For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் அதிகமாக உயிரிழப்பதற்கு இவை தான் காரணமாக இருக்கிறதாம்!!!

|

பிறப்பு எப்படி இயற்கையோ அதேப்போல இறப்பும் இயற்கையாக தான் அமைய வேண்டும். இன்றைய நாட்களில் எதையும் வேகமாக அடைய வேண்டும் என்ற நமது எண்ணம் நமது மரணத்தையும் அதிவேகமாக அடைய செய்கிறது. நூறு வருஷம் என்பது ஐம்பது ஆகிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டின் அலுப்பு நம்மை டி20க்கு தள்ளியது போல தான் நாம் இன்று நமது ஆயுளையும் குறைத்துக் கொண்டோம் சுவாரஸ்யத்தின் காரணத்திற்காக.

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!!!

நமது சில தீய பழக்கவழக்கங்கள் தான் நமது இயற்கை மரணத்தை செயற்கையாக்குகிறது. பெரும்பாலும் இதற்கு காரணமாக இருப்பது மதுவும், புகையும் என்று தெரிந்திருந்தும் நாம் கைவிடுவதாய் இல்லை. அரசும் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதாய் இல்லை. ஆரோக்கியத்தில் அரசியல் பேசி பயனில்லை. நமது சுய கட்டுப்பாட்டின்மைக்கு மற்றவர்களை குறை கூறுவதும் தவறு தான்.

ஆண்களுக்கு ஏற்படும் 5 முதன்மையான ஆரோக்கிய பிரச்சனைகளும்... எதிர்கொள்ளும் வழிமுறைகளும்...

ஆண் என்பவன் தனி மனிதன் அல்ல, ஒரு குடும்பத்தின் ஆணிவேர் அவன் இல்லையெனில் ஒரு குடும்பம் இந்த சமூகத்தில் நிலையாக வாழ்வது கடினம் தான். பெண்கள் படித்தாலும், வேலைக்கு சென்றாலும் சமூக பிரச்சனைகளை சமாளிக்கும் அளவு உடல் வலு இல்லாதவர்கள். ஓர் ஆணாகிய உங்களது உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த அல்ப காரணங்களினால் உங்கள் உயிர் மண்ணில் புதைய வேண்டுமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்கள்

இதய நோய்கள்

நான்கில் ஒரு ஆணின் மரணத்திற்கு காரணமாய் இருப்பது இதய நோய்கள் தான். மாரடைப்பு, இதய குழாயில் பிரச்சனை, இதயத்தின் வலு குறைவு போன்றவை புகை மற்றும் மதுவின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. மது அருந்துவதற்கு நிகராய் யாரும் உணவை உட்கொள்வதில்லை. அதெற்கென மூக்கு முட்ட குடித்துவிட்டு வயிறு முட்ட சாப்பிட்டால் எமனை சீக்கிரம் எட்டிவிடலாம். அதிகம் நீர் பருகுங்கள் இது இதயத்தில் இரத்த கட்டிகளோ, அடைப்போ ஏற்படுவதை 50% சதவீதம் குறைக்கிறதாம்.

புற்றுநோய்

புற்றுநோய்

உலக அளவில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏறத்தாழ 24% ஆண்கள் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கு நமது இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. ஆயினும் பெரும்பாலும் மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் தான் அதிகமான உயிரழப்பிற்கு காரணமாக அமைகிறது. இந்த பழக்கங்களை உடனடியாக கைவிடுவதும் எதிர்வினை பாதிப்புகளை உருவாக்கும். மெல்ல மெல்ல இந்த பழக்கங்களை கைவிடுங்கள்.

விபத்துகள்

விபத்துகள்

நமது நாட்டில் சென்ற பத்து ஆண்டுகளை விட நடப்பு ஆண்டுகளில் பல மடங்கு விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் முக்கியமாக அதீத திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் ஓட்டும் இளைஞர்களின் மரண எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதை சரிசெய்ய உங்கள் சுய கட்டுப்பாடு தான் முக்கியம்.

நாள்பட்ட நோய்கள்

நாள்பட்ட நோய்கள்

பெருகி வரும் சுற்றுசூழல் மாசு மற்றும் காற்றில் அதிகமாகி வரும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், சுவாச நோய்கள், எம்பிஸிமா மற்றும் நீண்டகால மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளை உண்டாக்குகிறது. பலரும் அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் இருப்பதே தெரிவதில்லை. வாகன புகை மற்றும் தொழிற்சாலை, மாசு போன்றவை இதற்கு காரணமாக இருக்கிறது.

பக்கவாதம்

பக்கவாதம்

பக்கவாதம் மூலமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களே அதிகமாக இருகின்றனர். அதிலும் 45 வயதுக்கு குறைவானவர்கள் தான் அதிகமாக உயிரிழக்கின்றனர். பொட்டாசியம் குறைபாடு தான் இதற்கு காரணமாக இருக்கிறது. பசும்பால் குடிப்பது பக்கவாதம் பிரச்சனை வராமல் தடுக்கும். பாக்கெட் பால்களில் பசும்பாலில் இருக்கும் அளவு பொட்டாசியம் சத்து இருப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு

நீரிழிவு

இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்று. இது உங்கள் ஆயுள் காலத்தை குறைக்கிறது. உடல் பருமன் காரணத்தால் ஏற்படும் டைப் 2 நீரிழிவு நோய் தான் அதிகமாக ஆண்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நீங்கள் அதிகமாக சாப்பிடும் மைதா உணவுகள் மற்றும் இன்ச்டனட் உணவுகள் ஆகும். இதை தவிர்த்து இயற்கை உணவுகளை உட்கொள்வது இந்த நீரிழிவு நோய் தாக்கம் ஏற்படாது தடுக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Most Common Ways That Men Die And How To Avoid Them

Do you know about the six common ways that men die and how to avoid them? read here.
Story first published: Thursday, April 2, 2015, 11:21 [IST]
Desktop Bottom Promotion