும் ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரின் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டது.

www.artofliving.org/yoga

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

www.artofliving.org

English summary

Smart Yoga For Smartphone Users

Here are some smart yoga for smartphone users. Take a look...
Desktop Bottom Promotion