முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா???

Subscribe to Boldsky

புற்றுநோய், பால்வினை நோய்களை விட கொடியது இந்த முதுகு வலியும், இடுப்பு வலியும். இந்த காலத்து இளைஞர்களை வாட்டி எடுக்கும் வலி என்று கூட கூறலாம். முன்பெல்லாம், நமது வீடுகளில் பாட்டியும், தாத்தாவும் ஓயாமல் கூறும் ஓர் பிரச்சனையாக இருந்து வந்த முதுகு வலி. இன்று இளசுகளும், குழந்தைகளும், தினம் தினம் கூறும் பிரச்சனையாக மாறி வருகிறது.

பெரும்பாலும் உட்கார்ந்தே வேலை செய்வது ஒருபுறம் இதற்கான காரணமாக இருந்தாலும் கூட. மறுபுறம் நீங்கள் ஃபேஷன் என்று கருதி செய்யும் சில செயல்பாடுகளும் காரணமாக இருக்கிறது. அந்த ஃபேஷன் காரணங்கள் என்னென்ன என்று தான் நாம் இனி காண போகிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இறுக்கமான உடைகள்

பெண்கள் இடையோடு இறுக்கமாக அணியும் உடைகள் தான் அவர்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு காரணமாக இருக்கிறது. இது, சீரான இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.

ஸ்கின்னி ஜீன்ஸ்

இன்றைய இளசுகள் மிகவும் ஃபேஷனாக கருதும் உடை என்றால் அது ஸ்கின்னி ஜீன்ஸாக தான் இருக்க முடியும். இது, தொடை, கால்கள், இடுப்பு போன்ற பகுதிகளை இறுக்கமாக பிடிக்கும் வகையில் இருக்கிறது. இதில் பர்ஸ், மொபைல் போன்றவற்றை இறுக்கமாக திணித்து வைத்திருப்பார்கள். இவை அனைத்தும் இரத்த ஓட்டத்தை தசை செய்வது மட்டுமின்றி, தசைகளிலும் வலி ஏற்பட காரணமாகிறது. இதன் பலனாக முதுகு வழி, இடுப்பு வழி போன்றவை ஏற்படுகின்றன.

அதிக எடையுள்ள கைப்பைகள்

ஒரே பக்கத்தில் அதிக நேரம் அதிக எடையுள்ள கைப்பைகளை பயன்படுத்துவதும் பெண்களுக்கு முதுகுவலி ஏற்பட காரணமாக இருக்கிறது.

ஹீல்ஸ்

காலம் காலமாக பெண்களை தவிர்க்க சொல்லும் ஓர் ஃபேஷன் உபகரணம் என்றால் அது ஹீல்ஸ் தான். இதனால், இடுப்பு, முதுகு பகுதிகளில் வலி ஏற்படுவது மட்டுமின்றி, பிரசவ காலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.

நெக்லஸ்

ஃபேஷன் என்ற பெயரில், கல், இரும்பு போன்ற பொருட்களால் செய்யப்பட்ட எடை அதிகமுள்ள நெக்லஸ் அணிவதாலும் முதுகு மற்றும் கழுத்து வழிகள் ஏற்படும்.

ஒரு பக்கமாக கூந்தலை படரவிட்டது போல் இருப்பது

சில பெண்கள் தங்களது கூந்தலை ஒரு பக்கமாக படரவிட்டபடி இருப்பார்கள். நாள் முழுதும் இவ்வாறு இருப்பது கழுத்து வலியை ஏற்படுத்தும். நாள்பட இது முதுகுவலி ஏற்பட காரணமாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Six Fashion Trends Causing Back Pain

Do you know about the six fashion trends that causing back pain? read here.
Story first published: Friday, July 24, 2015, 15:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter