For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டியவைகள்!!!

|

"வேகம்" என்ற சொல் கூட நமது இன்றைய வாழ்வியல் முறையோடு ஒப்பிடும் போது கொஞ்சம் மெதுவாக தான் தோன்றுகிறது. இந்த மின்னல் வேக வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம் என்று திரும்பி பார்த்தால் அப்படி ஒரு வெங்காயமும் இருக்காது. ஆனால், தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம், என எல்.கே.ஜி.யில் இருந்து பி.எச்.டி வரையிலான அனைத்து உடல்நல பிரச்சனைகளும் நம் உடலை அண்டியிருக்கும்.

நீங்க காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்...

வினை விதைத்தால் வினையும், திணை விதைத்தால் தினையும் தான் விளையும். உங்களது காலை எப்படி விடிகிறதோ அவ்வாறு தான் உங்களது மாலையும் அஸ்தமனம் ஆகும். காலை பொழுதே கவலைகளோடும், புலம்பல்களோடும் தொடங்கினால் பின் இரவு அரக்கத்தனமாக தான் இருக்கும். எனவே, உங்கள் காலை பொழுதை இனிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் தொடங்க கற்றுக் கொள்ளுங்கள்.

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட சாப்பிட வேண்டிய காலை உணவுகள்!!!

"அது எப்படிப்பா ஆரோக்கியமா ஆரம்பிக்கிறது" என குழப்பமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய நாள்

புதிய நாள்

ஒவ்வொரு நாளையும் புதிதாக துவங்குங்கள். பழையதை நினைத்து நினைத்து இன்றைய புதிய நாளை வீணாய் கொன்றுவிடாதீர்கள். எனவே, முதலில் நேற்றைய வெற்றியை நினைத்து காலரை தூக்குவதும், தோல்வியை நினைத்து கண் கலங்குவதும் நிறுத்துங்கள். இவை இரண்டுமே உங்களது முன்னேற்றத்தை தடுக்கும் முட்டுக்கட்டைகள் ஆகும்!

தியானம்

தியானம்

தியானம் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும். உங்கள் மனம் ஒருநிலை ஆகும் போது, நீங்கள் செய்யும் எந்த ஒரு வேலைகளிலும் தெளிவான முடிவு எடுக்க முடியும். இது வெற்றியை பரிசளிக்கும்.

படிக்கும் பழக்கம்

படிக்கும் பழக்கம்

காலை வேளைகளில் புத்தகம் அல்லது நாளிதழ்களை படிப்பது நல்ல பழக்கம் ஆகும். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.

நிதானம் தேவை

நிதானம் தேவை

விடிந்தும் விடியாது உங்களது நாளை துரிதமாக நகர்த்தாமல் கொஞ்சம் பொறுமையுடன் ஆரம்பியிங்கள். பொறுமையும், நிதானமும் மிக முக்கியம். இவை இரண்டும் இல்லாதவர்கள் தான் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை என்ற இருவருடன் நட்பு பாராட்டுவார்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தியானம் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுவது போல, உடற்பயிற்சி உங்கள் உடல்நிலையை மேம்படுத்த உதவும். மனதும், உடலும் மேம்படும் போது உங்கள் வாழ்க்கை மேம்படும்.

இன்றைய வேலைகள்

இன்றைய வேலைகள்

இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து வேலை பார்ப்பது நல்லது. எந்த முன்னேற்பாடும் இன்றி நாளை துவக்குவது தான் பெரும்பாலான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மற்றும் இதன் கூடுதல் வினையாய் உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Things Happy People Do Every Morning

Do you wan to start your day with more happiness? Just follow these six things, it will amaze you surely.
Story first published: Wednesday, April 1, 2015, 18:24 [IST]
Desktop Bottom Promotion